ஒரு நல்ல பாம்பு ஒரு முனிவரிடம் வருத்தப்பட்டு சொன்னது.
"எனக்கு நல்ல பாம்பு என்று பெயர் இருந்தாலும் யாரும் என்னை நல்லவனாக நினைப்பதில்லை...
என்னைக் கண்டாலே வெறுக்கிறார்கள் அல்லது பயப்படுகிறார்கள்.......
எனக்கு வருத்தமாக இருக்கிறது."
அதற்கு அந்த முனிவர்,
" நீ எல்லோரையும் கடித்து துன்புறுத்துகிறாய்...
யாரையும் கடிக்காமல் இரு" என்று புத்தி சொல்லி அனுப்பினார்.
சில நாள் கழித்து அந்த பாம்பு ரத்த காயங்களுடன் வந்து நின்றது.
"நீங்கள் சொன்னபடி யாரையும் நான் கடிக்கவில்லை...
இருந்தாலும் என்னைக் கண்டவுடன் கல்லால் அடிக்கிறார்கள்." என்று அழுதது.
"நான் கடிக்க வேண்டாம் என்று தான் சொன்னேன். சீற வேண்டாம் என்று சொல்லவில்லையே...
நீ சீறியிருந்தால் அடிக்காமல் பயந்து ஒதுங்கி இருப்பார்கள்....
நல்லவனாக இரு...
அதற்காக கோழையாக இருந்து விடாதே" என்று மீண்டும் புத்தி சொல்லி அனுப்பினார்...
No comments:
Post a Comment