Tuesday, September 24, 2013

டென்ஷனில் இருந்து நிரந்தரமாக விடுபட

இருபத்து மணி நான்கு நேரமும் டென்ஷனுடன் இருப்பவர்கள் பெண்கள் தான்.

காரணம், குடும்பத்தை மட்டுமே கவனிதுக் கொண்டிருந்த பெண்களில் பலர் வேலைக்கும் செல்ல ஆரம்பித்துவிட்டனர். இதனால் அவர்களது சுமைகள் கூடியிருக்கிறதே தவிர குறையவில்லை. உடல் சோர்வினாலும் மனச்சோர்வினாலும் அவர்கள் அவதிப்படுவது அன்றாட நடைமுறையாகி விட்டது. இதிலிருந்து மீண்டு அவர்கள் என்றும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வாழ சில யோகாசனங்களை செய்ய வேண்டும்.

சவாசனம்

தரையில் விரிப்பை விரித்து உயிரற்ற உடல் எவ்வாறு சலனமின்றி இருக்குமோ அதே போல படுக்க வேண்டும். பார்வைகள் சலனமின்றி உடலும் உள்ளமும் தளர்ந்த நிலையில் மேல் நோக்கி பார்க்க வேண்டும். மூன்று நிமிடங்கள் வரை அவ்வாறு இருந்த பின் பாதங்களை வலது இடதாக அசைத்து பின் எழுந்திருக்க வேண்டும். இந்த ஆசனம் செய்வதால் மனஇறுக்கமும் அகலும், முதுகு தண்டு வலி, கழுத்து வலிகள் குணமாகும்.

தடாசனம்

மூட்டு வலி இப்போது வயது வரம்பின்றி அனைவருக்கும் வருகிறது. இதனை தவிர்க்க இந்த ஆசனம் உதவுகிறது. தரையில் நேராக கால் முட்டிகள் சேர்ந்திருக்கும் படி நிற்கவேண்டுமு. பிறகு மெல்ல கணுக்காலை மேலே உயர்த்த வேண்டும். அந்த சமயத்தில் உடலின் மொத்த கனத்தையும் சமச்சீராக வயிறு, கால் விரல்கள், கணுக்காள் பகுதியில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். முதுகு, கழுத்து, தலை பகுதிகள் நேராக இருக்க வேண்டும். பார்வை நேராக இருக்கட்டும். கண் மற்றும் வயிற்று பகுதிகளில் இறுக்கம் இல்லாமல் இயல்பாக தளர்வான நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு 3 நிமிடங்கள் இப்பயிற்சியை செய்யுங்கள்.

சித்தாசனம்

நமது உடலில் உள்ள 72000 நாடி நரம்புகளை சுத்தம் செய்யும் எளிதான ஆசனம் இது. முதலில் தரையில் அமருங்கள். பின்னர் இடது காலை மடித்து வலது கணுக்காலில் படும்படி மடித்து அமருங்கள். அடுத்தது வலது காலை மடித்து இடது தொடை மீது படும்படி செய்யுங்கள். இரு கைகளையும் சின் முத்திரை தாங்கி கால் முட்டிகள் மீது வைத்து மூச்சை நிதானமாக இழுத்து விட வேண்டும். பிறகு கைகளை சமநிலைக்கு கொண்டு வந்து பின்னர் நிதானமாக ஒவ்வொரு காலாக பிரித்து நிமிர்த்தி அமர்ந்த பின் எழ வேண்டும். இந்த ஆசனத்தை செய்வதால் மனம் அமைதி அடையும். ரத்த ஒட்டம் சீராகும். பின்புறம் மற்றும் வயிற்று பகுதியில் உள்ள சதைகள் குறையும்.

தனுராசனம்

முதலில் வயிறு தரையில் படும்படி படுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் கால்களை மெதுவாக தூக்க வேண்டும். அதன்பின் கைகளை பின்னோக்கி கொண்டுச் சென்று முகத்தை மெதுவாக மேலே தூக்கி மூச்சை மெதுவாக இழுத்து வெளியில் விடுங்கள் இந்த ஆசனத்தை செய்வதால் உடலில் உள்ள சதைபிடிப்புகள் அகலும். குடல் சுத்தமாகும். வாய் துர்நாற்றம் போகும். முதுகெழும்பு சீராகும். வாயு கோளாறு நீங்கும். மாதவிடாய் பிரச்சனைகள், நீரிழிவு நோய் குணமாகும்.

பக்தகோணாசனம்

முதலில் தரையில் அமர்ந்து கால்களை அகற்றி விரித்து வைத்துக்கொள்ளுங்கள். பின் இரு கால் பாதங்களையும் ஒன்றாக இணைத்து கையினால் பிடித்துக்கொள்ளுங்கள். சிறிது சிறிதாக உடலை முன்னோக்கி நகர்த்தி தலை பாதத்தில் படும் படி குனியுங்கள் இதில் நன்கு பயிற்சி பெற்ற பின் தரையை தொடு அளவுக்கு முன்னேறுங்கள். இப்படி செய்வதால் சிறுநீர் குழாய் அடைப்புகள் நீங்கும். கர்ப்பப்பை சுத்தமாகும். ரத்த குழாய் அடைப்புகள் நீங்கும். சிறுநீர் சம்பந்தமான நோய்கள் அகலும்.

No comments:

Post a Comment