Sunday, January 5, 2014

குறை

குறை

குறை சொல்ல சொல்ல மறையான வேதங்கள் கூட நகையாகும்
குறை சொல்லாதீர்கள் அது குருத்துக்களை மடித்து விடும்
குறை சொன்னால் அது அவரது தன்மானத்தை தாக்கி எரிச்சலூட்டும்
குறை பட வாழார் உரவோர்
குறை மதி என்பது சிற்றறிவு
குறைகளில் எல்லாம் பெரிய குறை நம் குறையை உணராததே
குறைந்த உணவு உறக்கம் அதிக பொறுமை அன்பு வேண்டும்
குறைந்த வயது நிறைந்த வயது என்று ஏளனம் கூடாது
குறைந்த விலை நிறைந்த அழகு என்று ஏமாறக் கூடாது
குறைய ஆசைபடுபவர்க்கு அமைதி நிறைவாக கிடைக்கிறது
குறைய இருப்பவனை விட நிறைய ஆசைப்படுபவனே ஏழை
குறையிலும் நிறையிலும் சமமாக வாழ்வதே நம் மனதின் நுட்பம்

குறையை மிஞ்சி சென்று சிறப்படையக்கூடியது மனிதம்
குறைவாக இருக்கிறதென்று கொடுக்காமல் இருந்து விடாதே
குறைவாக இருந்தாலும் நிறைவாக இரு
குறைவாக கற்றாலும் அருமை செய்வதே அற்புதம்
குறைவாக பெற்று விட்டோம் என்று என்றும் வருந்தாதே
குறைவான ஆசையும் எளிமையான வாழ்வும் வேண்டும்
குறைவான வார்த்தைகளே சரியான நிறைவான வாக்குறுதி
குறைவான வார்த்தைகளே நிறைவான வழிபாடு

No comments:

Post a Comment