Saturday, January 11, 2014

உங்களைச் சுற்றி உளவாளிகள்

உங்களைச் சுற்றி உளவாளிகள் .

1.ஒற்று என்னும் உளவு பார்க்கும் செயல் ,நாடுகளின் முன்னேற்றத்திற்கு மட்டுமல்ல தனி நபர்களின் முன்னேற்றத்திற்கும் அவசியம்.ஒவ்வொரு மனிதனும் உறவு மற்றும் நட்பு வட்டம்,பணிவட்டம் ,எதிர்ப்பு வட்டம் என்னும் மூன்று வட்டங்களுக்குள் தனது மனித உறவுகளை மேலாண்மை செய்து வருகின்றான்.

2.இந்த மூன்று வட்டங்களும் பெரும்பாலும் தனித்து     இயங்குவதில்லை.       ஒரு உறவு வட்டம் பணிவட்டத்திற்குள்ளும் ,உறவு வட்டமும் பணிவட்டமும் எதிர்ப்பு வட்டத்திற்குள்ளும் மாறி மாறி இயங்கும் .                               
                                                                      
3.இந்த மூன்று வட்டங்களில் உள்ளவர்கள்  ஒவ்வொருவரும் நம்மைப் பொறுத்து ,ஒவ்வொரு மாதிரி செயல் படுவார்கள் .இந்த செயலை நமதுநிலைக்கு  ஆதரவான செயல் ,நமது நிலைக்கு எதிரான செயல்,நடுநிலை  என்று பிரிக்கலாம்.இந்த மூன்று நிலைகளையும் நமது மேலே சொன்ன நட்பு,பணி ,உறவு என்னும்  மூன்று வட்டங்களில் உள்ளவர்களும் மாறி மாறி மேற்கொண்டு நமது வாழ்வில் வலம் வருவார்கள் .

3.இப்படி வலம் வருபவர்கள் எப்பொழுது நட்பு மற்றும் உறவு வட்டத்திற்குள்ளும் எப்பொழுது எதிர்ப்பு வட்டத்திற்குள்ளும் எப்பொழுது நடுநிலையுடனும் செயல் படுவார்கள் என்று முன்னிட்டு அறிந்து கொள்ளவில்லை என்றால் நாம் பல செயல்களை வெற்றிகரமாகச் செய்வது என்பது முடியாது.

4. இவர்களைக்  கையாள நாம் ஒரு ஒற்றனாக இருக்க வேண்டும் .மூன்று வட்டத்தினரும் எவ்வெப்பொழுது என்ன நிலைப்பாட்டினை கொண்டிருக்கின்றார்கள் என்பதை தொடர்ச்சியாக அறிந்து கொண்டே இருக்க வேண்டும் .ஆகவே தான் ஒற்று என்னும் உளவு பார்க்கும் செயல் நாடுகளின் முன்னேற்றத்திற்கு மட்டுமல்ல தனி நபர்களின் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்பிற்கும் அவசியம்.
                                                                                                             
5.இந்த உளவு பார்க்கும் முறையை ஒவ்வொருவரும் தெரிந்தோ தெரியாமலோ உணர்ந்து,அறிந்து வைத்து தங்களது நிலைப்பாட்டினை தக்க வைத்து வெற்றி அடைந்திருக்கின்றார்கள்.சரி இந்த மூன்று வட்டத்தினரையும் எப்படி உளவு பார்க்கலாம் என்று பார்ப்போம்.உளவு பார்ப்பதில் மூன்று முறை உண்டு .ஒருவகை நாமே உளவு பார்ப்பது ,அடுத்தவகை மற்றவர்கள் மூலம் உளவு பார்ப்பது மூன்றாவது வகை தாங்களே தங்கள் நிலைப்பாட்டினை கூறுபவர்களை அடையாளம் காண்பது.

6.முதல் வகை உளவைப் பற்றி பார்ப்போம்.நமது மூன்று வட்டங்களில் உள்ளவர்கள் பற்றி முழுவதும் நாம் அறிந்து கொள்ள வேண்டும் .அவர்களுக்கு என்ன பிடிக்கும்,பிடிக்காது.அவர்கள் எந்தெந்த பிரிவுகளில் திறமை காட்டுவார்கள் எந்தெந்த பிரிவுகளில் அவர்களுக்கு பலவீனம் .அவர்கள் எந்த முறையில் நம்மை உளவு செய்கின்றார்கள்,அவர்களுக்கு உதவிகள் புரியும் நபர்கள் யார்,அவர்களுக்காக நம்மை உளவு பார்ப்பவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

7.இந்த நபர்களுடன் நாம் தொடர்பு கொள்ளும் சூழ்நிலைகளில் அவர்களது உளவு மனப்பாண்மையை நம்மிடம் காட்ட மாட்டார்கள் மறைத்து வைப்பார்கள்.ஆகவே இதனை நாமே உளவு பார்ப்பது சிறந்தது .இந்த நபர்களுடன் நாம் தனிமையில் உரையாட வேண்டும் அவர்கள் கலக்கத்திலோ ,குழப்பத்திலோ இருக்கும் பொழுது தங்களைப் பற்றிய உண்மைகளை கூற அதிக வாய்ப்புகள் உண்டு .

8.அடுத்து மூன்றாம் நபர்களிடம் எப்படி நடந்து கொள்ளுகின்றார்கள் என்பதை பொறுத்து நாமே அவர்களின் நிலைப் பாட்டினை அறியலாம் .மற்றவர்கள் மூலமாக உளவு பார்க்கப்படும் நபரைப் பற்றி நாம் உளவுதான் பார்க்கின்றோம் என்று அறியப்படாமல் உண்மைகளை அறிவது.

9.இதெல்லாம் போக மற்றொரு முறை அவர்களது கொள்கைகளை ஏற்பது போல் பேசித் தெரிந்து கொள்வது.மற்றொரு முறை அவர்களது கொள்கைகளை எதிர்ப்பது போல பேசி அவர்களது மனதில் என்ன நினைத்திருக்கின்றார்கள் என்பதனையும் ,அவர்களது நிலைப்பாடு என்ன என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

10.இதெல்லாம் நாமே உளவு பார்ப்பது.மற்றவர்களை வைத்து உளவு பார்ப்பதற்கு முதலில் நமது இலக்கு நபரின் சுற்று வட்டத்தில் நெருக்கமானவர்கள் யார் என்பதை உளவு பார்க்க வேண்டும்.பின்பு அந்த நபர்களுடன் பேசி இலக்கின் குறிக்கோளை தெரிந்து கொள்ள வேண்டும் .எந்த சூழ்நிலையிலும் நாம் உளவு பார்க்கின்றோம் என்னும் உணர்வே இவர்களுக்கு வரக்கூடாது.

11.சுருக்கமாகச் சொன்னால் அடுத்தவர்களின் எண்ண  ஓட்டத்தை அறிந்து,அதற்கு ஏற்றாற் போல, நமது வாழ்விற்கு அதனை பயன்படுத்தும் திறமையை வளர்த்துக் கொள்ளும் போது  வெற்றி எளிதாகின்றது.

12.உளவு பார்க்க சில டிப்ஸ்கள்:

1.நாம் உளவு பார்க்கும் சமயம் நாமும் உளவு பார்க்கப் படுகின்றோம் என்ற எச்சரிக்கை தேவை.

2.நமது மூன்று வட்டத்தில் இருக்கும் நபர்கள் தனிமையில் அவர்களைப் பற்றிய ஒரு ரகசியம் என்று உங்களிடம் சொல்கின்றார்கள் என்றால் ,அவர் உங்களைப் பற்றிய ஒரு உண்மையை தெரிந்து  கொள்ள கண்னி வைக்கின்றார் என்று பொருள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளும் தருணம்.

3.பல பேருடன் உல்லாசமாக இருக்கும் பொழுது நம்மை அறியாமல் ஒவ்வொருவரது வீர தீர பராக்கிமங்களைச் சொல்லுகின்றார்கள் என்பதற்காக சுயம் இழந்து விட வேண்டாம்.இதுவும் உளவு பார்க்க ,பார்க்கப்பட நல்ல சந்தர்ப்பம்.

4.சில கில்லாடிகள் நம்மை இப்படி உளவு பார்க்கின்றார்கள் என்பதைத் தெரிந்து உண்மையை மறைத்து பொய்யை உலவ விடுவார்கள் . இவர்களை உளவு பார்க்க மூன்றாம் படி நிலையில் அதாவது இலக்கின் நெருக்கத்திற்கு ,நெருக்கம் என்னும் படி நிலையில் வைத்து உளவு பார்க்கலாம்.

இந்த உலகில் யாரும் உளவு பார்க்காமல் இல்லை ,உளவு பார்க்கப்படாமலும் இல்லை என்பதை உணருங்கள் ,வாழ்வில் வெற்றி அடையுங்கள்.

No comments:

Post a Comment