அச்சுறுத்தாமால் எச்சரித்து வைப்போம் தவறில்லை
வாழ்வென்பது பூவினால் செய்த படுக்கையல்ல
வாழ்க்கை என்பது ஒரு காட்டு வழிப்பயணம்
ஆனால் எல்லாம் நல்லபடி நடக்கும் என ஒப்புக்காக நாம் சொல்லி வைக்கிறோம்
அது தவறில்லை, நம்பிக்கை தரும் எண்ணங்கள் நன்மையே எதிர்பார்க்கும் துணிவு எல்லாம் நல்லது
அது பல நேரங்களில் மனித மனங்களில் ஒரு போலியான மமதையைத் தந்துவிடுகிறது
சாலைகள் என்பது ரோஜாப்பூக்களால் நிரப்பப்பட்ட மென்மையான படுக்கை என ஆசைப்பட்டுவருகிறது
நடைமுறையில் கல்லூரி வாழ்வு முடிந்து,கல்யாண வாழ்வு தொடங்கும் போது தேனிலவு முடிகிறது.
வாழ்வின் நிதர்சமான ஏமாற்றங்களையும், ஏற்றத்தாழ்வுகளையும் எதிர்பார்த்திராத ஏமாளி மனங்கள் துயரத்தில் துடித்தழகின்றன.
No comments:
Post a Comment