வாய்ப்பை தவறவிடாதீர்கள்
தொழில் செய்யும் நண்பர்களுக்கு மற்றும் பல பிரச்சினைகள் மாட்டிக்கொண்டு தவிப்பவர்களுக்கு என்று உதவி வருகிறேன். நான் உங்களுக்கு உதவுகிறேன் என்று சொல்லிவிட்டால் கண்டிப்பாக அம்மன் உங்களுக்கு உதவி செய்யும்.
அம்மன் செய்யும் உதவியை நீங்கள் சரியாக பயன்படுத்தவும் அப்படி சரியாக பயன்படுத்தினால் உங்களால் வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலைக்கு சென்று விடலாம். இதனை சரியாக பயன்படுத்தவில்லை என்றால் உங்களால் மிகஉயர்ந்த நிலைக்கு செல்வது கடினம்.
முதல் உதவி செய்யும்பொழுதே அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டவர்கள் பல பேர் இருக்கின்றனர். பாதி பேர்கள் அதனை சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டனர்.
ஒரு சக்தி நமக்கு உதவுகிறது அதனை வைத்து நாம் அனைத்தையும் சாதித்துவிடவேண்டும் என்ற எண்ணத்தை வைத்துக்கொண்டு செயல்பட்டால் போதும் நீங்கள் இருக்கும் பகுதியில் நீங்கள் தான் நம்பர் ஒன் என்ற இடத்தில் இருப்பீர்கள்.
நான் செய்துக்கொடுப்பதில் எந்த வித பொய்யும் இருக்காது நன்றாக உங்களுக்கு தெரியும். யாரால் இது நடைபெறுகிறது என்று தெரிந்தும் வாய்ப்பை தவறவிடுவது உங்களின் தவறான நடவடிக்கையால் மட்டுமே இருக்கின்றது.
ஒரு வாய்ப்பை இறைவன் உங்களுக்கு கொடுக்க என்னை படைத்திருக்கிறார் என்றால் அந்த வாய்ப்பில் நீங்கள் ஒழுங்காக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மறுபடி மறுபடியும் வாய்ப்பை இறைவன் ஏற்படுத்திக்கொடுக்கமாட்டார். அதே நேரத்தில் ஒரு சிறு முன்னேற்றம் வந்துவிட்டவுடன் அப்படியே ஆடி கீழே விழுந்து விடகூடாது அடுத்த வாய்ப்பையும் என்னிடம் இருந்து எப்படி பெறவேண்டும் என்பதற்க்கு முயற்சி செய்யவேண்டும்.
இனிவரும் நண்பர்களும் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டு இதில் வெற்றி அடைய வேண்டும். வாய்ப்பை தவறவிட்டுவிடாதீர்கள்.
No comments:
Post a Comment