வேத மந்திரசக்தி முழுவதும் அடக்கிய மந்திரம் காயத்ரி. மற்ற மந்திரங்களுக்கு சக்தி அளிப்பதும் காயத்ரி தான். கடவுளை பலவிதங்களில் வழிபட்டாலும் தாயாக வழிபடுவதே சிறப்பு. காயத்ரி மந்திரத்தை மாத்ரு ரூபமாக( தாய்வடிவில்) உபாசனை செய்வர். அதனால், வேதம் இந்த மந்திரத்தை "மாதா காயத்ரி' என்று போற்றுகிறது. காயத்ரி மந்திரம் ஜெபிப்பவர்களுக்கு மனத்தூய்மை உண்டாகும். காயத்ரி மந்திரத்தை நித்யஜெபமாக செய்பவர்களுக்கு கடினமான பணியைக் கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் பெருகும். அறிவுத்திறன் மேம்படும். துன்பத்தை எதிர்கொள்ளும் மனோதிடம் உருவாகும். சரியான முடிவெடுக்கும் திறன் வெளிப்படும். பொறாமை, வெறுப்பு, பகையுணர்வு போன்ற எதிர்மறை எண்ணங்கள் அகலும் என மகான்கள் கூறுகின்றனர். பழமையான இந்த மந்திரத்திற்கு குரு மந்திரம், சாவித்ரி மந்திரம், மகாமந்திரம் என்றெல்லாம் பெயருண்டு
No comments:
Post a Comment