நெருப்பாய் எரியும் மனிதனிடம் உறவுகள் வருவதில்லை
உறவு
- ஆல விதைவிதைத்தால் ஆயிரம்கிளையாகி மரமாகும்
- அன்பு விதை விதைத்தால் ஆயிரம் கிளையோடு உறவாகும்
- வளமையிலும் தனியாக வாழ்பவர் வறிஞர்
- வறுமையிலும் இனிமையாக வாழ்பவர் அறிஞர்
- குறை சொல்ல சொல்ல மறையான வேதங்கள் கூட நகையாகும்
- குற்றம் சொல்ல சொல்ல உறவான சுற்றங்கள் கூட பகையாகும்
- முள்ளைப் பார்த்தால் மலருமில்லை சுளையுமில்லை
- குற்றம் பார்த்தால் சுற்றமுமில்லை சொந்தமுமில்லை
- இதயத்துக்கு உறவு இல்லாதுஅழுபவர் அதிகம் இறந்தவர்
- இதயத்துக்கு உறவு இல்லாது இறந்தவர் அதிகம்
- நெருப்பு பற்றிய பொருளோடு சுற்றுப்புறத்தை அழிக்கும்
- வெறுப்பு பற்றிய மனமானது சுற்றத்தையும் அழிக்கும்
- சாகும் போது நமக்கு வேண்டாதவரையும் பார்க்க விரும்புகிறேன்
- வாழும் போது நமக்கு வேண்டியவரையும் பார்க்க மறுக்கிறேன்
- ஒருமுறை தவறுவது இயல்பு மறுமுறை தவறு
- மூன்றாம் முறை அழிவு
- ஒருமுறை திருமணம் இயல்பு மறுமுறை தவறு
- மூன்றாம் முறை அழிவு
- நெருப்பு எரியும் மரங்களுக்கு பறவைகள் வருவதில்லை
- நெருப்பாய் எரியும் மனிதனிடம் உறவுகள் வருவதில்லை
- நிலவில்லாத இரவும் உறவில்லாத வாழ்வும் இருளின் கொடுமை
- உறக்கமில்லாத இரவும்
- இரக்கமில்லாத உறவும் அதிலும் கொடுமை
No comments:
Post a Comment