இந்த காலத்துப் பிள்ளைகளில் ஒரு பகுதியினர் பெரியவர்கள் பேச்சைக் கேட்பதில்லை. வடக்கே பார்த்து தலை வைத்து படுப்பவர்களை, பெரியவர்கள் கண்டித்தால், ""நீ பழைய பஞ்சாங்கம்! எங்கே தலை வைத்தால் உனக்கென்ன!''என்று பேச்சில் கேலியைக் குழைக்கிறார்கள்.
பிள்ளையார் மனிதமுகத்துடன் இருந்த காலத்தில், சிவனுடன் போர் புரிந்தாராம். போரில் அவரது தலை துண்டிக்கப்பட்டதாம். பார்வதி அழுதாளாம். மனைவியை சமாதானப்படுத்த சிவன், வடக்கே யார் தலை வைத்து படுத்திருக்கிறார்களோ, அவரது தலையை வெட்டி வரும்படி கூறினாராம். ஒரு யானை வடக்கே தலை வைத்து படுத்திருந்ததாம். அதன் தலையைக் கொண்டு வந்து பிள்ளையாருக்கு பொருத்தினார்களாம். இதெல்லாம் புராணக்கதை என்று பிள்ளைகள் ஏற்க மறுக்கிறார்கள்.
ஆனால், இந்தக் கதைக்கு அறிவியல் பின்னணியே காரணம்.
பூமியின் வடதுருவத்திற்கு காந்த சக்தி அதிகம். அதனால், வடக்கு நோக்கி படுத்தால் காந்தசக்தி மூளையைத் தாக்கும். குழம்பிய மனநிலை உருவாகும். ஆழ்ந்த தூக்கம் உண்டாகாது. தூக்கம் கெடும்போது உடல்நலம் பாதிக்கும். மனிதனின் உயிர் பிரிந்ததும் வடக்கு நோக்கி படுக்க வைப்பது மரபு. சமண சமயத்தில் ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர் உயிரை விட எண்ணினால், "வடக்கிருத்தல்' என்ற விரதத்தை மேற்கொள்வர்.
நட்புக்கு இலக்கணம் வகுத்த பிசிராந்தையாரும், கோப்பெருஞ்சோழனும் வடக்கிருந்து உயிர் விட்ட செய்தியை பழந்தமிழ்
இலக்கியம் கூறுகிறது. பிள்ளையார் பற்றிய புராணக்கதையைச் சொல்லி, நம் தலையை வடக்கு பக்கம் வைக்கவிடாமல் தடுத்துள்ளனர் பெரியவர்கள்... புரிகிறதா!
No comments:
Post a Comment