Saturday, January 4, 2014

பொறாமை சூது புறம்

பொறாமை சூது புறம்
                 
பொறாமை

  • பொறாமையும் பொருள் செருக்கும் முரடர் வழக்கம்
  • முரண்பாடும் முதிராத சொல்லும் மூடர் பழக்கம்
  • உனது வளமையை எண்ணி பெருமை அடையாத‌
  • பிறரது வளமையை எண்ணி பொறாமை அடையாதே
  • அச்சத்தை பெற்றவன் அறியாமையெனும் தாய்
  • வஞ்சத்தை பெற்றவன் பொறாமையெனும் தாய்
  • அடுத்தவன் எவ்வளவு செய்தான் என்று அளந்தால் நம் திறமை குறையும்
  • அடுத்தவன் என்ன செய்கிறான் என்று பார்த்தால் நம் பார்வை தடுமாறும்
  • மல்லாந்து படுத்து வானில் உமிழாதே
  • அன்னாந்து பார்த்து கோட்டை கட்டாதே
  • கண்ணாடி வீட்டில் இருந்து கல்லெறியாதே
  • முன்னாடி போனவர் காலை வாரிடாதே
  • ரதங்களில் வலிமையானது விரதம்
  • ரசங்களின் சுவையானது சுவாரசம்
  • தீயிலும் தீமையானது தீண்டாமை
  • ஆமைகளில் அழுக்கானது பொறாமை
  • கயமை என்பது கள்ள நாய் போல கண்டதையெல்லாம் உண்டு விடும்
  • பொறாமை என்பது மூட நாய் போல நிழலைக் கண்டு குரைத்துவிடும்.

சூது

  • இரவில் அரவு தின்று பகலிலே எழிலாய்  ஆடும் மயில்
  • துயிலிலே களவாடி வெயிலிலே ஒயிலாய் திரிவார் கயவர்
  • உடல் அழுக்கானால் ஒரு தேகம் நோய் படும்
  • உள்ளம் அழுக்கானால் ஒரு தேசமே நோய் படும்
  • முன்னிருந்து தீமை செய்தால் பின்னுக்கு தள்ளப்படுவாய்
  • பின்னிருந்தும் நன்மை செய்தால் முன்னுக்கு வருவாய்
  • இரத்தம் படிந்த கைகளை விட கல்லான இதயம் கொடியது
  • கல்வி இல்லாத மூடனை விட கற்ற கயவன் கொடியவன்
  • சூது என்பது சோம்பேறிகளின் சோம்பல் மடம்
  • வாது என்பது வாயாடிகளின் வழக்கு மன்றம்
  • உடையால் நடையால் ஆண்மீக வேடம் போடுகிறார் 
  • ஆண்டவன் வியாபாரி
  • கொடியால் கொள்கையால் தார்மீக வேடம் போடுகிறார் 
  • அரசியல் வியாபாரி
  • அடுத்தவர் துயரத்தில் பாடம் கற்பவன் அறிஞன் 
  • அடுத்தவர் துயரத்தில் லாபம் கற்ப்பவன் கயவன்
  • பாதம் பணிந்து பக்கம் நின்று தக்க நேரத்தில் பழி தீர்ப்பார் அற்பர்
  • பாடம் சொல்லி துக்கம் துடைத்து தக்க நேரத்தில் வழி சேர்ப்பார் அறிஞர்
  • முகத்திலே மூடி போட்டாலும் முழு உடம்பின் வேடம் மறையாது
  • முகத்திலே நகை காட்டினாலும் முழு குணத்தின் நாடகம் மாறாது
  • வெறும் பேச்சில் நேரத்தை வீணாக்கி களிப்பவர் மூடன்
  • வாய் வீச்சை வானத்தை வலைப்பேன் என்பவன் கயவன்

புறம்


  • இடத்து நீர் கசிந்து வரும் தன்மை போல‌
  • அந்தரங்க அரசியல் இரகசியம் அங்காடி அம்பலம்
  • ஒழகிடும் செய்திகளை உழையுளார் தமக்குத்
  • தொன்றிய பலவோடும் தொடுத்துக் காற்றிலே தூற்றுவார்
  • கதிரவன் ஒளியை கை நீட்டி மறைத்தார் இல்லை
  • கற்றவர் புகழை வசை பேசி குறைத்தார் இல்லை
  • சிதையும் சிந்தை கொள்ளாது சித்தத்தில் உறுதி வேண்டும்
  • எதையும் நிந்தை செய்யாத சிறந்ததொரு குணம் வேண்டும்
  • பின்னே வருவதை முன்னே அறிவிப்பார் பேரறிவாளர்
  • முன்னே போகவிட்டு பின்னே பேசுவார் புல்லறிவாளர்
  • ஊனத்தை பரிகாசம் செய்வது பரிகாரம் காண முடியாத பாவம்
  • மானத்தை வியாபாரம் செய்வது தண்டனை தர முடியாத குற்றம்
  • பத்திரிகைகளில் சிறிதாகவாவது உண்மை பேசுவது விளம்பரங்களே
  • பத்திரிகைகளில் சிறிதளவாவது உபயோகப்படுவதும் விளம்பரங்களே
  • அரைகுறை உண்மை பொய்யை விட மோசமானது
  • அரைகுறை உடை நிர்வானத்தை விட ஆபாசமானது
  • கோபக்காரரிடம் இரகசியம் சொல்வது 
  • கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிவது
  • கோள்மூட்டுபவரிடம் இரகசியம் சொல்வது 
  • கண்ணாடி அறைக்குள் குளிப்பது போல‌
  • பொறாமை என்பது ஆற்றாமை பெற்றெடுத்த ஆமை
  • ஆற்றாமை என்பது அறியாமை பெற்றெடுத்த ஊமை

பொறாமை

  • உனது வளமையை என்னி பெருமை அடையாதே
  • பிறரது வளமையை என்னி பொறாமை அடையாதே
  • அச்சத்தை பெற்றவன் அரியாமையெனும் தாய்
  • வஞ்சத்தை பெற்றவன் பொறாமையெனும் தாய்
  • அடுத்தவன் மனையை ஆசைப்படாதே 
  •  அடுத்தவன் வெற்றிக்கு பொறாமைபடாதே
  • அடுத்தவர் குழந்தையை நேசிக்கப்பழகு 
  • அடுத்தவர் சாதனையை புகழ்ந்து பழகு
  • அடுத்தவன் எவ்வளவு செய்தான் என்று அளந்தால் நம் திறமை குறையும்
  • அடுத்தவ என்ன செய்கிறான் என்று பார்த்தால் நம் பார்வை தடுமாறும்
  • மல்லாந்து படுத்து வானில் உமிழாதே
  • அன்னாந்து பார்த்து கோட்டை கட்டாதே
  • கண்ணாடி வீட்டில் இருந்து கல்லெறியாதே
  • முன்னாடி போனவர் காலை வாரிவிடாதே
  • ரதங்களில் வலிமையானது விரதம்
  • ரசங்களில் சுவையானது சரசம்
  • தீயிலும் தீமையானது தீண்டாமை
  • ஆமைகளில் அழகானது பொறாமை
  • கயமை என்பது கள்ள நாய் போல கண்டதையெல்லாம் உண்டுவிடும்
  • பொறாமை என்பது மூட நாய் போல நிழலைக் கண்டு குரைத்து விடும்

No comments:

Post a Comment