ஒளி பரவட்டும் - 2014 !!!
2014, ஜனவரி (இந்த) மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளி வந்த தலையங்கம்
புத்தாண்டில் நம் இந்திய ஜனநாயகத்தின் அரசியலில் புதிய ஒளி பிறந்திருக்கிறது. ஊழலுக்கு ம் பணநாயகத்திற்கும், ஜாதி மத அரசியலுக்கும் வாங்கு வங்கி இலவசங்களுக்கும் மாற்றுச்சக்தி இந்தியாவில் ஏற்பட வாய்ப்பேயி ல்லை என்று விசனப்பட்டவர்களி ன் கவலையை கழற்றி வைக்க எங்கிருந்தோ அல்ல … நமக்குள்ளிருந்தே நம்பிக்கை நாதம் ஒலித்
தி ருக்கிறது.
ஆம்! ஆம் ஆத்மி என்ற சாமான்யர்களுக்கான புதிய அவதா ரம் படித்தவர்களின் குறிப்பாக இளைய சமுதாயத்தின் புதிய ஏற்பாடாய் புறப்பட்டிருக்கிறது.
அசைக்க முடியாத காங்கிரசை புது தில்லியிலிருந்து அடையா ளம் தெரியாமல் போக வைத்த னர். இனிமே நாங்கதான் என்று இறுமாந்திருந்த பாரதிய ஜனதாவையும் பயப்பட வைத்திரு க்கிறது இந்த ஆம் ஆத்மி!
ஜாதி, மத, அரசியல், பொருள ற்ற பின்புலம் இல்லாமல் . . . அண்ணல் காந்திக்கு அடுத்த படியாய் அஹிம்சை வழி யில் அறப்போராட்டம் நடத்திய அன்னா ஹசாரேவும் அவரது ஊழலுக்கு எதிரான இந்தியா, முழக்கமும் கடந்த சில ஆண் டுகளாக செய்து வந்த மௌனப் புரட்சியின் வெற்றி தான் புது தில்லியின் புதிய ஆட்சி!
தனியொரு மனிதனால் நாறிப்போன இந்திய அரசியல் சாக் கடையை சுத்தப்படுத்த முடியுமா?
படைபலம், அரதிகார பலம் , ஆள்பலம், ஜாதி வெறி, மத வெறி, இலவ ச வாக்குறுதி களை மீறி அனுபவம் இல்லாத ஆம் ஆத்மியில் செங்கோட் டையின் செங்கல்லை உருவ முடியுமா ?
பிரச்சார பீரங்கிகள், பேரணிகள், தேர்தல் பிரம்மாண்ங்கள் எதுவுமே இல்லாத இவர்களால் வாக்காளர்களை கவர முடியுமா? என்ற அத்தனை கேள்விகளுகுகம் முடியும் என்று வாக்காளர்கள் நெற்றிக் கண்ணைத் திறக்க அரவிந்த் கெஜ்ரிவால் என்ற ஃபீனிக்ஸ் பறவை பிறந்திருக்கிறது.
வாடகை வீடு, பாதுகாப்பு மறு ப்பு, ரயிலில் பயணம், சுழலும் விளக்குக்கு தடை, மக்களி டமே கருத்துக்கேட்டு ஆட்சி அமைத்த புதுமை, அடடே ,ஆரம்பமே அமர்க்களம்!
அரவிந்த் ஜெஜ்ரிவால் கட்சியின் சின்னமான துடைப்பம் ஊழல் பெருச்சாளிகளை ஓட ஓட விரட்டட்டும்!
பழைய அரசியலை பெருக்கி குப் பையில் போடட்டும்!
பணத்தாலும், ஜாதிமதப் பெயரி லும் அழுக்கேறிப் போன வாக்கு ச்சீட்டைச் சுத்தம் செய்யட்டும்.
புது தில்லியில் தெரிந்து கொள்ள புதிய ஒளி . . .
பாரத தேசமெங்கும் பரவட்டும்! நம் நாடு நல்லவர்களால் நல்லவைகளாய் நிறைந்து செழிக்கட்டும்.
No comments:
Post a Comment