நற்பண்புகள் : நெஞ்சுக்கு நேர்மை வேண்டும்
- கண்ணுக்கு கருணை வேண்டும்
- காதுக்கு கேள்வி வேண்டும்
- நாவுக்கு அடக்கம் வேண்டும்
- வாக்குக்கு உறுதி வேண்டும்
- கிரிடத்துக்கு பணிவு வேண்டும்
- கரத்துக்கு ஈகை வேண்டும்
- இரைப்பைக்கு திருப்தி வேண்டும் .
- இடைக்கு கற்பு வேண்டும்
- சொல்லுக்கு இனிமை வேண்டும்
- காலுக்கு கட்டுப்பாடு வேண்டும்
- நடையிலே தெளிவு வேண்டும்
- உடையிலே தூய்மை வேண்டும்
- கழுத்துக்கு மாலை வேண்டும்
- எண்ணத்தில் வாய்மை வேண்டும்
- மனதுக்கு மாண்பு வேண்டும்
- நெஞ்சுக்கு நேர்மை வேண்டும்
- விரலுக்கு லயம் வேண்டும்
- முகத்துக்கு புன்னகை வேண்டும்
- முத்தத்துக்கு அழுத்தம் வேண்டும்
- கதைக்கு கால் வேண்டும்
- காதலுக்கு உண்மை வேண்டும்
- கவிதைக்கு கருத்து வேண்டும் .
- ஆண்மைக்கு உழைப்பு வேண்டும்
- பெண்மைக்கு பொறுமை வேண்டும்
- இளமைக்கு துடிப்பு வேண்டும்
- முதுமைக்கு அமைதி வேண்டும்
- ஆசிரியனுக்கு அன்பு வேண்டும்
- மாணவனுக்கு ஆர்வம் வேண்டும்
- வீரனுக்கு விவேகம் வேண்டும்
- தலைவனுக்கு நிதானம் வேண்டும்
- அறிஞனுக்கு செயல் வேண்டும்
- காமத்துக்கு கதவு வேண்டும்
- கணவனுக்கு வருமானம் வேண்டும்
- மணைவிக்கு சிக்கனம் வேண்டும்
- இதயத்துக்கு ஈரம் வேண்டும்
- அன்னைக்கு எல்லாம் வேண்டும்
- தம்பிக்கு ஒற்றுமை வேண்டும்
- அண்ணனுக்கு அரவணைப்பு வேண்டும்
- தந்தைக்கு கன்டிப்பு வேண்டும்
- மகனுக்கு கீழ்படிதல் வேண்டும்
- மகளுக்கு பொருமை வேண்டும்
- மாமியாருக்கு அன்பு வேண்டும்
- மாமனாருக்கு ஆளுமை வேண்டும்
- குழந்தைக்கு குதூகலம் வேண்டும்
- எழுத்துக்கு உணர்வு வேண்டும்
- உழைப்பவனுக்கு முணைப்பு வேண்டும்
- மக்களுக்கு உணர்வு வேண்டும்
- காவலருக்கு கண்ணியம் வேண்டும்
- மருத்துவருக்கு இரக்கம் வேண்டும்
- நீதிபதிக்கு தர்மம் வேண்டும்
No comments:
Post a Comment