Thursday, January 2, 2014

வாயுள்ள பிள்ளை பிழைக்கும் (பேச்சாற்றல்) - 2

வாயுள்ள பிள்ளை பிழைக்கும் (பேச்சாற்றல்)

                                        சொலல்வலன் சோர்விலன் அஞ்சான்அவனை
                                                இகல்வெல்லல் யாருக்கும் அரிது.

1.வள்ளுவப் பெருந்தகை வெற்றி மனிதனுக்கு கொடுத்துள்ள இலக்கணம் இது .சொலல் வலன் என்றால் நாம் சொல்ல வேண்டிய கருத்துக்களை சூழ்நிலைகளுக்கேற்ப மற்றவர்களை கவரும் படியாக பேசக்கூடிய வல்லமை பெற்றவன் என்று அர்த்தம்.வெற்றி மனிதனுக்கு இலக்கணம் வகுக்கையில் வள்ளுவர் முதல் ஆற்றலாக பேச்சாற்றலை கூறுகின்றார்.

2.  நாம் இந்த சமூகத்தில் பல நிலைகளிளும் நமது கருத்துக்களை மற்றவர்களுக்கு கூற பேச்சை பயன்படுத்துன்கிறோம்.இந்த ஆற்றலை திறம்பட பயன்படுத்தியவர்கள் தான் தன்னையும் ,மற்றவர்களையும் ,உலகையும் வெல்லுகின்றார்கள் .பேச்சாற்றல் என்னும் போது அதன் மூலம் இந்த உலகையே ஆட்டிப்படைத்த அடால்ப் ஹிட்லரை நினைக்காமல் இந்த பாடத்தைப் படிக்க முடியாது .முதல் பாடம் : ஹிட்லரின் அழிக்க முடியாத பேச்சாற்றல் பற்றிய ஒரு காணொளி கீழே.

3.  ஹிட்லர் அளவிற்கு யாரும் பேச்சாற்றல் மூலம் ஒரு பெரும் மக்கள் கூட்டத்தையே தனது ஆளுகையில் வைத்திருந்தவர் வேறு எவரும் கிடையாது .பேச்சாற்றலை வளர்த்துக் கொள்ள ஒவ்வொருவரும் ஒரு மாடலை வைத்திருக்க வேண்டும் .பேச்சாற்றல் என்பது பலநிலைகளில் பயன் படுத்தக் கூடிய ஒரு பெரிய ஆற்றல் ஆகும்.

4.இவ்வளவு பெரிய பேசுக்கலை  வல்லுநராக நாம் ஆகாவிட்டாலும் ,முடிந்த அளவிற்கு நமது பேச்சாற்றலை வளர்த்துக் கொள்ள சில டிப்ஸ்கள் .

1.பேச்சின் முதல் எதிரி மேடை பயம் தான்,இதனை முதலில் நாம் வெல்ல வேண்டும் .இதற்கு நாம் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கிடைக்கும் மேடைகளில் பேசி நமது மேடை கூச்சத்தை போக்க வேண்டும்.

2.நீங்கள் தானாக முன் நிற்காமல்   சந்தர்ப்பம் காரணமாக மேடையில் பேச வேண்டிய சூழ்நிலை வந்தால் அதைக் கண்டு அஞ்சவேண்டாம்.எந்த ஒரு விசயத்திலும் அச்சத்தை போக்ககூடிய முதல் விதி என்ன தெரியுமா?

3.நீங்கள் எதைக் கண்டு அச்சப் படுகின்றீர்களோ அந்தக் காரியத்தை திரும்ப திரும்ப செய்து கொண்டே இருங்கள் அச்சம் தானாக கழன்று விடும்.

4.திட்டமிடப் பட்ட கூட்டங்களுக்கு செல்லும் போது பேச வேண்டிய கருத்து பற்றி முன் ஏற்பாடாக செல்லுங்கள்.

5.நமது பேச்சை கேட்பவர்கள் சமூகத்தில் எவ்வளவு பெரிய நிலையில் இருந்தாலும் அந்த கூட்டத்தில் உள்ள அனைத்து நபர்களும் நீங்கள் பேசப் போகும் விசயத்தில் மிகுந்த விசயம் தெரியாதவர்கள் என்று நினத்துக் கொள்ளுங்கள்.

6.வரிசைக் கிரமத்தில் உங்களுக்கு முன்னே  பேசிய பேச்சாளர்களின் பேச்சில் உங்கள் மனதை இழந்து விடாதீர்கள் ,அப்புறம் அவரை விட சிறப்பாக நீங்கள் பேசமுடியாது.

7.மற்றவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது அவர்களது கருத்துக்கள் உங்களது கருத்துக்களை விட சிறியது என்று எண்ணுங்கள் .

8.கிடைக்கும் சந்தர்ப்பங்களை யெல்லாம் நழுவவிடாமல் இப்படி பேசிக் கொண்டேயிருந்தால் ஒரு நாள் உலகம் புகழும் பேச்சாளராகலாம். 

No comments:

Post a Comment