Wednesday, January 1, 2014

திருப்தியின்மை : அகந்தை : ஆசை : பேராசை

திருப்தியின்மை

  • செருப்பில்லையென அழுதேன் நடக்க காலில்லாதவனைக் காணும் வரை
  • மெத்தையில்லையென் அழுதேன் படுக்க பாயில்லாதவனைக் காணும் வரை
  • தேவையுள்ளவர் புது தீர்வை தேடுவார்
  • திருப்தியுள்ளவர்களே மன மகிழ்வைக் காண்பார்
  • நீ விரும்பியதைத் தேடி உழைப்பது வாழ்வின் அவசியம்
  • நீ அடைந்ததை ஏற்று மகிழ்வது இன்பத்தின் இரகசியம்
  • திருப்தியும் இன்பமும் என்றும் இணைபிரியாத தோழர்கள்
  • அதிருப்தியும் துன்பமும் என்றும் இணைபிரியாத காதலர்கள்
  • நிறைந்த குடங்கள் நீரில் தளும்புவதில்லை
  • நிறைந்த மனங்கள் கண்ணீரில் ததும்புவதுமில்லை
  • அன்று தேனெடுத்து தந்து விட்டும் கையை மட்டும் சுவைத்தார்கள்
  • இன்று தேசத்தையே விற்று விட்டும் தீயை மூட்டி மகிழ்கிறாகள்
  • நிறைவாக செய்து விட்டோம் என்று என்றும் மகிழாதே
  • குறைவாக் பெற்று விட்டோம் என்று என்றும் வருந்தாதே
  • மற்றவர் உண்ணும் போது நீ வயிறு நிறைவாயே
  • மற்றவர் வெல்லும் போது நீ வயிறு எரியாதே
  • வான் பெயர்ந்து மழை பெய்யினும் கல்லுக்கு ஈரமில்லை
  • வான் போல செல்வம் வந்தாலும் கருமிக்கு இரக்கமில்லை

அகந்தை
  • அழும் போது அம்மா என்கிறோம்
  • அலுக்கும் போது அப்பா என்கிறோம்
  • விழும் போது ஆண்டவா என்கிறோம்
  • வெற்றியின் போது ‘நான்’என்கிறோம்
  • அழகான பெண் அருகில் முகம் பார்க்கும் கண்ணாடி ஆபத்து
  • அகந்தையுள்ள ஆண் அருகில் துதி பாடும் கூட்டம் ஆபத்து
  • குலைக்கின்றவை ஒரு போதும் வேட்டைக்கு உதவுவதில்லை
  • கனைக்கின்ற தலைகள் ஒரு போதும் நாட்டை ஆள்வதில்லை
  • நிறைந்த நீர் உள்ள பாத்திரத்தை கை ஆடாமல் பிடித்துக்கொள்
  • நிறைந்த புகழ் உள்ள வாழ்வை தலை ஆடாமல் பார்த்துகொள்
  • ஆராவாரம் செய்யும் பூனை எப்போதும் எலி பிடிப்பதில்லை
  • ஆர்பரிக்கும் வீரன் என்றும் வெற்றிக் கனி பறிப்பதில்லை
  • செருப்பிலே நடந்தவன் காலடிச் சுவடு பதிவதில்லை
  • செருக்கிலே மிதந்தவன் காலத்துக்கும் புகழ்பெறுவதில்லை
  • சிறகில் எடை இல்லாததால் பறவை உயரம் பறக்கும்
  • அறிவில் அகந்தை இல்லாததால் புனிதர் புகழில் பறப்பார்
  • வாளின் நீளத்தை பொறுத்தே காயத்தின் ஆழம் அமையும்
  • வாயின்(அகந்தையின்)நீளத்தை பொறுத்தே அழிவின் ஆழம் இருக்கும்
  • முகத்துக்கு முன் உமிழ்பவரை சகிப்பவன் புகழ்டைவான்
  • முகத்துக்குமுன் புகழ்பவரை ரசிப்பவன் இகழடைவான்

ஆசை
  • உழைப்பே அதிகரித்தால் இன்பமே தரும்
  • தேவைகள் அதிகரித்தால் துன்பமே வரும்
  • ஓசை உள்ள இடத்தில் அமைதி இல்லை
  • ஆசை உள்ள இதயத்திலும் அமைதி இல்லை
  • அள்ள அள்ள குறையாதது அறிவு
  • குவிய குவிய நிறையாதது ஆசை
  • அறிவை வளர்த்துக் கொண்டால் ஆனந்தம் அடையலாம்
  • ஆசையை வளர்த்துக் கொண்டால் அவஸ்தை அடையலாம்
  • காற்றிலே சுடரென காமத்திலே தள்ளாடும் சபல மனம்
  • ஆற்றிலே படகென ஆசையிலே அல்லாடும் ஏழை மனம்
  • அலைகள் போல அவன் ஆசைகள் கரைகின்றன‌
  • வலைகள் போல அவன் வாழ்க்கையை பிணைக்கின்றன‌
  • இரண்டாம் இடத்திலிருந்து முரண்டு பிடித்தால் இருக்கவும் இடமிருக்காது
  • இருக்கும் இடத்தைவிட்டு பறக்க பார்த்தால் படுக்கவும் இடமிருக்காது
  • புகழ் ஆசை என்பது தூய ஆடையிலே அழக்காகும்
  • போக ஆசை என்பது தூய அன்பருக்கு இழக்காகும்
  • பசியால் பற்றிய வயிறு கூரை நெருப்பை விட கொடியது
  • காமம் பற்றிய மனம் காடு தப்பிய விலங்கை விட விபரீதமானது
  • ஆடையின்றி கூட மனிதன் வாழ்வாள் ஆசையின்றி வாழமாட்டான்
  • உணவின்றி கூட ஒருவள் இருப்பாள் ஓசையின்றி இருக்கமாட்டான்

பேராசை
  • உலகு உள்ள பொருள் எல்லாம் துய்ப்பினும் பின்னும்
  • நிலை பெற நிரம்பாதே மனிதருக்குள்ள ஆசைதானே
  • கள்ளம் இல்லாத பிள்ளை உள்ளம் கொடுத்தான் இறைவனே
  • காசும் பணமும் ஆசையும் வளர்த்துக் கொடுத்தான் மனிதனே
  • ஆறடி நிலத்துள் அடங்கும் மனிதர் ஒரடிக்கும் போராடி அழிகிறார்
  • பெண்ணிடம் பிறந்து வளர்ந்த மனிதர் பெண்ணுக்காக போராடி மடிகிறார்
  • பட்டாம் பூச்சி போல தானும் பறந்து பார்த்து தீயில் விழுந்தது பூ
  • பறக்கும் புறா போல தானும் பறந்து பார்த்து விழுந்தது கோழி
  • இருப்பதைக் கொண்டு சிறந்து வாழ்பவன் தொழிலாளி
  • இருப்பதை மறந்து பறந்து வீழ்பவன் முதலாளி
  • முதலை கூட பிடித்த பிடியை விடலாம் ஆனால்
  • மனிதர் தம் ஆசை பிடியை விடுவதே அரிதே
  • ஆளும் ஆசையோ உலகளவு
  • வாழும் ஆசையோ கால அளவு
  • காம ஆசையோ கடலளவு
  • ஞான ஆசையோ கடுகளவு
  • ஆப்பசைத்து அகப்பட்ட மந்தி போல பெண்ணாசையில் அழிந்தது சில‌
  • பறப்பதற்காக பல்லுடைத்த மந்திபோல பேராசையில் அழிந்தது சில‌
  • மண்ணுக்கு ஆசைப்பட்டார் அடைந்ததும்  விண்ணுக்கு ஆசைப்பட்டு வீழ்ந்தார்
  • பொன்னுக்கு ஆசைப்பட்டார் அடைந்ததும் பெண்ணுக்கு ஆசைப்பட்டு அழிந்தார்

No comments:

Post a Comment