மனிதனைச் சுற்றி எல்லாம் மாறுகிறது
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்
காலம் மாறுகிறது காட்சிகள் மாறுகிறது
அழகு மாறுகிறது அன்பு கூட மாறுகிறது
ஆட்சி மாறுகிறது அவலங்கள் கூட புதியஅவலமாக மாறுகிறது
உடை மாறுகிறது உணவு கூட மாறுகிறது,
உறவுகள் மாறுகிறது உண்மைகள் கூட மாறுகிறது
மதிப்பீடுகள் மாறுகிறது மரியாதையும் மதிப்பும் கூடவே மாறுகிறது
மனிதனைச் சுற்றி எல்லாம் மாறுகிறது
மனிதனுக்குள்ளும் அவன் அனுக்கள் எல்லாம் மாறுகிறது
மாறதது எதுவுமே இல்லை மாற்றத்தை தவிர
மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்
ஆனால் மனிதன் மட்டும் மாறவில்லை
அவன் மயக்கம் மட்டும் தீரவில்லை என்றான்
குணம் மாறுகிறான் கொள்கைகளும் மாறுகிறாள்
மனம் மாறுவதில்லை
குரங்கு போல எதையாவது பிடித்து கொண்டு
எல்லாமே பொய் என ஏங்குகிறான்
எதுவுமே மாயை என புலம்புகிறான்
மாறுவதை அவன் புரிந்து கொள்வதுமில்லை
மாற்றத்தை அவன் மனம் ஏற்றுக் கொள்வதுமில்லை
ஆசை,அச்சம்,பயம்
புதியதற்கு பயம்
பழையதை விடுவதற்கு பயம்
தனக்கு திறமையில்லையென பயம்
தன்னால் சமாளிக்க முடியாதென பயம்
மாற்றத்தை அறிவால் விரும்புகிறான்
மாறுவதற்கு அச்சத்தால் பயப்படுகிறான்
பொம்மையைத்தர மறுக்கும் பேதைக் குழந்தையென
பழையதைக் கைவிட மயங்குகிறான்
இருப்பதை விட்டு விட்டால் இடறி விழவோமென அழகிறான்
மதீப்பீடுகளும் மாறுகின்றன் மனம் மட்டும் மாற மறுக்கிறது
ஒரு முறை பூமி சுற்றுவதற்குள் ஒராயிரம் மாற்றங்கள்
தன்னைச் சுற்றி எல்லாமே மாறுவதைப் பார்த்து அஞ்சி நடுங்குகிறாள்
சாலைகள் மாறுகின்றன ஆலைகள் மாறுகின்றன
வீடுகள் மாறுகின்றன காடுகள் மாறுகின்றன
கல்வி மாறுகிறது கலவி கூட மாறுகிறது
பூமி சுழல்கிறது வேகம் தாங்காமல் மனிதன் தலை சுழல்கிறது
அச்சத்தில் ஆதாரமில்லாத மனம் மயங்குகிறது
அச்சம் பயம் குழப்பம்
தயக்கம் மயக்கம்
துக்கம் சோகம் தலை சுற்றுகிறது மனிததுக்கு
உலகத்தின் அசுர வேக வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியாது,
காற்றிலாடும் இலைகளென இதயங்கள் நடுநடுங்குகின்றது.
பெருங்காற்றினிலேஏற்றி வைத்த தீபமென
கோழை மனங்கள் குளிர் சுரம் கான்கின்றன
மனிதா நீ மாறி விடு
மாறுகின்ற உலகத் தோடு நீயும் மாறிவிடு கரை ஏறி விடு
மனம் கலங்காதே, மதி மயங்காதே
மாறுவதைப் புரிந்து கொள் மயக்கம் தெளிந்து விடு என்றார்.
No comments:
Post a Comment