Sunday, January 5, 2014

காலம் என்பது ஆறாவது பூதம்

காலம் என்பது ஆறாவது பூதம்
  • காலம் ஒரு நாள் மாறும் நம்
  • கவலைகள் யாவும் தீரும்
  • காலம்  என்பது ஆறாவது பூதம்
  • பஞ்ச பூதங்கள் எனும் அற்புத சக்திகள் அய்ந்து
  • ஆறாவதாக ஒரு மகோன்னத சக்தி அது காலம்.
  • சுற்றி வரும் பஞ்சபூதங்களிலும் பல மாறுதல்களை பிரசவிக்கிறது
  • அவை வெறும் பருவநிலை மாற்றங்கள் மட்டுமல்ல‌
  • அவை பூமியின் ஒவ்வொரு ஜிவராசிக்குள்ளும் மாறுதலை தோற்றுவிக்கிற‌து
  • உடல், உள்ளமென்பதோடு அவற்றின் வாழ்வு சக்கரத்திலும்
  • மாறுதல்களை உருவாக்குகின்றன‌
  • இந்த மாறுதல்கள்தான் நம் மானுட இனத்திற்கு ஆறுதல்கள்
  • காலம் என்பது தேர் போல ஓடிக்கோண்டேயிருக்கிறது
  • காலமெனும் தேரின் கால்களாக சக்கரங்கள் சுழன்றுகொண்டிருக்கிறது
  • சக்க‌ரக் கால்களின் அதிட்டம் போல‌
  • மனிதரின் உயர்வும் தாழ்வும் ஏறி இற்ங்குகிறது
  • வாழ்ந்தவர் வீழ்வதும்
  • வீழ்ந்தவர் எழுவதுமாக இறைவனின் நாடகம் நடக்கிறது
  • இருபத்தியேழ வருடங்கள் சிகரத்தில் சிம்மசனத்தில் இருந்தவரில்லை
  • பிறந்தவர் இறக்கும்வரை
  • ஒருநொடியேனும் அதிட்டத்தின் பார்வை படாதவருமில்லை
  • ஒரு கதவை மூடும் காலம் மறுகதவை திறக்காமலிருப்பதில்லை
  • ஒரு காலை உடைத்தாலும் ஒருகை தந்து தூக்கிவிடும் காலம்
  • காலத்தால் ஆறாத காயங்களும் இல்லை
  • காலத்தால் மாறாத ஆயுதங்களும் இல்லை
  • பசி பிணி துயரம் துக்கம்
  • தோல்வி இழப்பு
  • அழுகை அவமானம்
  • அத்தனைஇன்னல்களுக்கும் ஆயுள் குறைவு
  • காலம் எனும் மருந்திலே அவை கரைந்து போகும்.
  • உதய சூர்யன் எழும் போது ஒரு புதிய வெற்றி பிறக்கும்
  • புதிய சந்திரன் விளையும் போது ஒரு புதிய உணர்வு பிறக்கும்
  • ஒரு சுற்று பூமி சுழலும் போது அரண்ட மனங்கள் தெளிவாகும்
  • ஒரு சுற்று சூர்யன் சுற்றும்போது வறண்ட நிலங்கள் வளமாகும்
  • கண்ணுக்கு தெரிகின்ற காலம் சுழலும் போது சிறியது,
  • கண்ணுக்கு தெரியாத‌காலத்தின் பயணம் மிகமிக நீண்டது
  • அதனை அளவிட மனிதனிடம் அளவீடுகள் இல்லை
  • அது ஒரணு ஜீவனைஉன்னத மனிதனாக்கியது
  • மரம் தாவிய மந்தியைமானுட பிறவியாக மலர வைத்தது
  • காலமெனும் மந்திர சக்தி என்பது பரிணாமம்
  • அது அங்கங்கே சில நஞ்சு கக்கினாலும்
  • நீண்ட நெடிய பயண ஓட்டத்தில் அழகு ஆறாக ஒடுகிறது
  • காலமெனும் கப்பலேறி
  • பிறவியெனும் கடலோடி
  • நம்பிக்கையே நமது வாழ்வாக நலமுடன் வாழ்வோம்


No comments:

Post a Comment