எனது வாழ்வே எனது செய்தி, என்றார் மகாத்மா
பக்குவம் பெற்ற மனிதன் மரணத்திலும் மரணமடைவதில்லை
பக்குவம் என்றால் என்ன?
வேகாத அரிசிக்கும் வெந்த சோறுக்கும் உள்ள வேறுபாடுதானே சீரணக்க முடியாத வாழ்வை எளிதில் சீரணித்து வாழம் கலைதானே பக்குவம் அது பரிபூரணமானால் அதை பரிபக்குவம் என்பார் முழமையானால் அது தொடரும்
அது வாழம் இதை மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் வேறு வேறு வார்த்தைகளில் பேசுகிறது
தகுதியுள்ளவையே வாழம் முழமை பெற்றது தொடரும் குறையுள்ளது மறை தேயும் குற்றமுள்ளது அழிந்து போகும் உடலின் பரிணாம வளர்ச்சியை பேசுகிறது விஞ்ஞானம் உள்ளத்தின் பரிணாமத்தை உன்னத பரிபக்குவமென்கிறது மெய்ஞ்ஞானம் உள்ளம் முழமையடைவது பக்குவத்தால் அந்த பக்குவத்தால் பரிபூரணமனடந்து விடுகிறது அது மனிதத்தின் பரிணாம இலக்கான தெய்வ கல்யான குணங்களை நோக்கி பயனம் செய்து பரிபக்குவனடகிறது அந்த ஆழமான பதிவுகள் நிறைவான குணங்கள எழதப்படாத கோட்பாடுகளாக என்றெனறும் நிலைத்து நிற்கும் அதனால்தான் பரிபக்குவம் பெற்ற மனிதனுக்கு மரணம் வருகிறது ஆனால் முழமை பெற்ற அவன் மரணம் அடைவதில்லை அவன் தங்கியிருந்த உடல் மரணமடைகிறது அவன் வாழ்ந்திருந்த வாழ்வு மரணமடைவதில்லை அது வாழ்வாங்கு வாழ்கிறது எனது வாழ்வே எனது செய்தி, என்றார் மகாத்மா அந்த செய்தியைச் சொல்லவே இறைவன் அவரை அனுப்பினார் அந்தச் செய்தி உலகில் வாழம் அந்த நீதி உலகம் உள்ள வரை வாழம் விஞ்ஞான பூர்வமாக பார்த்தாலும் உள்ள்த்தின் பரிபூரண பரிபக்குவமே முக்தி எனப்படும், தீர்வு எனப்படும், அதுவே பக்குவம் என்பது அது தானும் அமைதியாக வாழ்ந்து தன்னைச் சுற்றியுள்ளவரையும் அமைதியாக வாழ அனுமதிக்கும் அது பரிபக்குவ மனநிலை சலனமில்லாத சஞ்சலமில்லாத அமைதி அந்த நிலைக்கு நிச்சயம் மரணமில்லைதானே மாறுகின்ற மற்ற நிலைகளுக்கு மரணமுன்டு மாறாத அந்த பரிபூரண பரிபக்குவ நிலைக்கு மாற்றமில்லை அதற்கு மரணமுமில்லை அதை அடைய முயன்றவர் பலர் ஆனால் அடைந்து வென்றவர் சிலரே வாழ்வென்பது வெண்ணெய் தடவிய வழக்கு மரம் பரிபக்குவ நிலையில் ஏழ முயன்று வழக்கி விழந்தவர் பலர் சோதனைகளை கடந்து ஈர்ப்பு விசைகளைக் கடந்து வழக்கி விழாது வாழ்ந்து பக்குவமடைந்தவருக்கு மரணமில்லைதானே.
No comments:
Post a Comment