"நமசிவாய' என்ற மந்திரத்தை உச்சரித்தால், நோய்கள் பறந்தோடி விடும், எந்த தெய்வத்தின் பெயரை உச்சரிக்கிறாயோ, அந்த தெய்வத்தின் அருளால் உடல் நோய் மட்டுமல்ல, பிறவி நோயே தீர்ந்து விடும் என கம்பர் சொல்கிறார். ராமாயணத்தில் வாலி மூலம் இதை வெளிப்படுத்துகிறார். "இம்மையே எழுமைநோய்க்கும் மருந்தினை "ராம' என்னும் செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களில் தெரியக்கண்டான்' என்ற வரிகள் மூலம் ராமநாமத்தின் உயர்வை உணர்கிறோம். அதுபோல, நமசிவாய மந்திரமும் நோய் தீர்க்கவல்லது. காய்ச்சல் வந்ததும் மனிதன் சக்தியிழந்து சாய்ந்து விடுகிறான். குணமானதும் புத்து ணர்வுடன் எழுகிறான். அதுபோல், பிறந்தால் கஷ்டப்படுகிறான். பிறவிப்பிணி அகன்றால் இறைவனோடு கலந்து ஆனந்தமயமாக இருக்கிறான். "நமசிவாய' மந்திரம் சொல்பவர்கள் என்றும் ஆனந்தமாக திகழ்வர்
No comments:
Post a Comment