சந்தேசம் குறித்து உலக அறிஞர்கள் சொன்ன உன்னதக் கருத்துக்கள்…
01. ஒழுங்கான வாழ்க்கை என்பது ஏறும் ஏணி போன்றது. கீழிருந்ததைவிட பாதித்து தூரம் ஏறிய பின்னர் காட்சி மேலாகத் தெரிகிறது. மேலும் மேலும் ஏறினால் தொடுவானம் விரிவடைந்து காட்சி உன்னதமாக விரிவடைகிறது.
02. எதிர்காலத்தில் நேரம் கிடைத்தால் சந்தோசமாக இருக்கலாம் என்று எண்ணியபடி பலர் தங்கள் வாழ்வை எதிர்பார்ப்பிலேயே வைத்திருக்கிறார்கள். ஆனால் நிகழ்காலம் மற்ற காலங்களைவிட மேலானது என்பதை பலரது அறிவு கண்டு பிடிக்காமலே இருக்கிறது.
03. சந்தோசமாக இருப்பவனை கூர்ந்து அவதானியுங்கள் அவன் ஒரு நாளின் 24 மணி நேரமும் எதையோ செய்து கொண்டிருப்பான். தொலைந்துவிட்ட சட்டைப் பட்டனை தேடுவதுபோல சந்தோசத்தை எங்கோ தேடிக்கொண்டிருக்கமாட்டான்.
04. சந்தோசத்தின் ஊற்றை தனக்குள்ளே அதிகம் காணக்காண மனிதன் அதிக இன்பமடைகிறான். மிக உயர்ந்த, பலதரப்பட்ட நீடித்திருக்கும் இன்பங்கள் மனதில் இருந்து எழுபவையே.
05. யார் அதிகம் சிந்தித்து, உயர்ந்த உணர்வுகளை உணர்ந்து, சிறந்து செயற்படுகிறார்களோ அவர்களே உன்னத வாழ்வு வாழ்கிறார்கள்.
06. தன் சக மனிதர்களுக்கான சேவையில் தன் அகந்தையை அர்ப்பணிக்காதவரை யாருமே வாழ்வின் அர்த்தத்தைக் கற்பதில்லை.
07. நல்ல வாழ்விற்கு செயற்பூர்வமான மனித நேயம் என்ற நற்குணம் தேவை. இதுதான் வாழ்விற்கான தங்கமயமான வழி. இதுதான் திருப்திகரமான வாழ்வு, மனிதராய் பிறந்தவர் சந்தோஷமாய் இருக்க இதுதான் வழி.
08. அடுத்தவர்களுக்காக நாம் சிந்தித்து அவர்களுக்காக ஏதாவது செய்யாவிட்டால், சந்தோஷத்திற்கான சிறந்த வழியை இழந்துவிடுகிறோம்.
09. பெறுவதிலோ வைத்திருப்பதிலோ இல்லை தருவதில்தான் சந்தோஷமே இருக்கிறது.
10. சந்தோஷம் என்பது நறுமணம் தரும் திரவியம் போன்றது. உங்கள் மீது அதனுடைய சில துளிகளாவது படாமல் உங்களால் அடுத்தவர் மீது அதைத் தெளிக்க முடியாது.
11. சந்தோத்தை வாங்க முடியாது, உண்மையில் பணத்திற்கும் அதற்கும் சம்மந்தமே இல்லை.
12. வாழும்சூழல், ஊதிய உயர்வு, பொருளாதாரம், அரசாங்கத்தை மாற்றுவது போன்றவற்றிலேயே மனிதர்கள் கவனமாக இருக்கிறார்கள். தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்வதில் அவர்கள் கவனமெடுப்பதில்லை.
13. சந்தோஷம் உள்ளிருந்து வருகிறது. எளிய நல்ல குணம் தெளிவான சிந்தனையால் வருகிறது. மதம் அதற்கு தேவையில்லை, ஆனால் எங்கிருந்தாலும் ஒழுக்கத்தை கடைப்பிடிக்காத ஒருவரிடம் அது வந்ததாக சரித்திரம் இல்லை.
14. சுயநலம் சந்தோஷத்தின் எதிரி, அடுத்தவரை சந்தோஷமாக்குவதே தன்னைத்தானே சந்தோஷப்படுத்தும் வழியாகும்.
15. சுயநலமும் பேராசையும் மன அமைதியை அழித்துவிடும். திருப்தி, மேம்படுவதில் அக்கறை, பயனுள்ளவராக இருப்பது, கடுமையாக படிப்பது, அமைதியாக சிந்திப்பது, எதையும் துணிச்சலோடு செய்வது இவைகள் சந்தோஷத்தை எட்டித்தொட சிறந்த படிக்கட்டுக்களாகும்.
16. ஒரு மனிதனிடம் என்னென்ன சொத்து இருக்கிறது என்பது சந்தோஷமல்ல அவன் என்னவாக இருக்கிறான் என்பதே சந்தோஷமாகும்.
17. பணத்தால் உணவை வாங்கலாம் ஆனால் பசியை வாங்க முடியாது. மருந்தை வாங்கலாம் ஆனால் ஆரோக்கியத்தை வாங்க முடியாது. வேலையாட்களை பெறலாம் ஆனால் விசுவாசத்தைப் பெற முடியாது.
18. ஒரு மனிதன் சந்தோஷமின்றி இருந்தால் அதற்குக் காரணம் அவனுடைய சொந்தத் தவறுதான். ஏனெனில் கடவுள் எல்லோரையும் சந்தோஷமாகத்தான் படைத்துள்ளார்.
19. சந்தோசம் என்பது நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதில் இல்லை, என்ன செய்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது.
20. இல்லாத ஒன்றாக தாங்கள் ஆக முயற்சித்து தங்களால் முடியாத ஒன்றை செய்ய முயற்சிப்பவர்கள்தான் அதிருப்தியோடு இருக்கிறார்கள். என்ன செய்ய முடியும் என்பதைவிட என்ன செய்ய முடியாது என்பதை அறிந்து செய்வதுதான் முக்கியம். வாழ்வின் முழுமைக்கு நம்மை நாமே அர்ப்பணித்து, வாழ்வு நம்மூடே செல்ல அனுமதிக்க வேண்டும்.
21. வேறு யாராகவும் இருக்க முயலாமல் தானாகவே, தன் சொந்த இயல்பிலேயே இருக்க முயல்வதுதான் வீரமும் விவேகமுமாகும்.
22. வாழ்க்கையை எதிர் காலத்திற்கு ஒத்திப் போடுவதுதான் ஆண்களும் பெண்களும் சந்தோஷம் இல்லாமல் இருக்கக் காரணம். இதனால் அவர்கள் நிகழ்காலத்தைப் பார்க்க முடியாமல், சந்தோஷமான வாய்ப்பை இழந்துவிடுகிறார்கள்.
23. வாழ்வு வாழ்வதில்தான் இருக்கிறது. ஒவ்வொரு நாளின் மணி நேரத்தின் சதையில் இருக்கிறது என்பதை காலம் கடந்தே அறிகிறோம்.
24. வாழ்வதை ஒத்திப் போடுவதுதான் நமக்குள்ள கெட்ட பழக்கம். தொடுவானத்திற்கு அப்பால் உள்ள மந்திர மாய ரோஜாத் தோட்டத்தைப்பற்றி நாம் கனவு கண்டு கொண்டிருக்கிறோம். இன்று நம் ஜன்னலுக்கு வெளியே இருக்கும் ரோஜாக்களை அறிவதில்லை.
25. பணத்தையும் வெற்றியையும் பேராசையுடன் தேடுவதால் துன்பமே மிஞ்சும். காரணம் இப்படிப்பட்ட வாழ்வு தங்களுக்கு வெளியே உள்ள பேராசைக்காரரோடு சம்பத்தப்படுவதால் இறுதியில் துன்பமான முடிவோடு நிற்கிறது.
26. பணத்தைச் சேர்ப்பது, அதிகாரத்தைச் சேர்ப்பது இவைகளால் வாழ்வுக்கு பயனில்லை. வாழ்வு இவை எல்லாவற்றையும் விட மேலானது.
27. சுவையான கருத்துக்களை சிந்திப்பவனே மிகவும் சந்தோஷமான மனிதன். வெறுமையான மனமே சந்தோஷத்தை அற்ப சுகங்களில் தேடுகிறது.
28. சந்தோஷத்தின் அடிப்படை நேர்மையின் அடிப்படையைப் போன்றதுதான். அது பொருட்களை சார்ந்ததல்ல அது ஒருவருடைய ஆளுமையைச் சார்ந்தது.
29. உங்களை சந்தோஷப்படுத்திக் கொள்ளுங்கள் நீங்கள் நினைப்பதைவிட காலம் இன்னமும் குறைவாகவே இருக்கிறது.
30. வாழ்வை அனுபவிக்க வேண்டுமென்றால் அதற்கு இதுதான் நேரம். அது நாளையோ அடுத்த வருடமோ, நாம் இறந்த பின்போ வருவதில்லை.
No comments:
Post a Comment