கடும் மலைப் பாதையா நம் வாழ்க்கை
1.சமவெளிகளில் வாகணங்களை ஓட்டிப் பழக்கப் பட்டவர்களுக்கு முதன் முதலில் மலைப்பாதையில் வாகணத்தை இயக்கும் போது பயம் ஏற்படும் மலைப் பாதை பயணத்திற்கு மனதைப் பழக்கப் படுத்தாததால்.ஆனால் என்ன செய்வது கண்டிப்பாக இந்தப் பயணத்தை நாம் மேற்கொள்ளத்தான் வேண்டும்.இது வாழ்க்கைக் கட்டாயங்கள் .
2.இப்படித்தான் நமது வாழ்க்கையின் பலகட்டங்களில் சமவெளிகளில் வாகணத்தை சிறப்பாக ஒட்டத்தெரிந்த நாம்,மலைப் பாதைகளில் இயக்க முற்படும் போது கடினமாக உணருகின்றோம். சூழ்நிலைகள் மாறும் போது கடினமாக உணருகின்றோம்,திணறுகின்றோம் எப்போது என்ன ஆகுமோ? என்ற பயம் ,மலைப் பாதைகளின் கொண்டை ஊசி வலைவு நெளிவுகளும் ,குறுகலான சாலையும்,ஆழமான பள்ளத்தாக்குகளும் ,திடீரென்று வளைவில் நாம் எதிர்பாரா வண்ணம் நம் மீது மோதுகின்றாற் போல எதிரே வருகின்ற வாகனங்களும் நமக்கு பீதியை ஏற்படுத்தும்.மனிதர்களும்சூழ்நிலைகளும் இப்படித்தான் வாழ்க்கையில்.
3.இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நாம் சமதளத்தில் வாகணத்தை இயக்கிய நமது அனுபவத்தை வைத்து சூழ்நிலையை கையாளுவதில் சிரமம் ஏற்படும்.ஆனால் மலைப் பாதையிலேயே வாகணத்தை ஓட்டிப் பழக்கப்பட்டவர்கள் லாவகமாக வளைவு நெளிவுகளில் செல்வதும் நம்மைப் போன்ற புதிய மலைப்பாதை வாகணங்களை எளிதில் முந்திச் செல்வதுமாக இருப்பார்கள்.இது எப்படி சாத்தியம்.எல்லாம் பழக்கம் தான் என்பது நமக்குத் தெரியும்.
4.அந்த சாலையின் மீது நமது கனவுகளும் உயிர்களும் பயணம் செய்ய வேண்டியிருக்கும்.நமது வாழ்க்கையும் நமக்குள் நாமாகச் செய்ய வேண்டிய பயணம் என்பதை அந்தச் சாலை உணர்த்திக் கொண்டேயிருக்கும்.நாமும் நமது வாழ்க்கையில் பல நேரங்களில் மலைப்பாதைப் பயணத்தை விரும்பி மேற்கொள்கின்றோம் அல்லது நமது விருப்பம் இல்லாமலேயே அந்தச் சாலையில் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குள்ளாக்கப்படுகின்றோம்.
5.எல்லா சமயங்களிலும் நாம் திறமை காட்ட வேண்டியதில்லை ,சில சமயங்களில் நாம் சூழ்நிலைகளைத் திறம்படக் கையாளுவதற்கு தகுந்த அனுபவங்கள் பெறும் வரை.மற்றவர்களை முந்த வேண்டியது வாழ்க்கையின் கட்டாயம் தான் ஆனால் அதற்குரிய வல்லமையை வளர்த்துக் கொள்ளாமல் முந்த முனைவது நம்மை எளிதில் மற்றவர்கள் அழித்துவிடக் கூடிய உபாயம்.நமது வாழ்க்கையும் ஒரு பயணம் தான் இதில் முந்துபவர்களும் முந்தப்படுபவர்களும் உயிரை மாய்த்தவர்களும் சாகசங்கள் செய்பவர்களும் அமைதியாக தனது பயணத்தை செய்தவர்களும் அடக்கம்.
6.கட்டாயத்தாலோ விருப்பத்தாலோ மலைப் பாதை பயணம் போன்ற சவாலான ,கடினமான வாழ்க்கைப் பாதைகள் ஒவ்வொருவர் வாழ்விலும் கண்டிப்பாக வந்தே தீரும் .இதில் ஒன்றும் நாம் மலைக்க வேண்டாம் புதிய வாகணங்களும் புதிய வாகண ஓட்டிகளும் மலைப்பாதை பயணத்தை வெற்றிகரமாக செயல்படுத்திக் கொண்டே தான் இருக்கின்றார்கள்.
7.சிலர் தைரியமாக அதன் பள்ளத்தாக்குகளுக்கு பயப்படாமலும் .சிலர் பயந்து கொண்டே மெதுவாகவும் சென்று கொண்டே தான் இருக்கின்றார்கலள்.தங்களது பயணத்தின் இலக்கை பிரச்சிணையில்லாமல் அடைந்து விடுவோம் என்றோ அல்லது பிரச்சிணைகளை எப்படியும் எதிர் கொள்வோம் என்றோ.
8.அதன் வளைவான அழகிய சாலையும் மலர்களாலும் மரங்களாலும் அலங்காரம் செய்யப்பட்ட மலைகளாலும், மலைப்பாதையின் சவால்கள் மறக்கடிக்கப்படுகின்றன.இருந்தாலும் அறிவாளிகள் தங்களது பயணத்தை இன்னும் விரைவுபடுத்த தங்களது சாலையில் செல்லும் சிறந்த அனுபவமிக்கதாகவும் , மலைப்பாதையில் அடிக்கடி செல்லும் வாகணத்தைக் கணித்துத் தேர்ந்தெடுக்கின்றார்கள் அதன் பின்னே அமைதியாக தங்களது பயணத்தைத் மிகுந்த லாவகமாகவும் ,விரைவாகவும் தங்களது அதே ரசனையுடனும் பாதுகாப்பாகவும் தொடர் கின்றார்கள்.அடுத்த மலைப்பாதை பயணத்தில் பாதுகாப்பைக் கணித்துத் தங்களையும் பின்தொடர இருக்கும் வாகணங்களுக்காக.
9.கடினமான பயணங்கள் என்பது வாழ்க்கையில் இன்னும் தொடங்கப்படாத பயணம்தான் .தொடங்கப்படும் பயணங்கள் அணைத்தும் முடிவடைந்து தான் ஆகும். நமது வாழ்விலும் இந்தப் பயணத்தைப் போலத்தான் பல நேரங்களில் சூழல்கள் அமைகின்றன அப்போது உங்களுக்கு பயணம் கடிணம் என்று நினைக்கும் போது நீங்கள் பின் தொடர ஒரு நல்ல லட்சிய நபரை வாகணத்தைப் போலத் தேர்ந்தெடுங்கள்.
10.உங்களை ஒரு நல்ல திறமை வாய்ந்தவராகக் கருதி பின் தொடரும் வாகண ஓட்டிகளைப் பார்த்து அவர்கள் உங்களைப் பின்தொடர்வதை அனுமதியுங்கள் வாழ்க்கையிலும் எப்போது வேண்டுமானாலும் அவர் உங்களைப் பின் தொடர்பவராக ஆக்கலாம்.ஒரு நல்ல பயணத்தில் போய்ச்சேர வேண்டிய இடம் தான் முக்கிய இலக்காக இருந்தாலும் கூட அந்த இலக்கை எப்படி நாம் அடைந்தோம் என்பது தான் அந்தப் பயணத்தையும் வாழ்க்கையையும் சுவாரசியமிக்கதாகவும் பயனுள்ளதாகவும் ஆக்குகின்றன.
No comments:
Post a Comment