உறவுகள் என்பது ஒரு புதையல் போன்றது. அதை கையாளுவதை பொறுத்தே இன்பமும் துன்பமும் உள்ளது. அப்படிப்பட்ட மென்மையான உறவுகள் பலவித பிரச்சனைகளால் உடைந்து போக வாய்ப்பு உள்ளது. காதல், செக்ஸ் மற்றும் பணம் - இந்த மூன்றும் தான் உறவுகளில் சிக்கல் ஏற்பட காரணமாக இருக்கும் முக்கிய பிரச்சனைகளாகும். சரி இதனை எப்படி சமாளிப்பது என்பதை பார்க்கலாமா? ஏதாவது ஒரு பிரச்சனையால் ஒரு கட்டத்தில் உறவுகளானது பாதிக்கப்படும்.
பல பேர் இந்த பிரச்சனைகளை பற்றி பெரிதாக கவலை கொள்ளாமல் உறவை தொடரச் செய்வார்கள். ஆனால் இன்னும் சிலரோ பிரச்சனைக்கு தீர்வு காண எந்த ஒரு முயற்சியையும் எடுக்க மாட்டார்கள். உங்களுக்கு அனைத்து பிரச்சனைகளும் இருக்கிறது என்று நீங்கள் உணர்ந்தாலும், உங்களால் தான் சில பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று வேறு சிலர் நினைக்கலாம். சரி, அப்படி குழப்பங்களை ஏற்படுத்தும் சில பிரச்சனைகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
ஆண்களுக்கு மட்டும் தான் செக்ஸ் வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படுகிறது என்று எண்ணினால், மறுபடியும் ஒரு முறை யோசித்து பாருங்கள். 64 சதவீத பெண்களுக்கு தங்கள் கணவனிடம் உடலுறவில் ஈடுபடும் போது திருப்தி ஏற்படுவதில்லை என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறியுள்ளது. ஆகவே உங்களுக்குள் இந்த உறவை சரிசெய்ய பிரச்சனைகளை பேசி சரிசெய்து கொள்ளுங்கள்.
உங்கள் பிரச்சனைகளை பற்றி கணவன்/மனைவியிடம் பேச வெட்கப்படாதீர்கள். நீங்கள் இந்த விஷயத்தில் சந்தோஷமாக இல்லை என்பது நீங்கள் சொல்லாமல் இருந்தால், அவர்களுக்கு எப்படி புரியும்? ஆகவே வெளிப்படையாக பேசுங்கள்.
காம உணர்வை அதிகரியுங்கள். அதற்கு உங்கள் துணையிடம் படுக்கையில், அவர் சந்தோஷமாக இருக்கிறாரா என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
செக்ஸ் விஷயத்தினால் ஏற்படும் பிரச்சனையைப் போக்குவதற்கு ஒரு மருத்துவரை அணுகலாம். இதனால் ஒருவேளை படுக்கையில் அந்த விஷயத்தில் உங்களுக்கு ஏதாவது மறைமுக பிரச்சனை இருந்தால், உங்கள் மருத்துவர் உங்கள் பிரச்சனையை தீர்க்கலாம் அல்லவா?
முதலில் கணவன்/மனைவியிடம் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு பணம் எதிர்பார்க்கிறீர்கள் என்பதை தெளிவாக பேசி விடுங்கள்.
ஏதாவது ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, செலவளிப்பதற்கு ஒருவர், சேமிப்பதற்கு ஒருவர் என முடிவெடுக்கலாம் அல்லது சம அளவில் இருவரும் சேமிப்புக்கு கை கோர்க்கலாம். ஆனால் இருவரில் யாராவது ஒருவருக்கு பணப் பிரச்சனை ஏற்படும் போது இந்த அமைப்பை சற்று நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
முக்கியமாக கடன்களை ஒருவருக்கொருவர் மறைக்காமல் தெரிவிக்க வேண்டும். மேலும் குறுகிய கால மற்றும் நீண்ட கால லட்சியங்களை திட்டமிட வேண்டும்.
பல தம்பதியர்கள், தங்கள் கணவன் அல்லது மனைவி தங்களிடம் அன்பாக இல்லை என்றும், தங்கள் பேச்சை கேட்பதில்லை என்றும் நினைக்கிறார்கள். அதற்கு காரணம் உட்கார்ந்து பிரச்சனையை தீர்த்துக் கொள்ளலாம் என்று இருவருமே நினைப்பதில்லை. உருவங்களில் ஏற்படும் பிரச்னையை பற்றி பேசுவது பல பேருக்கு முக்கியமாக படுவதில்லை. சரி அப்புறம் எப்படி தான் உறவை மேம்படுத்துவது?
வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது, நடு நடுவே உங்கள் துணையிடம் பேசும் பழக்கத்தை தவிர்க்கவும். அதே போல் உங்கள் துணையிடம் பேசி கொண்டிருக்கும் போது, மெசேஜ் படிப்பதிலோ, தொலைபேசியில் உரையாடுவதையோ தவிர்க்கவும். ஆகவே இருவரும் பேசும் போது தொந்தரவு ஏற்படாமல் இருப்பதற்கு ஒரு நேரத்தை இருவரும் முடிவு செய்து கொள்ளுங்கள்.
சில விதிமுறைகளை விதித்துக் கொள்ளுங்கள். கோபத்தினால் பிரச்சனைகளை பேச முடியாவிட்டால் அதற்கு என்ன வழி என்பதை யோசியுங்கள். ஒருவரை பார்த்து மற்றொருவர் கத்த கூடாது என்று முடிவெடுங்கள். புண்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்றும் முடிவெடுங்கள்.
முக்கியமாக பேசும் போது காது கொடுத்து கேளுங்கள். மேலும் உங்கள் துணை உங்களிடம் பேசும் போது, கண்களை வேறு எங்கோ கொண்டு செல்வது அல்லது கவனிக்காமல் இருப்பது என்றெல்லாம் நடக்காதீர்கள். அவரின் பிரச்சனையை தீர்க்க நீங்களும் ஆர்வம் காட்டுகிறீர்கள் என்பதை உங்கள் உடல்மொழி அவருக்கு எடுத்துரைக்க வேண்டும்.
எப்படி உங்கள் பிரச்சனை உங்களுக்கு முக்கியமானதாக இருக்கிறதோ, அதே போல் இந்த உறவில் உங்கள் துணை எதிர்பார்த்தது கிடைக்கிறதா என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் பிரச்சனையை குறைத்து மதிப்பிடாதீர்கள்.
No comments:
Post a Comment