Sunday, September 22, 2013

மூன்று வழிபாடுகள் முக்கியமானவை

வழிபாடுகள்

இந்து சமயம் மூன்று வழிபாடுகள் முக்கியமானவை என்று திட்டவட்டமாக வரையறுக்கிறது.இம்மூன்று வழிபாடுகளை முறைப் படிச் செய்யாமல் எந்தப் பரிகாரம் செய்தாலும் ,எவ்வளவு பயனும் கிடைக்காது என்பது ஒட்டு மொத்தச் சாத்திரங்களும் ஓங்கிய குரலில் சொல்லும் தலையாய உண்மையாகும்.

மூன்று முக்கியம்:...

வாழையடி வாழையாக நாம் பிறந்த குலம் வளங்களைக் காண வழி செய்பவை மூறு வழிபாடுகளாகும்.

அவை:

குலகுரு வழிபாடு ,
குல தெய்வ வழிபாடு , 
குல முன்னோர் வழிபாடு.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் குலகுரு ஒருவர் இருப்பார்.அவரே அவர் குலத்துக்குச் சமயம் சார்ந்த வாழ்வியலுக்கு வழிகாட்டி ;ஞானம் அளிப்பவரும் கூட .உங்கள் குலகுரு யார் என்பதை அறிந்து ,அவரை இயலும் போதெல்லாம் வழிபட வேண்டும்.குலகுரு யார் என்பது தெரீயவெ இல்லை என்றால் ,உங்கள் மனம் ஈடுபடக்கூடிய மரபு வழிபட்ட துறவியைக் குருவாக ஏற்கலாம்.எது எப்படி ஆனாலும் குலகுரு வழிபாடு மிக முக்கியமானது ஆகும். 

அடுத்தது குலதெய்வ வழிபாடு,ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்தனியே குல தெய்வங்கள் உண்டு.அவை கிராம தேவதைக் கோவில்களாகவே இருக்கும்.அவரவர் தம் குல தெய்வ கோயில்களுக்கு இயலும் போதெல்லாம் செல்ல வேண்டும்.வருடம் ஒரு முறையாவது செல்ல வேண்டும்.

மூன்றாவது முக்கியமான வழிபாடு நீத்தார் வழிபாடாகும் .இறந்து போன முன்னோர்கள் நீத்தார் எனப்படுவர்.தாத்தா ,பாட்டி,அம்மா,அப்பா முதாலான முதியவர்களை வாழும் காலத்தில் வயதான நிலையில் ஆதரிக்க வேண்டும்.
அவர்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்.இருக்கும்போது உதவியோடு இறந்த பின்னரும் அவர்களை நினைவு கூற வேண்டும்.

ஒருவர் இறந்த நாள்,திதி அடிப்படயில் நினைவு கூற வேண்டியதாகும்.எந்த மாதத்தில் இறந்தார்கள் ,வளர்பிரையிலா ,தேய் பிறையிலா என்று பார்க்க வேண்டும்.அதன் பின் எந்த திதியில் இறந்தார்கள் என்பதைக் குறித்துக் கொண்டு ,அந்தத் திதி நாளில் திதி தர்ப்பணம் திவசம் செய்வது முக்கியமான கடமையாகும்.

தென்புலத்தார் :

இறந்து போன முன்னோரைப் "பிதிரர்"என்பர்.இவர்கள் வாழுமிடம் பிதிர்லோகன் எனப்படும்.இதனை வள்ளுவர் 
"தென்புலம்"என்பார்.தென் புலத்தில் வாழும் முன்னோர்களுக்கு வழிப்பாடு செய்வதற்கு முதனை தருகிறார் வள்ளுவர்.

தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு 

ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை.
என்பது குறள்.

நீத்தருக்கு நீர்க் கடன் தருதல்,தமிழர்களிடம் வழக்கத்தில் இருந்து மிகவும் பழமையான வழியே ஆகும்.இடைச் சங்க காலத்தில் இருந்த பாண்டிய மன்னரால் ஒருவன் ,பளுஆக சாலை முது குடுமிப்பெருவழுதி என்பவன்.இவன் காலத்தில் இருந்த புலவருள் ஒருவர் நெட்டிமையார் என்ற புலவர்.இவர் 'புதல்வர்கள் பொன் போன்றவர்கள் தம்முன்னோருக்கு நீர்க்கடன் தருவதால் இப்பெருமைக்கு இவர்கள் உரியவர்கள் ஆகிறார்கள்' என்கிறார்.

தென்புல வாழ்நாக்கு அருங்கடன் இகுக்கும் 
பொன்போல் புதல்வர்' என்கிறார் அவர் .
முறைப்படி செய்யும் நீத்தார் கடன்கள் முன்னோரை மகிழ்விக்கும்.பிதுர் ஆசி இருப்பின் எல்லா நலன்களும் விளையும்.

தர்ப்பண நாட்கள் : 
எள்ளும்,நீரும் முன்னோருக்கு அளித்தால் நீர்க்கடன் தருதல் எனப்படும்.இதனைத் தர்ப்பணம் தருதல் என்பர்.முன்னோருக்குரிய இறந்தநாளில் திவசம் தருதல் வேண்டும்.படையால் இடுவது உண்மையான தமிழர் வழிபாடாகும்.இறந்தநாள் மட்டுமில்லாமல்,இன்னும் பலநாட்களும் முன்னோர் வழிபாட்டுக்குரிய நாட்களாக தர்ம சாத்திரத்தில் சொல்லப்பட்டுள்ளன. 

அமாவசை நாட்கள்,மாதப்பிறப்பு நாட்கள் ,மாளய பட்ச நாட்கள் என்பன முன்னோரை வழிபடுவதற்குரிய நாட்களாகும்.இந்த எல்லா நாட்களிலும் நீர்க்கடன் தராவிட்டாலும் ஆடி,தை மற்றும் மாளய பட்ச அம்மாவாசை நாட்களிலாவது நீர்க் கடன் தருதல் வேண்டும்.

மாளய பட்சம் :

மண்ணுலகின் தென்திசையில் வாழும் முன்னோர்கள்,தாம் வாழ்ந்த பகுதிக்கு வருகை தரும் நாட்கள் மாளய பட்ச நாட்களாகும்.புரட்டாசி மாத அமாவாசை மாளய அமாவாசை ஆகும்.அதற்கு முன் உள்ள நாட்கள் மாளய பட்சம் எனப்படும்.இந்த நாட்களில் நீர்க்கடன் தருவது நல்லது.தமுன்னோருக்குரிய திதி நாளில் திவசம் தரலாம்.குடும்ப வழக்கப்படி படையலும் இடலாம்.

மாளய பட்ச நாட்களில் மகாபரணி (23.09.13),மகாவியதீபாதம் (26.09.13),மத்யாஷ்டமி(27.9.13) சன்யஸ் த மகாளயம்(1.10.13)கஜச் சாய புண்ய காலம் (2.10.13) மகாத்ரயோதசி (2.10.13) மாளய அமாவசை (4.10.13) முக்கியமானவை . வரும் 20.09.13 வெள்ளிக்கிழமை மாளய பட்சத் துவக்கம்.

நீர்க்கடன் முக்கியம்:
மாளய பட்ச நாட்கள்;இல் தகுந்தவர் துணையுடன் நீர்க்கடன் தருவது மிகவும் முக்கியமானதாகும்.இந்த நாட்களில் ஆறு அல்லது குளங்களில் ,ஈர உடையுடன் நீரினை இரண்டு கைகளாலும் எடுத்து,தெற்குப் பார்த்து முன்னோரை நினைத்து நீரினை நீர்நிலையில் சேர்க்கலாம்.ஆறு குளத்தில் குளிக்க வாய்ப்பு இல்லாதவர்கள் ,முன்னோரி நினைத்துக் கொண்டு ஒரு பெரிய பாத்திரத்தில் இருந்து இரண்டு கைகளாலும் நீரினை எடுத்து தெற்குப் பார்த்து வணங்கி இன்னொரு பாத்திரத்தில் சேர்க்கலாம்.வசதி வாய்ப்புள்ளவர்கள் ராமேஸ்வரம் ,பூம்புகார் போன்ற கடல் துறைகளுக்கு சென்று திதி தர்ப்பணம் தருவது புன்னியப் பலனைக் கொடுக்கக் கூடியதாகும். 

No comments:

Post a Comment