அகன்ற இதயத்திலும் அன்பினிலும் அனைத்து உலகம் வந்து சேரும்
குடுமபம் : பாசம்
கருவின்றி உருவாவதில்லை உயரும்
உருவின்றி வருவதில்லை உணர்வு
கல்வியின்றி உயர்வதில்லை வாழ்வும்
காதலின்றி மகிழ்வதில்லை மனமும்
ஆசையின் முத்தத்தில் வெட்கம்
அன்னையின் முத்தத்தில் பெருமிதம்
நட்பின் முத்தமோ பாராட்டும்
நயவஞ்சக முத்தமோ நஞ்சூட்டும்
வயிறுக்கு உணவு இல்லாது அழுபவர் அதிகம்
வாழவுக்கு அன்பு இல்லாது அழுபவர் மிக அதிகம்
ஒரு மழலையின் மொழி அதன் தாயுள்ளத்துக்கே புரியும்
ஒரு இருதயத்தின் மொழி இன்னொரு இருதயத்துக்கே கேட்கும்
அகன்ற பைகளிலும் கைகளிலும் அனத்து மீனும் வந்து சேரும்
அகன்ற இதயத்திலும் அன்பினிலும் அனைத்து உலகம் வந்து சேரும்
பாறையை விட பாசம் வலுவானது அதை பறிக்க முடியாது
வளமையின் போது வருபவரெல்லாம் நன்பருமில்லை
வறுமையின் போது வருபவர் எல்லாம் பாரமுமில்லை
அறிவின் நீளமே ஆற்றல் வளரும்
செறிவின் நீளமே போற்றல் வளரும்
அன்பின் நீளமே சொந்தம் பெருகும்
பண்பின் நீளமே பந்தம் பெருகும்
No comments:
Post a Comment