உங்கள் வாழ்க்கையில் “இவற்றை” மறவாதீர்! “செயலாற்ற” தவறாதீர்!,
1) எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை அழகாக கையாள தவறாதீர்.
2) பதற்றத்தை தவிர்த்து, பொறுமையுடன் இருங்கள். வேகத்தை விடுத்து விவே கத்துடன் செயல்பட தவறாதீர்.
3) அர்த்தமில்லாமலும், தேவையில்லா மலும் பின்விளைவுகளை அறியாமலும் பேசுவதை விடுத்து, நன்கு சிந்தித்து பேச தவறாதீர்.
4) சபையில் ஒரு வார்த்தை பேசினாலும், அதை நன்கு சிந்தித்து, ஆராய்ந்து, பின்பு அதை தெளிவாகவும், எளிமையாகவும், ஆழ மாகவும், பேச தவறாதீர்.
5) எல்லா இடங்களிலும் உண்மையைச் சொல்வது சாத்தியமில்லை. எந்தெந்த இடங்களில் உண்மை சொல்ல வேண்டு மோ அந்தந்த இடங்களில் சொல்லி, எந் தெந்த இடங்களில் பொய்யைச் சொல்ல வேண்டுமோ அந்தந்த இடங்களில் பொய் சொல்லி சுமூகமான உறவுக்கு, சந்தோஷமான சூழ்நிலையை உருவாக்க தவறாதீ ர்.
6) பிறருக்காக, ஒரு செயலை நீங்கள் செய்யும்போது சம்பந்தப் பட்டவருடன் கலந்தாலோசித்து அவரது கருத்துக்களையும் கேட்ட றிந்து, அதன்படி செயல்பட தவறாதீர்கள். அதே போல் உங்களுக்காக நீங்கள் ஒரு செயலை செய்யும்போதும், உங்களது மனைவி, மற்றும் உறவினர்களுடன் கலந்து பேசி, அவர்களுடைய ஆலோசனைக ளை பெற தவறாதீர்.
7) சபையில் பேசும்போது, ஒருவரை நேரடியாக குற்றம் சொல்லி, அவரது மன தை நோகடித்து அவரை அவமதிக்காமல், அவர்செய்த தவறை நாகரீகமாகவும், நகைச்சுவையாகவும் சொல்லி அவரது தவறை சுட்டிக்காட் ட தவறாதீர்கள்.
8) தானே பெரியவன், தானே சிறந்தவன் என்ற அகந்தையை ஒழித்து, அனைவரை யும் மதிக்க தவறாதீர்
9) உங்களது இதயத்தில் எத்தகைய வலி இருந்தாலும், பிறரிடம் பேசும்போது அந்த வலியை கடுமையான வார்த்தைக ளால் வெளிப்படுத்தாமல், உங்களது வலியை பொறுத்துக் கொ ண்டு சிரித்த முகத்தோடு பதில் அளிக்க தவறாதீர்.
10) விட்டுக் கொடுக்க தவறாதீர்.
11) சில நேரங்களில், சில சங்கடங் களை சகித்துத்தான் ஆக வேண் டும் என்பதை உணர தவறாதீர்
12) நீங்கள் சொன்னதே சரி, செய்வ தே சரி என்று கடைசி வரை வாதா டாதீர்.
13) குறுகிய மனப்பான்மையை விட்டொழிக்க தவறாதீர்.
14) உண்மை எது, பொய் எது என்று விசா ரிக்காமல் இங்கே கேட்டதை அங்கும், அங்கே கேட்டதை இங்கும் சொல்வதை விடுங் கள்.
15) மற்றவர்களை விட உங்களையே எப் போதும் உயர்த்தி நினைத்து கவலைப் படாதீர்.
16) அளவுக்கதிக மாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்.
17) எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டா இல்லையோ, சொல்லி கொண்டிருக்காதீர் .
18) கேள்விபடுகிற எல்லா விசய ங்களையும் அப்படியே நம்பி விடாதீர்.
19) உங்கள் கருத்துகளில் உடும் புபிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ள தவறாதீர்.
20) மற்றவர்களுக்குரிய மரியா தையை காட்டவும், இனிய இத மான சொற்களை பயன்படுத்தவும் மறவாதீர்.
21) ஒருவரை சந்திக்கும்போது, வணக்கம் என்று சொல்லி உரை யாடலை ஆரம்பியுங்கள், அதேபோல் அவரிடம் இருந்து விடை பெறும்போது நன்றி, உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி நான் வருகிறேன் என்று கூற தவறாதீர்.
22) புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்பான சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாம ல் நடந்து கொள்ளாதீர்கள்.
23) பேச்சிலும், நடத்தையிலும், திமிர்த்த னத் தையும் தேவையில்லாத மிடுக்கையும் தவிர்த் துஅடக்கத்தையும் பண்பாட்டையும் காட் ட தவறாதீர்.
24) அவ்வபோது நண்பர்கள் உறவினார்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேச தவறாதீர்.
25) உங்கள் மனைவியையோ அல்லது உறவினர்களையோ அல்லது நண்பர் களையோ, உணவு விடுதிக்கோ அழை த்து செல் வதாக இருந்தால், அவரது விருப்பத்தை கேட்டு, அதை வாங்கிக் கொடுக்க தவறாதீர்.
26) உங்கள் மனைவியையோ அல்லது உறவினர்களையோ உங்களது நண்பர் களது விசேஷங்களுக்கு அழைத்துச் செல் லும் பட்சத்தில், உங்களுடன் வருபவ ரை உங்கள் நண்பருக்கு அறிமுகப்படுத்து ம்போது அவரை பற்றிய நல்ல விஷயங் களை, உங்களது நண்பரிடம் உயர்த்திச் சொல்ல தவறாதீர்.
27) பிணக்கு ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வே ண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வர தவறாதீர்.
28) தவறு உங்கள்மீது இருக்கும் பட்சத்தில் மன்னிப்பு கேட்க தவறாதீர்கள். தவறு அடுத் தவர்மீது இருந்து, அவர் உங்க ளிடம் மன்னிப்பு கேட்கும்போது மன்னிக்கத் தவறாதீர்கள். அத் தவறினை மறக்கவும் தவறாதீர்.
29) தேவையான இடங்களில் நன்றியும், பாராட்டையும் சொல்ல மறவாதீர்.
30) உங்களை பிறருடன் ஒப்பிட்டு, அவ ரது வளர்ச்சியை கண்டு பொறாமைபடு வதை அறவே விடுத்து, உங்களை, அவரு க்கு சமமாக நேர்வழியில் உயர்த்திக் கொ ள்ள முயற்சிக்கத் தவறாதீர்கள். அவ்வா று உங்களால் இயலாவிடில், அவரை கண்டு மகிழ்ந்து, அவரோடு சுமூகமான முறையில் நட்பி னை பாராட்ட தவறாதீர்.
No comments:
Post a Comment