எதையும் செய்யாமல் தன்னுடைய பிரச்சனைகளைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு மனிதன் இருந்தான்.
ஆசை
கடினமாக உழைப்பதற்குரிய முயற்சியை ஒருவர் எப்போது உத்வேகப்படுத்துகிறார்? ஒரே ஒரு வார்த்தையில் இதற்கு பதிலைச் சொல்லிவிடலாம் – “ஆசை”.
நாயை பற்றிய ஒரு கதை. ஒரு நாய் தன்னால் மிகவும் வேகமாக ஓட முடியும் என்று எப்போது பார்த்தாலும் பெருமை பேசிக் கொண்டிருந்தது. ஒரு நாள் முயலை துரத்திக் கொண்டு ஓடிய அந்த நாயால் முயலைப் பிடிக்க முடியவில்லை. மற்ற நாய்கள் அதைப்பார்த்து கேலி செய்தன. ஆனால் அந்த நாய் இவ்வாறு சொல்லியது…..
“ஒரு விஷயத்தை நீங்கள் மறந்து விட்டீர்கள். முயல் தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடியது. ஆனால் நான் வேடிக்கைக்காகத்தான் அதை விரட்டிக் கொண்டு ஓடினேன்”. முயலைப் பிடிப்பது எனக்கு ஒரு முக்கியமான விஷயமாக தோன்றவில்லை.
ஆனால் முயலைப் பொறுத்தவரையில் இது வாழ்வா! சாவா!! என்றதொரு போராட்டம். நாயை விட கடுமையாக முயற்சித்தது. வாழ்க்கை அதற்கு மிகவும் முக்கியமான விஷயம். ஒரே வார்த்தையில் மிகவும் சுருக்கமாகச் சொல்லிவிடலாம் வாழ வேண்டும் என்றதொரு “ஆசை”.
மிகச் சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவரான வில்லியம் ஜேம்ஸ் இதனை கீழ்கண்டவாறு கூறுகிறார். “விளைவைப் பற்றி நீங்கள் போதுமான அக்கறை காட்டினால் அநேகமாக நிச்சயமாக நீங்கள் அதைப் பெற்று விடுவீர்கள். நல்லவராக இருக்க விரும்பினால் நல்லவராக இருப்பீர்கள். நீங்கள் அடைய வேண்டிய விஷயங்களை உண்மையாகவே அடைய ஆசைப்பட வேண்டும் என்பது மட்டும் தான் முக்கியம்”.
“ஒரு விஷயம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் நீங்கள் செய்கின்ற முயற்சியின் உத்வேகமும் இருக்கும்”.
நீங்கள் விரும்புவதை அடைவதற்கு ஒரு இரகசியம் இருக்கிறது:
நீங்கள் போதுமான அக்கறைகாட்ட வேண்டும்
மெய்யாகவே விரும்ப வேண்டும்
ஆசை இருக்க வேண்டும். உங்கள் ஆழ்மனதில் இந்த ஆசை கொழுந்துவிட்டு எரிய வேண்டும் உங்கள் எண்ணங்களின் மீதும் செயல்களின் மீதும் அதற்குப் பெரிய பாதிப்பு இருக்க வேண்டும்மேலும் அதை அடைந்தே தீர வேண்டும் என்பது உங்கள் நெஞ்சத்தில் நீங்காத இடம் பெற வேண்டும்அந்த அளவுக்கு அது உங்களுக்கு உங்களது வாழ்க்கையில் முக்கியமானதாக இருக்க வேண்டும்.
“அத்தனைக்கும் ஆசைப்படு – ரஜனீஷ்(ஓஷோ)”
கடின உழைப்பு
எதையும் செய்யாமல் தன்னுடைய பிரச்சனைகளைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு மனிதன் இருந்தான். அவன் அதிகமாகக் கவலைப்பட்ட போது அவனுடைய அதைரியமும் அதிகமாயிற்று. முடிவில் தற்கொலை செய்து கொள்ளத் தீர்மானித்தான்.
தன்னுடைய இந்த முடிவு தன்னுடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தெரியக்கூடாது என்று அவன் விரும்பினான். கட்டடத்தைச் சுற்றி சுற்றி ஓடி இயற்கையான மாரடைப்பை உண்டாக்கி மரணம் அடைய வேண்டும் என்று எண்ணினான்.
ஆகவே ஓட ஆரம்பித்தான். ஓடிக் கொண்டே இருந்தான். அதிகமாக ஓட ஓட அவனுடைய களைப்பும் அதிகமாயிற்று. களைப்பு மிகுதியாகவே களைப்பைத் தவிர வேறு எதையும் அவனால் உணர முடியிவில்லை. படுக்கைக்குச் சென்று ஓய்வு எடுக்க வேண்டும் என்று மட்டும்தான் அவனால் எண்ண முடிந்தது. படுக்கையில் படுத்து உறங்கிப் போனான். பன்னிரண்டு மணி நேரம் கனவுகளே இல்லாத ஆழ்ந்த உறக்கத்தில் அவன் கழித்தான். எழுந்த போது புத்துணர்ச்சியுடன் இருந்தான். எந்தப் பிரச்சனையும் சந்திக்க முடியும் என்கிற ஆர்வம் தன்னுள் தோன்றி இருப்பதையும் உணர்ந்தான்.
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் பாடல் வரிகளில் ஒன்று
“வேலையற்ற வீணர்களின் மூலையற்ற வார்த்தைகளை வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே”!!!
சுதந்திரம்
உலக நாடுகளில் விடுதலைப் போர் நடத்திய எல்லாத் தலைவர்களும் கத்திஇ துப்பாக்கிஇ பீரங்கிஇ கப்பல் விமானம் என்பதை நம்பிப் போராடினார்கள். குஜராத்தில் இருந்து புறப்பட்ட அந்த ஒற்றை மனிதர் மட்டும் எந்த ஆயுதமும் இல்லாமல் போர்க்களத்தில் புகுந்தார். “இந்த நாடு எங்களுடையது. உம்முடையதுஅல்ல…” என்ற ஒற்றை உண்மையை பிரிட்டிஷார் முன் வைத்துப் போராடினார். அந்த சத்தியத்தின் முன் எல்லா ஆயுதங்களும் கூர்மழுங்கிப் போயின. யார் அவர்? – சுதந்திரப் போராட்ட தியாகி அண்ணல் காந்தியடிகள்.
“நிராயுதபாணியில் நின்று போராடும் ஒற்றை மனிதனின் போராட்டத்தை வலிமை வாய்ந்த ஆயுதங்கள் வைத்திருக்கும் பிரிட்டிஷ் ஆட்சிக்காரர்களால் ஏன் நசுக்க முடியவில்லை?” என்று எதிர்கட்சிகள் பாய்ந்த போது சர்ச்சில் சொன்ன பதில் ஆழமானது. “அந்த மனிதன் கத்தியைய் எடுத்தால் நான் துப்பாக்கியை எடுப்பேன். துப்பாக்கியைத் தூக்கினால் நான் பீரங்கியால் நசுக்கியிருப்பேன். பீரங்கி எடுத்துப் போராடினால் நான் குண்டு மழை பொழிந்து அழித்திருப்பேன். அவர் சத்தியத்தை அல்லவா கையில் எடுத்துக் கொண்டு போராடுகிறார். சத்தியத்தை எதிர்க்கும் ஆயுதம் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்பதை நண்பருக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்” என்றார் சர்ச்சில்.
எதிரியையும் அன்பால் அஹிம்சையால் சத்தியத்தால் பணியவைத்தார். இந்தியா சுதந்திரம் அடைந்தது. உலகம் தொடங்கிய நாள் முதல் இன்றுவரை உலகத்தைப் பாதித்த நூறு போர் என்ற பட்டியலில் எழுதினால் அதில் மகாத்மா காந்தியும் ஒருவர். உலக வரலாறு அவரை ஒருபோதும் ஒதுக்காது.
இதற்கு எடுத்துக்காட்டாக அவர் வாழ்வில் நடந்த மற்றுமொரு உதாரணம் ஒரு நாள் காந்தி தனது கிராமத்தில் பிரார்தனை செய்து கொண்டிருக்கும் பொழுது ஒரு முஸ்லீம் மனிதர் காந்தியின் தொண்டையை பிடித்தார். பிடித்த உடனேயே காந்தி குலைந்துபோய் தளதளர்த்து கீழே விழுந்தார். கீழே விழுகின்ற அந்த தருணத்தில் தனது மெல்லிய குரலில் குர்ஆனில் இருந்து சில வார்த்தைகளை கூறினார். அந்த வார்த்தைகளை கேட்டவுடனேயே அந்த முஸ்லீம் மனிதர் இவ்வாறு கூறினார். “மன்னிக்கவும். தங்களை பாதுகாப்பதற்காகவே இவ்வாறு செய்தேன்”. தங்களுக்கு எந்த வகையில் உதவி செய்ய வேண்டும்? என்று வினவினார். அதற்கு காந்தி இவ்வாறு பதில் கூறினார்.
“ஒன்றே ஒன்றை மட்டும் எனக்காகச் செய் நீ என்னிடம் என்ன செய்ய முயற்சித்தாயோ அதை யரிடமும் சொல்லாதே.
இல்லையென்றால் இதுவே இந்து-முஸ்லீம் மதக் கலவரத்திற்கு காரணமாக அமையும்”.
“என்னை மறந்துவிடு! உன்னை மன்னித்துவிடு!!”
ஊனம் தடையில்லை
நமது உடலில் இருக்கின்ற குறைகள் நமது சாதனைகளுக்கு முட்டுக்கட்டைகள் கிடையாது. சாதிக்கத் துடிக்கின்ற ஒவ்வொருவருக்கும் இந்த ஊனமே ஒரு தூண்டுகோலாக அமைந்துள்ளன. உதாரணமாகஇ இந்த உலகில் ஏதாவது ஒரு குறையுடன் பிறந்து தங்களின் சாதனைகளுக்கு என்றும் ‘சாவில்லை’ என்று நிலைநாட்டியவர்கள் ஏராளம். உதாரணமாக
சாண்டோ எனபவர் பலகீனமான நோயாளியாகத்தான் வாழ்க்கையைத் தொடங்கினார். சாண்டோ எவரிடமிருந்தும் அனுதாபத்தை எதிர்பார்க்கவில்லை. அவர் விரும்பியது பலம்! மன உறுதியுடன் தேகப் பயிற்சி செய்து உடல் வளர்ச்சியில் கவனம் செலுத்தினார். அவர் காலத்தில் ‘மிகவும் பலசாலி’ என்ற பெயரையும் பெற்றார்.
உடல் ஊனமுற்ற பலகீனமான உடலை உடைய ஜார்ஜ் ஜோவெட் என்கிற சிறுவன் தன்னுடைய நிலையை எண்ணி ஒரு போதும் வருந்தவில்லை. மற்றவர்கள் தனக்காக வருத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கவும் இல்லை. தன்னுடைய மனதையும் உடலையும் மேலும் மேலும் வளப்படுத்திக் கொண்டான். என்ன நடந்தது? அடுத்து பத்து ஆண்டுகளில் ‘செயலுக்கு ஏற்ற விளைவு’ என்ற இயற்கைவிதி செயல்பட்டது. உலகத்தின் ‘மிகச்சிறந்த பலசாலி’ என்கிற பெயரைப் பெற்றார்.ஆனெட் கெல்லர்மேன் – உடல் ஊனமுற்ற நோயாளிப் பெண். முழுஉடலை அவள் விரும்பினாள். பயிற்சி சிகிச்சை ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு மன உறுதியுடன் முழுமையான உடலை அவள் ஏற்படுத்திக் கொண்டாள். உலகத்தில் உள்ள முழுமையான உடலைப் பெற்ற ஒருத்தியாக தேர்வு செய்யப்பட்டாள். நீரில் ‘டைவ்’ செய்கின்ற உலகச் சாம்பியன் பட்டத்தையும் அவள் வென்றாள்.பீதோவன் சாகாவரம் பெற்ற ராகங்களை செவிடாக இருந்த நிலையில் தான் உருவாக்கினார்.கவிஞர் மில்டன் – ‘சொர்க்கம் இழுக்கப்படல்’ என்கிற காவியத்தை பார்வையற்ற நிலையில் தான் எழுதி முடித்தார்.
ஃபிராங்க்ளின் ரூஸ் வெஸ்ட் – இளம்பிள்ளை வாதத்தால் கால் ஊனமுற்ற நிலையிலும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தார்.
ராபர்ட் லூயி ஸ் ஸ்டீபென்சன் – ஒரு மணி நேரம் கூட இருமலில் இருந்தும் நெஞ்சு வலியில் இருந்தும் விடுபட்டது இல்லை. அந்த நிலையிலும் ‘புதையல் தீவு’ போன்ற அருமையான கதைகளை எழுதி படைத்தார்.
எடிசன் தன்னுடைய பரிசோதனைகளில் காட்டியதைப் போல நாமும் தொடர்ந்து முயற்சியில் உறுதியினைக் காட்டுவோம். பல தோல்விகளுக்குப் பிறகுதான் சரியானது என்ற தீர்வைக் கண்டுபிடிக்க முடிகிறது.
இவர்கள் யாவரும் குறைபாடுகள் உடையவர்கள் அல்ல. தங்களின் குறைபாடுகளை ஈடுசெய்ய மிக உயர்ந்த கோட்ப்பாடுகளை உருவாக்கிக் கொண்டார்கள். அதை தங்களின் வாழ்க்கையில் பிரதிபலித்திடவும் செய்தனர்.
“முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை”.
வாழ்க்கை
“வாழ்க்கை என்கிற கடிகாரத்திற்கு ஒரு முறைதான் சாவி கொடுக்கப்படுகிறது. அந்த கடிகாரத்தின் முட்கள் சீக்கரமே நின்று போகுமோ அல்லது அதிக காலம் கழித்து நின்று போகுமோ என்பதை எவருமே அறிய முடியாது”. இப்போது இருக்கின்ற காலம் தான் உங்களுக்குச் சொந்தமானது.
மன உறுதியோடு வாழ்க்கை நடத்துங்கள்!
பிறரிடம் அன்பு செலுத்துங்கள்!!
உழைத்துக் கொண்டிருங்கள்!!!
நாளைய தினத்திடம் நம்பிக்கை வைக்காதீர்கள்.
ஒரு வேளை நாளைக்குக் கடிகாரம் நின்று போய்விடலாம்.நாம் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பது நம்முடைய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விடியம். ஆனால் வாழ்க்கையின் மற்ற பரிமாணங்களை உங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும். அதனுடைய ஆழம் அகலம் மற்றும் உயரம் ஆகியவை உங்களுடைய கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவையே. இந்த பரிமாணங்களுக்குள் வாழ்க்கை என்கிற அதிசயத்தை நீங்கள் வாழ முடியும். திரும்பவும் நிகழ முடியாத அதிசயம் இது.
பிரச்சனை
“பிரச்சனையில் இருந்து தப்பித்து போவதற்கு எவ்வளவு சக்தி தேவைப்படுகிறதோ அதே அளவு சக்திதான் பிரச்சனையை புரிந்துகொண்டு வெற்றி கொள்ளுவதற்கும் தேவையாக இருக்கிறது”. பிரச்சனையில் இருந்து தப்பித்துப்போக முயன்றால் அது உங்களை தொடர்ந்துவந்து கொண்டே இருக்கும். பிரச்சனையை புரிந்து கொண்டு நீங்கள் தீர்க்க முயலும் போதுஇ அது உங்களை விட்டு முற்றிலுமாக நீங்கி விடும்.
பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்குமாதலால் அவற்றை அவ்வப்போதே தீர்த்து விடுவது அவசியம். இல்லாவிட்டால் அவை ஒன்று சேர்ந்து சுமையாகி உங்களை அழுத்தத் தொடங்கும். தீர்க்க முடியாத பிரச்சனைகளால்தான் உலகத்தில் பல ஆண்களும் பெண்களும் மன அளவிலும் உடல் அளவிலும் சோர்வுற்று முறிந்து போகிறார்கள்.
எந்த அளவிற்கு ஒருவன் பிரச்சனையி்ன் யதார்த்தத்தை நேர்முகமாகச் சந்திக்கிறானோ அந்த அளவுக்கு அவன் பலசாலியாக வெளிப்படுகிறான். அதே சமயம் எந்த அளவுக்கு பிரச்சனையில் இருந்து தப்பி ஓட முயல்கிறானோ அந்த அளவுக்கு வாழ்க்கையினையும் சிக்கலாக்கிக் கொள்கிறான். பிரச்சனையை நேரடியாகச் சந்தித்து அதன் மையப்பகுதியில் நுழைந்து அதன் தன்மையினைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுகின்ற போது நீங்கள் பலம் பெறுவதோடு அதைச் சமாளிக்கின்ற திறமையினையும் பெற்று விடுகிறீர்கள்.
மதியுண்டு கற்புடைய மனைவியுண்டு
வலிமையுண்டு வெற்றிதரும் வருந்திடாதே!எதிர்த்து வரும் துன்பத்தை மதிக்கும் தன்மைஎய்திவிட்டால் காண்பதெல்லாம் இன்பமடா!!
“பிரச்சனைகள் இல்லாமல் இருப்பதே மகிழ்ச்சி என்று ஆகிவிடாது. கஷ்டங்களை வெற்றி கொள்ளுவதிலும் பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் தான் மகிழ்ச்சியே இருக்கிறது”.
No comments:
Post a Comment