01. மரணம் என்பது திரையை விலத்தி ஓர் அறையில் இருந்து இன்னோர் அறைக்கு செல்வதுதான்.
02. கூண்டின் கம்பிகளை திறந்துவிட்டால் நீங்கள் பறவைக்கு தீமை செய்வதில்லை, அதற்கு நன்மைதான் செய்கிறீர்கள், அதுபோன்றதுதான் மரணமும்.
03. இறந்துபோன உங்கள் நண்பர்களுக்காக ஓரளவுக்கு மேல் துயரம் கொள்ளாதீர்கள். அவர்கள் இறக்கவில்லை ஆனால் தமது பயணத்தை முடித்து விட்டார்கள். நாம் எல்லோருமே நமது பயணம் முடிவடைய அந்த வரவேற்பறைக்கு சென்றேயாக வேண்டும்.
04. நாளைபற்றி யோசிக்காதீர்கள் நாளை தனக்குத்தானே பார்த்துக் கொள்ளும், இந்தநாளே உயர்ந்தது.
05. உண்மையான நம்பிக்கையுடன் இதயத்தின் அடி ஆழத்திலிருந்து கடவுளைக் கூப்பிடுபவர்களுக்கு அவர் செவி சாய்ப்பார். அவர்கள் கேட்டது, ஆசைப்;பட்டது கட்டாயம் கிடைக்கும்.
06. கனவுகளைவிட பிரார்த்தனைகளாலேயே அதிக விஷயங்கள் நடக்கின்றன. எனவே உங்கள் குரல் இரவும் பகலும் ஊற்றுப்போல உயரட்டும்.
07. பிரார்த்தனை என்பது வேண்டுதல் மட்டுமல்ல, மனிதனின் கண்ணுக்குத் தெரியாத சக்தியிலேயே மிகவும் சக்திவாய்ந்த வடிவம் அல்லது வெளிப்பாடுதான் அது.
08. பிரார்த்தனையின் போது உணர்வு நிலையின் அடியின் ஆழத்திலிருந்து ஒரு தீபம் சுடர்விடுகிறது அங்கு மனிதன் தன்னைத்தானே அடையாளம் காண்கிறான்.
09. புவியீர்ப்பு விசையைப் போலவே பிரார்த்தனையும் உண்மையான ஒரு சக்தியாகும். எல்லாமோ தோல்வியடைந்த நிலையில் பிரார்த்தனை இறுதி வெற்றி தந்திருக்கிறது.
10. கவலைக்கான தன்னிகரற்ற மருந்து பிரார்த்தனையாகும்.
11. தெய்வீக உதவியின்றி என்னால் வெற்றிபெற முடியாது அதுபோல தெய்வீக உதவியின்றி என்னால் தோற்கவும் முடியாது.
12. கடவுள் மனிதருடைய செயல்களை கட்டுப்படுத்துகிறார். அவருக்கு தெரியாமல் ஒரு குருவி தரையில் விழாது என்றால் அவரது உதவியின்றி ஒரு ராஜாங்கம் உயருமா என்ன ? – பெஞ்சமின் பிராங்கிளின்
13. நம்பிக்கை என்ற சக்தியில்தான் மனிதர்கள் வாழ்கிறார்கள் அது இல்லாதபோது வீழ்ச்சியடைகிறார்கள்.
14. நாம் எப்போதுமே வாழ்வை எளிதாக ஒரேமாதிரியாக வாழ்ந்துவிடலாம் என்று எதிர்பார்க்க முடியாது. நாம் எல்லோருமே பிரச்சனைகளை, கவலைகளை, பயங்களை உணருகிறோம். இவை வாழ்வின் பாகங்கள் அதிலிருந்து தப்பிவிட யாராலுமே முடியாது.
15. எப்போதுமே வலி, பிரச்சனைகள் வந்தால் அவற்றை சமாளிக்கக் கூடியவாறு உங்கள் மனதைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.
16. போராட்டமான நேரத்தில் மனிதனுக்கு உதவக்கூடிய வாசகத்தை கண்டு பிடிக்கும்படி ஒரு ராஜா ஐந்து அறிஞர்களை கேட்டார். அவர்கள் கண்டறிந்து சொன்ன மந்திரம் இதுதான் – இது கூட கடந்து சென்றுவிடும் - இதோ அந்த மந்திரப் பாடல் :
துயரத்தில் இருக்கிறாயா தோழா ?
உனக்காக நான் பிரார்த்திக்கிறேன்
ஆறுதல் கொள் இதுகூட கடந்து சென்றுவிடும்.
மேன்மையடைந்துவிட்டாயா சந்தோஷத்தில் தள்ளாடாதே
மனதைக் கட்டுப்படுத்து இதுகூட கடந்து சென்றுவிடும்.
ஆபத்தில் இருக்கிறாயா ? மனம் அலை பாய்கிறதா ?
நம்பிக்கை கொள்..! இதுகூட கடந்து சென்றுவிடும்.
போரிலும் புகழிலும் மமதை கொள்கிறாயா ?
ராஜாபோல திரிகிறாயா ? இதுகூட கடந்து சென்றுவிடும்.
நீ யாராக இருந்தாலும், உன் பாதம் எங்கு சென்றாலும்
இந்த ஞானமுள்ள வார்த்தையைக் கேள் இதுகூட கடந்து சென்றுவிடும்.
17. உங்கள் துயரத்தை மறந்துவிடுங்கள் அது தண்ணீர் ஓடிச் சென்றதுபோல ஓடிவிடும்.
18. பிரபஞ்சத்தின் அடிப்படையான பொருள் என்பது ஒரு நதி தொடர்ந்து ஓடுவதைப் போல ஓடுகிறது. எல்லா பொருட்களும் தொடர்ந்து மாறுவது மட்டுமன்றி மற்றப் பொருட்களிலும் தொடர்ந்து முடிவில்லா மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது.
19. நீ ஒரு விளிம்பில் நிற்கிறாய் உனக்குப்பின்னால் கடந்தகாலம் என்ற பாதாளம் முன்னால் எல்லாவற்றையும் விழுங்கப்போகும் எதிர்காலம் இப்போது எதற்காக நீ கவலைப்படுகிறாய் ?
20. வாழ்வு முழுவதும் சோகம் என்றாலும் கலங்காதே ! உன் துக்கத்தினால் காலை உதயம் தன் அழகை இழந்துவிடாது.
21. இன்னும் பிறக்காத வருடங்களின் அனுபவிக்காத சந்தோஷம் இன்று துக்கப்படும் இதயத்தை நாளை துரோகி என்று நிரூபிக்கும். கண்களை கண்ணீர்த் துளிகளுக்கு விசுவாசமற்றதாக்கும்.
22. யோசனையின்றி எடுத்து வைக்கும் அடிகளைப்பற்றி ஜாக்கிரதையாக இருங்கள். நாளைவரை வாழப்போகும் இருண்ட நாளும் மறைந்துவிட்டிருக்கும்.
23. வாழ்வின் துன்பங்களை, சோதனைகளை கடந்து மேலெழ உதவும் சமநிலை பொறுமையைத் தவிர வேறென்ன இருக்கப்போகிறது.
24. கடலுக்குள் நீண்டிருக்கும் நிலத்தைப்போல நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். அதன் மேல் அலைகள் தொடர்ந்து மோதினாலும் அது உறுதியாக இருக்கிறது. இறுதியில் அதன் மேல் மோதும் ஆர்ப்பரிக்கும் அலைகள் அடங்கி அமைதியாகின்றன.
25. ஈக்வானிமிடஸ் என்பது ஒரு மந்திரச் சொல் இதன் பொருள் : சமத்துவம் ஓர் அமைதியான பொறுமை வாழ்வின் சோதனைகளை ஏற்றுக் கொண்டு அவற்றுக்கு மேலாக செல்வதாகும்.
No comments:
Post a Comment