Tuesday, September 3, 2013

வலது கை கொடுப்பதை இடதுகை அறியாத வகையில் இருப்பதே சிறந்த தானம்

வெறும் படாடோபத்திற்காக தானம் செய்வது கூடாது. யாருக்கு தானமளித்தால் நன்மையோ அவர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும். "பாத்திரம் அறிந்து பிச்சையிடு' என்று இதனைக் குறிப்பிடுவர். வலது கை கொடுப்பதை இடதுகை அறியாத வகையில் இருப்பதே சிறந்த தானம். கொடுத்ததை பிறருக்கு சொல்லிக் காட்டுவது கூடாது. கொடுத்த பொருளை பிற்காலத்தில் தேவை என்று சொல்லி இரவலாக கேட்டு வாங்கக்கூடாது. 

தானம் அளித்த மாட்டின் பாலை, தானம் பெற்றவரே நமக்கு அளித்தாலும் அதை பருகக்கூடாது என்கிறது சாஸ்திரம். அன்னதானம், கோதானம், பூமிதானம், ஸ்வர்ணதானம் என்று எத்தனையோ தானங்கள் இருந்தன. அறிவியல் யுகமான இன்று இவற்றோடு மனிதாபிமான அடிப்படையில், ரத்தம், கண், சிறுநீரகம் என்று உடல் உறுப்புகளை தானம் அளிக்கின்றனர். எந்த தானமாக இருந்தாலும், எதிர்பார்ப்பு இல்லாமல் செய்யும்போது, அதற்கான நன்மையை கடவுள் அளிப்பார்.

No comments:

Post a Comment