லலிதாசகஸ்ரநாம பாராயணத்தின் மகத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள்
ஓம் ஸ்ரீ மாத்ரே நம: என்னும் முதல் நாமாவளியே உயர்ந்தது தான். மாதா என்றால் அன்னை. தாய்க்கு நமஸ்காரம் என்பது இதன் பொருள். உரையாசிரியர்களின் உரையினால் சிறப்பு பெற்றவை இரண்டு. ஒன்று லலிதா சகஸ்ரநாமம். மற்றொன்று விஷ்ணுசகஸ்ரநாமம்.
பாஸ்கரராயர் என்பவரால் "ஸெ...ளபாக்ய பாஸ்கரீ' என்னும் பெயரில் உரை எழுதப்பட்டது லலிதாசகஸ்ரநாமம். அவர் தமது உரையில் முதல் நாமாவளியாகிய ஸ்ரீமாதா என்பதற்கு மட்டுமே மிக விரிவாக உரை எழுதியுள்ளார். மாதா என்றால் தாய். ஸ்ரீமாதா என்றால் எல்லையில்லாக் கருணையுடைய தாய். ஆனால் உரையாசிரியர் பல பொருள் தரும் ஒரு சொல்லாக அதனைக் குறிப்பிடுகிறார். "ஸ்ரீ' என்பதற்கு அழகு, பெருமை, மகிமை, செல்வம், லட்சுமி என்னும் பொருள்களோடு விஷம் என்ற பொருளும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்த போது வெளிப்பட்ட விஷத்தால் பலர் மூர்ச்சையாயினர். எல்லோரும் சிவனைத் தஞ்சம் அடைந்தனர். அவர்களைக் காப்பாற்ற, விஷத்தைத் தானே விழுங்க முன்வந்தார் அவர். விஷத்தின் கொடுமையால் பெருமானது உடலிலும் வயிற்றிலும் உள்ள மற்ற உலகங்கள் பாதிக்கப்படுமே என்று அஞ்சினாள் உமாதேவி. தொண்டையிலேயே தடுத்து நிறுத்தி உயிர்களைக் காப்பாற்றினாள். ஸ்ரீ என்றால் விஷம். "மாதி' என்றால் தடுத்து நிறுத்தியவள் என்று பொருள். இலக்கணக் குறிப்புகளால் ஸ்ரீமாதி என்பதே "ஸ்ரீமாதா'வாகி நாமாவளியில் நான்காம் வேற்றுமையாக "ஸ்ரீமாத்ரே நம:' என்றாகியது என்று அவரது உரையில் உள்ளது. எனவே, லலிதா சகஸ்ர நாமாவளிகளில் எல்லாமே உயர்ந்தவை தான். எப்போது வேண்டுமானா<லும் பாராயணம் செய்யலாம். இதனால் வாழ்வில் எல்லா சவுபாக்கியங்களும் கிட்டும்.
No comments:
Post a Comment