அடிக்கடி முந்திரிக் கொட்டையாக மூக்கை நீட்டுவது ஆத்திரம் எனும் அடங்காத குதிரைதானே.
ஒரு செயலை செய்தபின் சிந்திப்பவருக்கு வெற்றியில்லை
ஒரு சொல்லை சொல்லியபின் சிந்திப்பவருக்கு நண்பரேயில்லை
நமது மனம் எனும் ரதத்தை, இரண்டு குதிரைகள் இழுத்துக்கொண்டு ஓடுகின்றன.
ஒரு குதிரை அறிவு, மற்றஒரு குதிரை உணர்ச்சிகள்,
இந்த பயணத்திலே ஏதாவது ஒரு குதிரை விரைவாக மூக்கை நீட்டி விட்டும்
அது அறிவு என்ற குதிரையானால் ஆபத்தில்லை
ஆனால் அடிக்கடி முந்திரிக் கொட்டையாக
மூக்கை நீட்டுவது ஆத்திரம் எனும்
அடங்காத குதிரைதானே.
முன்’ கோபம் என்று சொல்வார்கள்
சிந்திப்பதற்கு முன்பே வருவதால் அது முன்கோபம்
உண்மையில் ஒரு நொடி சிந்திக்க அவகாசம் எடுத்துக்
கொண்டால் நிச்சயம் ஒரு போதும் கோபமே வராது
அப்படியே வந்தாலும் அது உறுதியாக நியாயமாகத்தான்
இருக்கும்,அதை ‘பின்’கோபம் என்று பேர்வைக்கலாம்
வில்லால் மாண்டவரை விட சொல்லால் மாண்டவர் கோடி கோடியே.
No comments:
Post a Comment