இன்றைய அறிவியல் தான், சோதனைக்குழாய் பிறக்க காரணமாக இருந்ததாக பெருமையடித்துக் கொள்பவர்கள், அந்தப் பெருமையை நம் முன்னோருக்கு அர்ப்பணிக்க தயாராக இருக்க வேண்டும். மகாபாரதத்தில் காந்தாரி என்ற பாத்திரம் வருகிறது. இவள் திருதராஷ்டிரனின் மனைவி. சகுனியின் சகோதரி. கணவனுக்கு கண்தெரியவில்லை என்பதற்காக, தன் கண்களையும் கட்டிக்கொண்டு வாழ்வின் இறுதிநாள் வரை அவிழ்க்காத மாதரசி.
இவள் தனது கர்ப்பத்தை 108 பானைகளில் போட்டு மூடி வைத்தாள். அவற்றில் பல மூலிகைகள் இருந்தன. அந்த மூலிகைகளைக் கொண்டே 100 மகன்களையும், ஒரு மகளையும் பெற்றாள். அப்படியானால், இதிகாச காலத்திலேயே நமது தேசம் இதற்கான அடிகோலை இட்டுவிட்டது.
அது போகட்டும்! சரித்திர காலத்திற்கு வருவோம். மவுரியர்களின் ஆட்சிக்காலம் நம் தேசத்தில் நடந்த வேளை...சந்திரகுப்தன் என்ற புகழ்பெற்ற அரசரின் மனைவி கர்ப்பமானாள். கர்ப்ப காலத்திலேயே ஒருநாள் திடீரென இறந்துவிட்டாள். ஆட்சிக்கு வாரிசு வேண்டுமே! ராணி, இறந்துபோன சில நிமிடங்களுக்குள் அவளது கருப்பையிலிருந்து கருவை எடுத்தார் அரண்மனை வைத்தியர் சுஸ்ருதர் என்பவர்.
அந்தக்கருவை ஒரு ஆட்டின் கருப்பையில் செலுத்தினார். பத்துமாதங்கள் பாதுகாத்தார். ஆட்டின் வயிற்றில் இருந்து அழகான குழந்தை பிறந்தது. அந்தக்குழந்தையே பிந்துசாரர். "பிந்துசாரம்' என்றால் ஆடு அல்லது மான்.
எவ்வளவு பெரிய அற்புத சாதனை!
விஞ்ஞானத்தை நம்மிடமிருந்து தான் பிறநாடுகள் கற்றுள்ளன. ஆனால், அவர்கள் நல்ல நேரம்...அவர்களை நாமும் பாராட்டிக் கொண்டிருக்கிறோம் என்பது தான்!
No comments:
Post a Comment