வாழ்வு முழுவதும் சோகம் என்றாலும் கலங்காதே.. உன் துக்கத்தினால் காலை உதயம் தன் அழகை இழந்துவிடாது.
01. உண்மையிலேயே சந்தோஷமானவன் எப்போதும் போராடும் நம்பிக்கையிலேயே இருக்கிறான். பெறுவதிலோ வைத்திருப்பதிலோ அல்ல தருவதில்தான் சந்தோஷம் இருக்கிறது.
02. சந்தோஷம் என்பது நறுமணத் திரவியம் போன்றது. உங்கள் மீது சில துளிகளாவது படாமல் உங்களால் அடுத்தவர் மீது அதைத் தெளிக்க முடியாது.
03. தனக்குத்தானே திருப்தியடையாத ஒருவனால் உண்மையாகவே சந்தோஷமாக இருக்க முடியாது. சந்தோஷத்தை எந்த அரசாங்கத்தாலும் உங்களுக்கு தர முடியாது, அதை உங்களுக்கு நீங்களே செய்ய வேண்டும்.
04. ஒரு மனிதனுக்கு என்ன இருக்கிறது என்பதைவிட அவன் என்னவாக இருக்கிறான் என்பதே அவனுக்கு சந்தோஷத்தைத் தருகிறது.
05. பணத்தையோ, வெற்றியையோ பேராசையுடன் தேடாதீர்கள் அப்படிச் செய்தால் துன்பமே ஏற்படும். ஏனென்றால் இவை இரண்டும் உங்களுக்கு வெளியே இருக்கின்றவை.
06. சுவையான கருத்துக்களை சிந்திப்பவனே சந்தோஷமான மனிதனாகும்.
07. சந்தோத்தின் ஊற்றை தனக்குள்ளே அதிகம் காணக்காண மனிதன் அதிக இன்பமடைவான். மிக உயர்ந்த, நீடித்திருக்கும் இன்பங்கள் மனத்தில் இருந்துதான் உதயமாகின்றன.
08. எல்லோரும் சந்தோமாக இருங்கள் நீங்கள் நினைப்பதைப்போல காலம் இன்னமும் அதிகமாக இருக்காமல் போகலாம்.
09. வாழ்வை அனுபவிப்பதென்றால் அதற்கு இதுதான் நேரம். அது நாளையோ அடுத்த வருடமோ நாம் இறந்த பிறகோ வரப்போவதில்லை.
10. அடுத்த வருடம் சிறப்பாக வாழ்க்கை அமைய வேண்டும் என்றால் இந்த வருடம் முழுமையாக, மனத்திருப்தியுடன், சந்தோஷமாக, மன ஈடுபாட்டுடன் வாழ வேண்டும்.
11. பிரபஞ்சம் ஒரு படைப்பு, ஒரு குழப்பமல்ல. பகல் இரவு போல மனிதனும் பிரபஞ்சத்தில் ஒரு பாகம்தான். நன்றாகத் தேடினால் நீ பெற வேண்டிய அறிவு முழுவதும் இந்தப் பிரபஞ்சத்திலேயே இருப்பதைக் கண்டு கொள்வாய். பிரபஞ்சத்தில் பாடம் கற்க தெரிந்தவனுக்கு பல்கலைக்கழகம் ஏன்..?
12. நம்பிக்கை இருக்குமிடத்தில் வீரம், மனோபலம், விடா முயற்சி, வலிமை எல்லாமே இருக்கும். கடவுள் நம்மோடு இருந்தால் எவரால் நம்மை எதிர்க்க முடியும் ?
13. நம்பிக்கையே வாழ்வின் பிரச்சனைகள் ஏமாற்றங்களை கடந்து மேலேறும் தைரியத்தைத் தருகிறது. அது தோல்வியை வெற்றிக்கான படிக்கட்டாக நினைக்குமே அல்லாது அதை ஏற்றுக் கொள்ளாது.
14. தெளிவுடன், தன்னம்பிக்கையுடன் நடந்து செல்லுங்கள், மேலே ஒரு கை உங்களை வழி நடாத்தும்.
15. எல்லையற்ற வானில் நீங்கள் பறந்து செல்ல வழி நடாத்துபவன்தான், தனித்தே செல்லும் உன் நீண்ட பாதைக்கும் வழியைக் காட்டுகிறான் கவலைப்படாமல் நட…
16. உங்கள் தினசரி கடமைகளை முடித்த பிறகு அமைதியுடன் உறங்குங்கள், ஆண்டவர் விழித்தபடி இருக்கிறார்.
17. சூரியனின் வெப்பத்தால் வரண்டுவிடாத ஆழமான உணர்வின் ஊற்றுத்தான் அமைதி. நமக்கு மேலான இடத்தில் இருந்து வரும் உணர்வு அது. அதைப் பெறவோ அடையவோ நமக்கு சக்தி இல்லை, ஆனால் அது வரும்.
18. நடந்திருப்பதைப் பார்த்து சோர்ந்திருக்க வேண்டாம், கடவுள் எல்லாவற்றையும் சரியாகத்தான் செய்வார்.
19. மற்றவரைப் போல துயரப்படாதீர்கள், இறந்தவர்களுக்கு இன்னமும் இருக்கிறதென உணருங்கள். எல்லா விடயங்களுக்கும் முடிவு வருவதாக நினைத்து பயப்படும் நாள்தான் நீங்கள் எல்லையற்றதாக மாறும் பிறந்த நாள்.
20. கனவுகளைவிட பிரார்த்தனைகளாலேயே அதிக விடயங்கள் நடக்கின்றன. எனவே உங்கள் குரல் இரவும் பகலும் ஊற்றுப்போல உயரட்டும்.
21. உண்மையான நம்பிக்கையுடன் இதயத்தின் அடி ஆழத்தில் இருந்து கடவுளைக் கூப்பிடுபவர்களுக்கு அவர் செவி சாய்ப்பார். அவர்கள் கேட்டது, ஆசைப்பட்டது, கட்டாயம் கிடைக்கும்.
22. உண்மையான பிரார்த்தனையை நீங்கள் பழக்கமாக்கிக் கொண்டால் உங்கள் வாழ்வு முழுவதுமாக குறிப்பிடத்தக்கவகையில் திசை மாறும்.
23. ஆன்மிக உணர்வுகளில் நாம் எப்படியாவது நம்பிக்கை கொள்ள வேண்டும். நாம் நம்மை அழித்துக் கொள்ளாமலிருக்க நம்மைக்கடந்த ஒன்றை நாம் வழிபட வேண்டும்.
24. உங்கள் துயரத்தை நீங்கள் மறந்துவிடுங்கள், அது தண்ணீர் ஓடுவதுபோல ஓடி மறைந்துவிடும்.
25. பிரபஞ்சத்தின் அடிப்படையான பொருள் ஒரு நதி தொடர்ந்து ஓடுவதைப்போல ஓடிக்கொண்டிருக்கிறது. அதுபோல எல்லாப் பொருட்களும் தொடர்ந்து மாறிக்கொண்டிருப்பது மட்டுமன்றி, மற்றப் பொருட்களிலும் தொடர்ந்து முடிவில்லா மாற்றங்களை ஏற்படுத்திவிடுகின்றன. ஆகவே மாற்றங்களால் கவலைப்படாதே.
No comments:
Post a Comment