துன்பத்தை நமக்குச் சாதகமாக எப்படி பயன்படுத்திக் கொள்ள முடியும்?
என் வாழ்வில் நான் எதிர்பாராத மிகப் பெரிய துன்பம் வந்து விட்டது. குறட் பாக்களின் வழியே நடந்து வாழ்கின் ற எனக்கே அதைத் தாங்க முடியவில்லை.எனது தந் தை எனக்கு 10 வயதில் சொன்னது எதுவெனினு ம் வள்ளுவப் பேராசானி டம் அதனை ஒரு வினா வாக மாற்றிக் கொண்டு போய்க் கேள் உடன் விடை வரும் என்று.
வள்ளுவப் பேராசானிடம்
போய் நின்றேன். ஏன் முகம் வாடி யிருக்கின்றது.என்ன சொல் என்றார். சுவாமி எனக்கு ஒரு பெரிய துன்பம் வந் திருக்கின்றது அது மிகப் பெரிய கேட்டை என் வாழ்வில் விளைவிக்கும் என் அஞ் சுகின்றேன் என்றேன்.
என்னது துன்பமா அது கேட்டை விளைக் குமா.மிகுந்த மகிழ்ச்சி. உனக்கு துன்பமு ம் கேடும் வந்துவிட்டதா. மகிழ்ச்சிகொ ள். எத்தனை பெரிய வாய்ப்பு உனக்கு. ஆகா ஆகா மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று கை தட்டினார்.
நான் மனம் தளர்ந்து போனேன். என்ன சுவாமி நானோ துன்ப த்திலும் அதனால் வரும் கேடு குறித்தும் உங்களிடம் சொல்லி அதை வெல்வது எப்படி என்று கேட்க வந்தேன். நீங்களோ the என்க்கு வந்த துனபத்திற்காக என்னை மகிழ்ச்சி கொள்ளச் சொல்லுகின்றீர்களே. என்று வினவினேன்.
பேராசான் சொன்னார். அட நீ இவ்வளவுதானா .அந்தத் துன்ப த்தை நீ பயன்படுத்திக் கொள் என்றார்.
சுவாமி துன்பத்தை எப்படிப் பயன் படுத்திக் கொள்ள முடியும்.
இந்தத் துன்பத்தை ஒரு அளவுகோ லாக மாற்றிக் கொள். அத னை வைத் து உன் உறவுகள் நட்பு வட்டம் என்று எல்லோரையும் அளந்து விடலாம். இதில் யாரெல்லாம் உடன் ஒடி வந்து உனக்கு உதவி செய்கின்றனர், உதவி செய்யத் தலைப்படுகின் றனர். அய்யாவிற்கா இந்தத் துன்பம் இதனை நாம் தீர்த்து அய்யாவின் அருகில் இருக்க வேண்டும் எத்தனை பேர் உன் அருகிலேயே இருக்கத் தலைப்படுகின்றனர் என்று. இதுவரை உன் னருகேயே இருந்து வேறு யாரும் உன் அரு கிலே வரவிடாமல் தடுத்துக்கொண்டு ஏதோ அவர்கள் மட்டும் தான் உன்மீது அக்க றை கொண்டிருந்தவர்கள் போல் நடித்துக் கொண்டிருந்தார்களே. அவர்களெல்லாம் காணாமலே போய் விடுவதனை உன்னால் காண முடியும். இந்த துன்பம் ஒரு அளவுகோலாக உனக் கு உண்மையானவர்களை யும் உண்மையையும் காட்டி உதவும் என்றார். எனது அறியாமையை அகற்றிய அந்தப் பேராசான் முன்னர் கை கூப்பி நின்றேன்.
No comments:
Post a Comment