நமது தகுதியை மறிப்பவர்கள்.
1.மனிதன் கண்ணாடிச் சிந்தனை மூலமாக மற்றவர்களிடம் இருந்து தனது எண்ணங்களை விதைத்து செயல்களைப் படைக்கின்றான்.இந்த செயல்கள் பொருட்கள் வாயிலாக ,பருப்பொருட்கள் வாயிலாக சில சமயங்களில் வெளிப்படுத்டப்படுகின்றன.எல்லா செயல்களும் விளைவிக்கப்படும் இடம் மனிதர்களுடைய மனங்களே.ஒரு செயலுக்கு ஊக்கசக்தி அல்லது எரிபொருள் அல்லது உணவு சிந்தனைகளே .செயல்கள் தனி மனித சிந்தனை மூலமாக தனி மனிதனிடம் தோன்றிப் பொருட்களில் பரிணமிக்கின்றது.
2.மனிதன் இடையறாது பூமியிலும் தற்போது வான்வெளியிலும் தனது காரியங்களை ஆற்றி வருகின்றான்.மனிதனது இந்தக் காரியங்கள் அணைத்தும் மனிதர்களிடையேயும் பொருட்களிடையேயும் ஊடுருவிக் கிடக்கின்றது.மனிதன் முழுக்க முழுக்க தத்துவ ரீதியாகத் தான் வாழ்ந்து வருகின்றான்.அவனது வாழ்க்கையினூடே பொருட்கள் கூட தத்துவங்களின் வெளிப்பாடாகவே அமைந்து இருக்கின்றது.
3.அழுத்தமும் பலவீனமும், பிரதிபலித்தலும் உள்வாங்கலும் ,தன் வழிச் செய்தலும் பிறர் வழிச் செய்தலுமாக மனிதனின் அன்றாடப் பணிகள் எதுவாக இருந்தாலும் அவர் விஞ்ஞானியாக இருந்தாலும் சரி ஊர் மேடையில் படுத்திருக்கும் மெய்ஞானியாக இருந்தாலும் சரி .ஒரு மனிதனின் மன உணர்வு மற்றொரு மனிதனுக்கு உணவு .இது எப்படி ?நாம் ஒரு பணியைச் செய்கின்றோம் அதனை நமது மனதில் தோன்றும் ஆர்வம் ,கட்டாயம்,படைப்பாற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் மற்றவர்களுக்காகத் தன் மூலம் செய்கின்றோம்.
4.நாம் செய்யும் பணிச் சிந்தனை ஆர்வம் ,கட்டாயம்,மற்றும் படைப்பாற்றல் மட்டுமே.இவை மனதில் தோற்றுவிக்கும் எண்ணங்கள் மட்டுமே நமது பணி.இதன் ஊடே கோப்புகளும் ,இயந்திரங்களும் இருந்தால் அவைகள் வெறும் அளவீடுகள் மட்டுமே.அவைகள் நமது உண்மையான பணி கிடையாது.நாம் ஒளியைக் காண வேண்டும் என்றால் இரண்டு வழிகள் இருக்கின்றன ஒன்று அந்த ஒளி உமிழும் பொருளைக் காண்பது இல்லையென்றால் அதனைப் பிரதிபலிக்கும் கண்ணாடியைக் காண்பது .இப்படித்தான் நமது மன உணர்வுகளும்.நம்து
5.நாம் இந்த பிரபஞ்ச வெளியில் எதை உமிழ்கின்றோமோ அதனை பிரபஞ்சக் கண்ணாடி பிரதிபலித்து நமக்கே காட்டும்.நாம் இதனை உணரும் அளவில் பண்பட்டு இருந்தால்.நாம் எதனை எதிர்பார்க்கின்றோமோ அதனை கவர்ந்திழுக்கின்றோம்,நாம் எதனை விரும்புகின்றோமோ அதனை பிரதிபலிக்கின்றோம்,நாம் எதற்குத் தகுதியாக இருக்கின்றோமோ அதனை அடைகின்றோம்.இப்படித்தான் மனிதர்கள் ஒவ்வொருவரும் காரியங்களைத் தினம் தோறும் படைத்துக் கொண்டே இருக்கின்றோம்.அவைகள் பொருட்களிலும் ஊடுருவி இருக்கின்றது.
6.நாம் எப்போதும் வெளியே காண்கின்ற காட்சிகள் அணைத்தும் நமக்கு உள்ளே இருந்து தான் வருகின்றது.இப்போது ஒரு கேள்வி ஒரே சமயத்தில் இரண்டு நபர்கள் ஒரே இடத்தில் ஒரே விளைவை விரும்புகின்றார்கள் அப்போது அந்த விளைவு யாருக்குச் சாதகமாக இருக்கும்?இரண்டு நபர்களுக்குள்ளும் ஏற்படும் உணர்வுகளை பிரதிபலிப்பது தானே சூழ்நிலை?.இப்போது தான் அழுத்த விதி செயல் பட ஆரம்பிக்கின்றது யாருடைய சிந்தனையில் அழுத்தம் அதிகமோ அவர்களது சிந்தனைக் காட்சி வெற்றி பெறுகின்றது.
7.வெளிச் சூழல் அழுத்தம் அதிகமானவருக்குச் சாதகமாகின்றது.பாதகமானவருடைய மனம் தானாகவே அவரது வெளி உணர்விற்குத் தெரியாமல் சாதகத்தின் அழுத்தத்திற்குக் கட்டுப்படுகின்றது .தனது மனநிலையை உள்முகமாகவே மாற்றிக் கொள்கின்றது வெளியே அழுத்தத்திடம் அமுங்கிப் போக.இப்படித்தான் நாள் தோறும் காரியங்கள் மனிதர்களால் படைக்கப்படுகின்றன.இதனால் தான் வாழ்க்கை ஒரு இடைவிடாத போராட்டக்களமாக நம்மால் உணரப்படுகின்றது. போராட்டத்தைத் தொடருவோம் புதிய கோணத்துடன்.
No comments:
Post a Comment