Thursday, September 19, 2013

சுவாமி விவேகானந்தர்

நான் கடவுளிடம் சக்தி கேட்டபொழுது ....!
அவர் தந்தது கடினமான தருணங்களை(நேர்கொள்ள).............!

நான் கடவுளிடம் அறிவும் வலிமையும் கேட்டபொழுது.....!
அவர் தந்தது வாழ்க்கையின் புதிர்களை (தீர்வு காண)......!...

நான் கடவுளிடம் மகிழ்ச்சியைக் கேட்டபொழுது
அவர் காட்டியது சில சோகமான மனிதர்களை.....!

நான் கடவுளிடம் செல்வம் கேட்டபொழுது
அவர் காட்டியது எப்படி உழைப்பதென்று........!

நான் கடவுளிடம் கருணையைக் கேட்டபொழுது
அவர் கொடுத்தது உழைப்பதற்கு ஓர் வாய்ப்பு.....!

நான் கடவுளிடம் அமைதியை கேட்டபொழுது
அவர் காட்டியது எப்படி பிறருக்கு உதவுவதென்று...............!

மொத்தத்தில்

நான் கேட்டது எதுவுமே அவர் தரவில்லை.....!
ஆனால் அவர் கொடுத்தது அனைத்துமே எனக்கு வேண்டியது

No comments:

Post a Comment