உன்னை விமர்சனம் செய்தவன் உன்னைத் திருத்த வந்த ஆண்டவனே….
நட்பு
நட்பு
- செல்வரின் வரவேற்பு நிறமிருந்தும் மணமில்லா காகிதப்பூ
- வறியவரின் வரவேற்பு நிறமிருக்கும் மணமுள்ள மலர்ந்த பூ
- நல்ல பொருள் வேண்டினால் நல்ல விலை கொடு
- நல்ல நன்பனை வேண்டினால் நல்ல நன்பனாக இரு
- நல்லதுக்கு மட்டுமே தலையாட்டுபவன் நன்பன்
- சொல்வதற்கு எல்லாம் தலையாட்டுபவன் கள்வன்
- நட்பு என்பது பொழுது போக்கு வாய்ப்பு அல்ல
- நட்பு என்பது நன்மை காக்கும் பொறுப்பு அல்லவோ
- வழுக்கும் போது கைபிடியாய் வந்து நிற்பவர் நன்பரே
- சறுக்கும் போது கைத்தடியாய் வந்து நிற்பவர் கடவுளே
- நெம்பி விடும் கோலாவது நேசமுள்ளவர் வார்த்தை
- தெம்பு தரும் உணவாவது பாசமுள்ளவர் பார்வை
- நமது உணவைக் கூட நன்பனுடைய சேவைக்காக தள்ளிப் போடலாம்
- நமது மகிழ்வைக் கூட நட்பினுடைய துயரத்துக்காக தள்ளி வைக்கலாம்
- உன்னிடம் சந்தேகம் கேட்டவன் உன்னைக் தெளிய வைத்த ஆசானே
- உன்னை விமர்சனம் செய்தவன் உன்னைத் திருத்த வந்த ஆண்டவனே
- ஒரு செயலை செய்தபின் சிந்திப்பவர்க்கு வெற்றியில்லை
- ஒரு சொல்லை சொல்லிய பின் சிந்திப்பவர்க்கு நன்பரில்லை
No comments:
Post a Comment