நம் வீடுகளில் திருமணம், புதுமனைப்புகுவிழா, கோயில் கும்பாபிஷேகம், மழை, குழந்தைவரம், ஆரோக்கியம், செல்வவளம் போன்ற தேவைகளுக்காக யாகம் செய்வதைக் காண்கிறோம். அந்தக்காலத்தில், மன்னர்கள் இதை பெரும் பொருட்செலவில் செய்துள்ளனர். ரிஷிகள் காடுகளில் ஹோமம் நடத்தியுள்ளனர். ஒரு தொழிற் சாலை, வர்த்தக நிறுவனம் திறக்கப்படுறதென்றால் கணபதிஹோமம் நடத்தப்படுகிறது. இதற்கு ஆன்மிக காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், அறிவியல் காரணமே பிரதானம்.
மத்தியப்பிரதேச மாநிலம் போபால் விஷவாயு பிரச்னையின் போது, ஒரே ஒரு குடும்பம் மட்டும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தப்பித்தது. இதற்கு காரணம், அந்த குடும்பத்தில் அடிக்கடி ஹோமம் நடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தது தான். இந்த தகவல் அப்போது பரபரப்பாக வெளி வந்தது.
ஹோமத்தின் போது வெளிப்படும் புகை, காற்றில் பரவியுள்ள நச்சுக்கிருமிகளை முற்றிலும் அழித்து விடும். யாகத்தில் இடும் நெய், அரிசி ஆகியவற்றால் ஏற்படும் ரசாயன மாற்றத்தால் உண்டாகும் வாயுக்கள் ரத்தஅழுத்தம், ஆஸ்துமா, தலைவலி, குடல்புண் போன்ற வியாதிகளைப் போக்கும் சக்தி கொண்டது. நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்தி ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. அந்தக் காலத்தில் யாகசாலை பூஜை முடிந்தபிறகு, அந்த இடத்தில் அமர்ந்து மூச்சுப்பயிற்சி, தியானம் செய்யும் வழக்கம் இருந்தது. இதன்மூலம் உடல்நலத்தை சிறப்பாகப் பேணினர்.
"அந்தப்' புகை பிடிச்சா தான் உடலுக்கு கேடு. ஹோமப்புகை நமக்கு மட்டுமல்ல! சுற்றுப்புறத்துக்கே நல்லது.
No comments:
Post a Comment