ஆரோக்யத்துக்கு மௌனம் மிக அவசியம்
மனிதன் மொழியை படைத்தான் அவன் படைத்தில் அவனுக்கு உதவியாய் இருப்பதை விட உபத்திரவாய்ப்போனது பல அதில் பிரதானமானது மொழி, மனிதன் மகிழ்வாக வாழ்விரல் விட்டு என்னக்கூடிய வார்த்தைகளே போதுமானது
அதனால் ஏற்பட்ட புரிந்து கொள்ளலைவிட முட்டாள் மொழியினால் ஏற்பட்ட புரிந்து கொள்ளாமையே அதிகம் அவன் பேச்சினால் உருவான நட்பு குறைவு அவன் வாயை திறந்தால் வந்த வம்பு மிகமிக அதிகம்.
தவளை கெட்டது வாயாலே மனிதன் கெட்டதும் வாய்மொழியிலே
- மார் தட்டுவது வெட்டி வீரம் பேசுவது
- போரை வளர்த்தது நையாண்டி செய்வது
- குதர்க்கம் பேசுவது நட்பை முறித்தது பேச்சிகளால் உறவு முறிகிறது
- உலகம் குலுங்குகிறது வார்த்தைகளால் கலகம் பிறக்கிறது கடலும் கலங்குகிறது
இன்று மனிதன் மொழியைநல்லபடியாக உபயோகிக்க மறந்து விட்டான்
- காதலை வளர்க்க
- கவிதை செழிக்க
- அன்பு பெருக்க
- ஆதரவு காட்ட பயன்பட்டது மொழி அன்று
- இன்றோ வம்பு வளர்க்க,
- வாதம் செழிக்க,
- விதண்டா வாதம் செய்து வீணே காலம் செல்ல காரண்மானது
பட்டிமன்றங்கள்,பாராளுமன்றங்கள் என செயலை மறந்து வார்த்தை ஞாலம் என்னும் கல் குடித்து ஆடுகிறது மனித இனம் நாட்டிலே மட்டும் மல்ல வீட்டிலே கூட ஒரு முகத்தில் மெளனமாக சொல்லக் கூடிய அன்பென்பது மொத்தமான வார்த்தைகளால் தடித்து முறிகிறது திருமண்ங்கள்.
கட்சிகளும் கோஷ்டிகளும்
- பூசல் வளர்க்கவே பேச்சு பயனாகிறது
- ஒவ்வொரு வார்த்தையிலும் ஒரு துளி உதிரம் கண்டுகிறது
- ஆத்திரமான பேச்சுகளால் அதிரயாகிறது நரம்புகளும்
- ஒவ்வொரு பேச்சிலும் நம் மூச்சின் உயிர் சக்தி விரயமாகிறது
- மெளனம் ஒரு தவம், மெளனம் ஒரு தியானம்
- மோனம் ஒரு ஏகாந்தம், மெளனம் ஒரு மகாசக்தி
- மெளனம் உலகின் சிறந்த மொழி
- ஆயிரம் வார்த்தை சொல்லாத அர்த்தங்களை
- ஒரு நொடி மெளனம் சொல்லும்
- மனமடங்கும் அமைதி ஒரு ஆனந்தம்
அதிலும் வாயடங்கும் அமைதி அது பேரானந்தம் ஒரு நொடி பேச்சிலே ஒரு நிமிட ஆயுள் குறைகிறது இறைவன் பேசுவதில்லை
மெளனமாக நிற்கிறான்,அதனால்தான் இன்னும் நிற்கிறாற் நிலைக்கிறான் நம்மைப் போல பேசினால் அவன் புகழம்போகும். மெளனத்தின் மகிழ்ச்சியை மெளனமாக இருந்து பார்த்தாலே புரியும்.
No comments:
Post a Comment