வானமே நம் எல்லை
கடையை விரித்துள்ளோம் கொண்டு பயன் பெறுக...
இந்த உலகில் யானை, புலி, சிங்கம் என்று மனிதனை விட ஆற்றல் மிக்க விலங்கினங்கள் எத்தனையோ உள்ளன. ஆனால் அவற்றில் எதுவும் மனிதனை வெற்றி கொள்ள முடியவில்லை. இந்த உலகின் ஆதிக்கம் மனித இனத்தின் கையில் உள்ளது.
காரணம், உயிரினங்களுக்கு வாய்க்கும் அறிவு இரண்டு வகை 1. மரபு வழி வாய்க்கும் இயற்கையான அறிவு - Genetic Knowledge. 2. தம் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதால் வளர்க்கும் செயற்கை அறிவு - Somatic knowledge.
விலங்கினங்கள் இயற்கையாய் வாய்த்த முதல் வகை அறிவோடு நின்று விட்டன. Only Genetic knowledge.
ஒலி - ஒலியை ஒழுங்குபடுத்தி மொழி மொழியின் வடிவமாய்ச் சித்திரங்கள் எழுத்துகள் எழுத்துகளின் வழியே கருத்துகள் கருத்துகளைத் தாங்கி நிற்கும் நூல்கள்.
இப்படிப் பரம்பரை பரம்பரையாய் அறிவைப் பகிர்ந்து கொண்டு வளர்ந்து கொண்டே வந்ததால் மனித இனம் மட்டும் உயர்ந்தது. மற்ற உயிரினங்களை வெற்றி கண்டது.
மனித இனத்திலும் க்ல்வியின் வழி அறிவையும், அறிவின் வழி விழிப்புணர்வையும் தொடர்ந்து வளர்த்துக் கொண்ட நாடுகள் மட்டுமே உலகில் இன்று செல்வாக்குள்ள நாடுகளாய்த் திகழ்கின்றன. அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்றவை இந்த வரிசையில் உள்ளன.
அவ்வாறு அறிவையும் விழிப்புணர்வையும் வளர்த்துக் கொள்ளாத நாடுகள் அனைத்தும் தொடர்ந்து வறுமையில் வாடும் ஏழை நாடுகளாய் உள்ளன. அந்த வரிசையில் முதல் உடத்தில் இருப்பது நம் இந்தியா. நம்மைச் சுற்றியுள்ள பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்காள தேசம், இலங்கை போன்ற நாடுகள் இந்த வரிசையில் அடுத்தடுத்து நிற்கின்றன.
ஒரு காலத்தில் எல்லோரும் உள்ளே வர ஆசைப்பட்ட புண்ணிய பூமியாக நம் தமிழ்நாடும் இந்தியாவும் இருந்திருக்கலாம். இன்று அப்படியல்ல. அப்பட்டமாய்ச் சொன்னால் வளர்ந்த நாடுகள் அருவருப்பாய்ப் பார்க்கும் பாவப்பட்ட பூமியாய் நம் நாடு இருக்கிறது என்பதுதான் உண்மை.
இந்தப் பாவப்பட்ட நாடுகளின் மக்களை செல்வாக்குள்ள நாடுகள் மதிப்பதே இல்லை. சில நாடுகள் நம்மை உள்ளே அனமதிப்பது கூட இல்லை.
வாழத் தெரியாதவர்கள் வாழும் நாட்டில், அளத் தெரியாதவர்கள் ஆட்சிக்கு வருவார்கள் என்கிறார், யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி.
தேர்ந்தெடுக்கப்பட்டவன் அயாக்கியன் என்றால், தேர்ந்தெடுத்தவன் முட்டாள் என்று அர்த்தம் என்றார் பகுத்த்றிவுப் பகலவன் தந்தை பெரியார்.
மறைந் தனித்தமிழ் அரிமா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் நம் உலகச் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு நம் மண்ணில் காலடி வைத்ததும் சொன்ன கருத்து இது இறைவன் என்ற ஓவியன், தன் தூரிகையை வண்ணங்களில் தோய்த்து ஆசை ஆசையாய் வரைந்த அழகிய வண்ண ஓவியங்களே ஐரோப்பா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், போன்ற நாடுகள். வரைந்து களைத்த நிலையில் கிண்ணத்தில் மீந்திருந்த வண்ணங்களைக் கழுவிக் கொட்டியதில் படிந்த தறைகள்தான் நம் நாடு.
ஏன் இந்த இழிநிலை என்ன இல்லை நம்மிடம்
1. தெளிந்த அறிவில்லை - Lack of wisdom.
2. பொறுப்புணர்வில்லை - Lack of responsibility.
3. விழிப்புணர்வில்லை - Lack of awareness.
வெட்கத்துடன் நாம் ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை நிலை இது.
எனவ இந்த மண்ணில் நாம் இழுந்த பெருமையை மீட்க வேண்டுமென்றால், வரக்கூடிய தலைமுறைக்காவத அறிவையும் பொறுப்புணர்வையும் விழிப்புணர்வையும் ஊட்ட வேண்டியது மிக மிகத் தெவையான பணியாகும்.
என் தந்தை திருக்குறள் பெ. இராமையா அவர்கள் விட்டுச் சென்ற திருக்குறள் பணியைத் தொடர வேண்டி இலக்கிய வீதி இனியவன் அவர்களால் தூண்டப் பெற்று பதினாறு கவனகம் (சோடச அவதானம்) என்கிற நினைவாற்றல் கலை நிகழ்ச்சியை நடத்தத் தொடங்கினேன்.
இந்நிலையில் நாற்பது நாள் மலேசியப் பயணம் வாய்த்தது. அருமைச் சகோதரர் இலக்கிய வீதி இனியவன் அவர்கள் தன்னம்பிக்கை பாலசுப்பிரமணியம் அவர்கள் மூலம் இந்த நல்வாய்ப்பை உருவாக்கி உதவினார்.
மலேசிய மண்ணில் தன்னம்பிக்கைப் பயிற்சி வகுப்புகள் நடத்தி, தமிழ் மக்கள் பலரைக் கோடீசுவரர்கள் ஆக்கிய பெருமைக்குரியவர், தன்னம்பிக்கை பாலசுப்பிரமணியம் அவர்கள். உலகில் உள்ள தமிழர்கள் அனைவரையும் பணக்காரர்களாக்க வே்ணடும் என்பது இவரது கணவு. தன்னம்பிக்கை பாலா அவர்களின் இந்தக் கனவை நனவாக்க வேண்டி அவருடன் இணைந்து www.intamm.com என்று உலகில் உள்ள தமிழர்களுக்காக ஒரு கணிணி இணையத்தை (Web Site) உருவாக்கி மிகப்பெரிய அறிவுப் புரட்சியை நிகழ்த்தி வருபவர், மாணவர் நகலகம் திரு. சா. அ. சவுரிராசன்.
மனமே மாபெரும் ஆற்றல் என்கிற என்னுடைய பயிற்சி வகுப்பை, அழகாக வடிவமைத்துக் கொடுத்த பெருமை இவர்களுக்கே உரியது.
நீடித்த வாழ்க்கை Living Longer.
நலம்மிக்க வாழ்க்கை Living Healthier
மகிழ்ச்சியான வாழ்க்கை Living Happier
அறிவும் விழிப்புணர்வும் உள்ள வாழ்க்கை Living with wisdom and awareness.
என்ற நான்கு நோக்கங்களை மையமாக வைத்து நடத்தப்பெறும் பயிற்சி வகுப்பு இது. இந்த நூலும் இந்த நோக்கங்களை மையமாக வைத்தே வடிவமைக்கப் பெற்றது.
ஏற்கனவே பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கு இந்நூல் வழிகாட்டும் கையேடாக அமையும். மற்றவர்களுக்கு வாழ்ககை ப்றிறய விழிப்புணர்வை ஊட்டும் தூண்டுகோலாக அமையும்.
கடையை விரித்துள்ளோம். கொண்டு பயன் பெறுக.
No comments:
Post a Comment