உங்களால் முடியாத போது.
1.ஒரு காரியம் செய்து முடிக்கப்படும் வரை அது முடியாத காரியமாகத்தான் மதிப்பிடப்படுகின்றது.மனிதர்கள் அனைவரும் மற்ற உயிரினங்கள் தாவரங்கள் எல்லா இயற்கைப் பொருட்களும் கண்ணுக்குத்தெரியாத ஒரு இயற்கை சங்கிலியால் இனைக்கப் பட்டுள்ளார்கள்.நாம் விடும் ஒரு மூச்சுக்காற்றின் சத்தம் கூட பிரபஞ்சத்தின் கடைசி வரை உணரப்படுகின்றது.ஆனால் இதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்களை அறிவியல் உலகில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெறப்பட்டதாகத் தெரியவில்லை.
2.ஆனால் நமக்கு ஒன்று எளிதாக புரிந்து கொள்ள முடியும் ஒரு மனிதனின் உணர்வுகள் இன்னொரு மனிதனைப் பாதிக்கின்றது. அது நல்ல விசயமானாலும் சரி மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் எண்ணமானாலும் சரி .இந்த பாதிப்பு அதன் வலிமையைப் பொறுத்து ஒரு நீண்ட சங்கிலித் தொடராக எண்ணத்தைத் தோற்றுவித்த மனிதர் இணைந்திருக்கும் மனிதர்களைச் சென்று பாதிக்கின்றது இது நம் அனைவருக்கும் தெரியும்.
3.மனிதர்கள் அனைவரும் மன எண்னங்களைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி என்று சொல்லுவார்கள்.நாம் ஒருவரது எண்ணத்தை ஒருவர் பிரதிபலித்து அதன் மூலம் செயல்களைப் படைத்து வாழ்ந்து வருகின்றோம்.எல்லோருடைய மனதிலும் இருக்கின்ற ஒரு குறிப்பிட்ட செயல் பற்றிய கருத்தை ஒரு மனிதன் முழுவதுமாகப் பிரதிபலித்து அதனை சமூகத்தில் பிரதிபலித்து ,எல்லோரும் உணரும்படி செயல் ஆக்குகின்றான் .எல்லோருடைய மனதிலும் உள்ள மனக் குழப்பங்களை மட்டும் ஒருவன் பிரதிபலித்து முழுவதும் மனக் குழப்பம் உடையவனாகப் பார்க்கப் படுகின்றான் .
4.இதனை நிரூபணம் இல்லை என்பதற்காக முழுவதும் மறுத்துவிட முடியாது. நமது மனதில் ஒரு குறிப்பிட்ட வக்கிரமோ, நல்லதோ, கெட்டதோ, வளர்ந்து நம்மால் அறுவடை செய்யும் முன்பாக சமூகத்தில் உள்ள ஒரு நபர் அதனைக் கவரத் தன்னைத் தகுதியுடைவராக்கினால் அந்தக் குறிப்பிட்ட வக்கிரத்தையோ,நல்லதையோ,கெட்டதையோ கவர்ந்திழுத்து அதனைத் தன்வழியாக சமூகத்தில் வெளிப் படுத்துகின்றார்.
5.அந்த வகையில் அவர்கள் மனவியல் ரீதியாக மனிதன் எப்படி சிந்தனை செய்து செயல்களைப் படைக்கின்றான் என்பதனையும் இயற்கை மனிதனின் சிந்தனையிலும் செயலிலும் எப்படித் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதையும் கற்றுப் பழகவில்லை என்று தான் கூறமுடியும்.தனி மனிதனை மட்டும் இதற்கு இலக்காக்குவது என்பது அந்தக் குறிப்பிட்ட தனி மனித வக்கிரத்தை முழுவதும் ஒழித்துவிட்டதாகக் கொள்ள முடியாது .
6.மேலும் இப்படிப்பட்ட மற்றவர்களின் மன எண்ணங்களை ஈர்ப்பவர்கள் மற்றவர்கள் மனதில் உள்ள அடுத்தவர்களுக்குத் தீங்கைச் செய்யும் எண்ணங்களையும் கவர்ந்திழுத்து விடுவதால் அந்தக் குறிப்பிட்ட மன உணர்வுகளை மனதில் வளர்த்துக் கொண்டிருக்கும் மற்ற நபர்கள் ஜாக்கிரதை உணர்வை அடைந்து அந்தக் குறிப்பிட்ட தவறைச் செய்யாமல் தப்பித்துக் கொள்ளுகின்றார்கள்.
7.தனி நபர்களின் இப்படிப்பட்ட மனப் பண்புகளை ஈர்ப்பவர்கள் துன்பத்தை அடைகின்றார்கள் மற்றவர்களுடைய மன உணர்வுகளைத் தாங்கள் ஈர்த்துள்ளோம் என்பது தெரியாமலேயே.இதனால் தான் மனிதன் கண்ணுக்குத் தெரியாத சங்கிலியால் இணைக்கப்பட்டிருக்கின்றான் என்பதை மறுக்க முடியாது என்கின்றோம்.
8. பல மனிதர்களின் மனதில் தனித் தனியாக வளர்க்கப்படும் எண்ணங்களை ஒரு மனிதன் மூலமாக வெளிப்படுத்தப்பட முடியுமா? இப்படிப்பட்ட நிகழ்வுக்குக் காரணம் மனிதன் முழுவதுமாக இணைக்கப்பட்டுள்ளான்,ஒரு குடும்பத்தினை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் தலைவனின் மன உணர்வுகுடும்ப உறுப்பினர்கள் எல்லோரையும் பாதிக்கின்றது .அந்தக் குடும்ப உறுப்பினர்களை அதிக அளவில் அவனுடைய மன உணர்வு பாதிக்கின்றது.அந்தக் குறிப்பிட்ட குடும்பத்துடன் தொடர்பில் உள்ள உறவினர்களைக் குறைந்த பட்சமாகப் பாதிக்கின்றது. அந்தக் குடும்பத்தின் தாக்கம் ,தொடர்பு ஆகியவைகள் மற்றவர்களைப் பொறுத்து சமூகத்தில் எந்த அளவிற்கு இருக்கின்றதோ அந்த அளவிற்கு சமூகத்தையும் பாதிக்கின்றது.
9.எறும்புக் கூட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அதன் சமூகத்தை படைப்பது ராணி எறும்பு தான் அந்த ராணி எறும்பைச் சுற்றியே எறும்புகளின் சமூகம் தனது பணிகளைச் செய்து கொண்டிருக்கின்றது. ஒரு குறிப்பிட்ட கூட்டத்தின் ராணி எறும்பை மட்டும் தனியாகப் பிரித்து உலகின் எந்த மூலையில் வைத்திருந்தாலும் அந்த எறும்பு க் கூட்டம் இயங்கிக் கொண்டே இருக்குமாம்.அந்த ராணி எறும்பு எப்போது சாகின்றதோ அப்போது தான் அந்தக் கூட்டத்தின் செயல் பாடுகளில் சமமின்மை ஏற்படுமாம். எறும்புகளின் எந்த சக்தி அதன் ராணி எறும்பை உலகின் எந்தப்பகுதியில் இருந்தாலும் மற்ற எறும்புகளை இயக்குகின்றதோ,அந்த சக்தி தான் இந்த சங்கிலித் தொடர்பு கோட்பாட்டை புரிந்து கொள்வதன் அடிப்படை.
10. இந்த விதியை நாம் உணரும் போது சமூகத்தின் ஏதாவது ஒரு இடத்தில் இருந்து நமது நன்மைக்காக நமது காரியங்களை இந்த சங்கிலித் தொடர்புவிதி மூலமாக விரைவு படுத்தலாம்.நமது மனதை ஆக்கிரமித்துள்ள ஏதாவது ஒரு குற்ற உணர்வில் இருந்து மனச் சாந்தி பெறலாம்.நமது மனச்சங்கிலி உறவு எப்போதாவது செயல்படவில்லை அதில் ஏதோ தடங்கல்கள் ஏற்படுகின்றது என்றால் அதனை அடுத்த ஏதாவது ஒரு கன்னியில் இருந்து சீர் படுத்தலாம் .
11.நாம் மற்றவர்கள் மனதில் ஏற்படுத்தும் மாற்றங்கள் ,உணர்வுகள் இந்த சங்கிலித் தொடர் உறவில் செலுத்தப்பட்டு மீண்டும் நம்மிடமே திரும்பி வரும்.நமது வாழ்வில் தேக்கங்களோ ,சோதனைகளோ நம்மால் எப்படி முயன்றும் மாறாமல் இருக்கின்றதா?அப்படி என்றால் இந்த சங்கிலித் தொடர் உறவை நாம் சீர்திருத்த வேண்டும் எனலாம்.
12. இந்த சங்கிலித் தொடர் உறவில் அதன் ஏதாவது ஒரு இடத்தில் இருந்து வெடிக்கு தீ வைப்பதைப் போன்று வையுங்கள்.இதன் மூலம் நமது தடைப்பட்ட சங்கிலி உறவுகள் சரிப்படுத்தப்படலாம்.ஒரு உதாரணத்திற்குச் சொல்லுகின்றேன்,நமக்கு எந்த விதத்திலும் தொடர்பு இல்லாத நம்மை யார் என்றே தெரியாத நமது ஊரைக்கூட சேர்ந்திராத சில நபர்களை அவர்கள் இவர்கள் தான் என்று நீங்களும் அறியாமல் அவர்களும் அறியாமல் அவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் அவர்களது மனது கிளர்ச்சியடையும் படி செயல் செய்யுங்கள் .அது கண்டிப்பாக நமது வாழ்வில் தேக்கமடைந்த ஒரு பகுதியில் கிளர்ச்சியை ஏற்படுத்தி தேக்கத்தை நீக்கம் செய்யும்.
No comments:
Post a Comment