Wednesday, January 1, 2014

புள்ளி

1.எதையும் ஒரு புள்ளியில் இருந்து ஆரம்பியுங்கள் .வெப்பமோ குளிரோ எந்த சக்தியும் ஒரு பொருளை ஆக்கிரமிக்கும் போது முதலில் அந்த பொருள் முழுவதும் அது பரவும் முன்பாக ஒரு புள்ளியில் இருந்து தான் ஆரம்பிக்கின்றது.

2எடுத்துக் காட்டாக குளிர் காலம் என்றால் ஒரே நாளில் காற்று மண்டலம் முழுவதும் குளிர்ந்து விடுவதில்லை,முதலில் ஒரு தனி அனுவிலோ அல்லது எல்லா அனுக்களிலும் உள்ள ஒரு தனி புள்ளியில் இருந்து குளிரோ அல்லது வெப்பமோ ஆரம்பிக்கின்றது.அது போல குளிரும் வெப்பமும் தனியும் போதும் கடைசிப் புள்ளி வரைக்கும் தனிகின்றது.

3.  சரி இதற்கும் எனக்கும் என்ன தொடர்பு என்கின்றீர்களா? நமது வாழ்க்கையில் நாம் வெற்றியோ ,தோல்வியோ அடையும் போது அந்த வெற்றி ,தோல்விக்கு முதலில் அருகதை ஆகுமளவிற்கு நாம் நமது மனதில் ஒரு புள்ளியில் இருந்து வெற்றியையோ அல்லது தோல்வியையோ ஆரம்பிக்க வேண்டும்  .நாம் முழு சூழ்நிலையையும் மாற்றும் முன்பாக முதலில் ஒரே ஒரு புள்ளியை மாற்றினால் போதும்.இது மிக எளிது ,நாம் முழு சூழ்நிலைகளையும் ஒரே நாளில் மாற்ற முயற்சி செய்வதை விட ,ஒவ்வொரு புள்ளியாக ஒவ்வொரு நாளும் முயற்சி செய்தால் எந்த காரியத்திலும் வெற்றி மிக எளிது.
                                                     
4.சரி அந்த ஒரு புள்ளி எங்கே இருக்கின்றது?எப்படி இருக்கும்?எப்படி அந்த ஒரு புள்ளியை மட்டும் சூடு ஏற்றுவது.முதலில் வெற்றியோ அல்லது தோல்வியோ அது ஒரு மனநிலை என்று உணருங்கள்.மன நிலை என்றால் என்ன ?ரொம்ப எளிது நமது மனம் என்ன நினைகின்றதோ அது தான்.நாம் எந்த விசயம் பொருள் எதனை நினைத்தாலும் முதலில் அது நமது மனதில் ஒரு படமாக தோன்றுகின்றது என்பதை  உணர வேண்டும்.அந்த படத்திற்கு எவ்வளவு மன அழுத்தம் ,வெறி ,சூடு கொடுக்கின்றோமோ அந்த அளவிற்கு அது நிறைவேறும் காலம் நிர்ணயிக்கப்படும்  ,வெளியில் அல்ல நமது மனதில் தான்.அப்படி என்றால் மன நிலை என்பது புரிகின்றதா?
                                                    
5.ஒன்னும் இல்லீங்க அது ஒரு மனப் படம்.இதற்கு ஒரு சிறிய சோதனை ,இப்பொழுது படிக்கப் போவதை நீங்கள் படித்தவுடன் உங்களுக்கு என்ன தோன்றுகின்றது என்று பாருங்கள்."பஸ்" இது தான் அந்த வார்த்தை ,இந்த வார்த்தையை படித்தவுடன் முதலில் நமது மனதில் ஒரு பேருந்தின் படம் தான் வரும் ,.........ப..........ஸ்......... என்று இரண்டு எழுத்துக்களும் மனக் கண்ணில் வராது. நமது ஆசைகள் எதுவும் முதலில் படமாகத் தான் நமது மனதில் உதித்து அது நிறைவேறுகின்றது.ஆகவே நாம் முதலில் நமது ஆசைகளை ஒரு தெளிவான மனப் படமாக உருவாக்குவோம்.

6.இந்த மனப் படங்களை உருவாக்க சில எளிய வழிகள் உண்டு அவைகள்.

1.நிஜமாகவே உங்களால் முடிந்தால் அதை ஒரு படமாக வரைந்து பாருங்கள்.

2.அந்த படத்தை மனதில் வரையும் போது பேக்கிரவுண்ட் கலர் கொடுங்கள் .

3.அந்த படத்தை அடிக்கடி நினைத்துப் பாருங்கள் .

4.நீங்கள் தூங்கப் போகும் முன்பு படுக்கையில் அந்த படத்தை நினைத்துக் கொண்டே தூங்கி விடுங்கள்.

5.அதே போல் காலையில் எழும் முன்பாக அந்தப் படங்களை நினைத்துக் கொண்டே எழுங்கள்.

6.இவ்வாறு படங்களை நினைக்கும் போது ஒரு தீவிரத்துடன்  செயல் படுங்கள் .
7.நீங்கள் வேறு அந்தப் படம் வேறு அல்ல என்று உணருங்கள் .

8.எப்பொழுதும் அது நடை பெறாது என்ற மன நிலையை சிறிது ஏற்படுத்தாதீர்கள் ,அப்படி எதிர் மனநிலை வந்தால் உடனே அதனை மனக் கண்ணில் இருந்து அகற்றுங்கள்.

9.தினமும் உங்கள் ஆசை மனப் படத்தை எழுதிப் பாருங்கள்.

10.உங்கள் ஆசை மனப்படத்தை மனதில் நேராக மட்டும் அல்ல தலை கீழாக வட்டமாக இன்னும் என்னென்ன மனநிலைகளில் கற்பனை செய்ய முடியுமோ அந்தவகைகளில் எல்லாம் கற்பனை செய்யுங்கள்.

11.இவ்வாறு செய்யும் போழுது மனப்படங்களை தொடர்ந்து நினைப்பதால் ஏற்படும் சலிப்பு நீங்கி புத்துணர்வாக இருக்கும்.

இந்த வழிகளைக் கடைப் பிடித்து வெற்றிகளை அடையுங்கள்.

No comments:

Post a Comment