Wednesday, January 8, 2014

மன்னிக்கிறவர் புனிதராவார் மன்னிக்கப்படுபவர் மனிதராவார் தண்டிக்கிறவர் மிருகமாவார் தண்டிக்கப்படுபவர் கயவராவார்

மன்னிக்கிறவர் புனிதராவார் மன்னிக்கப்படுபவர் மனிதராவார் தண்டிக்கிறவர் மிருகமாவார் தண்டிக்கப்படுபவர் கயவராவார்
                        
சகிப்பு

மாடு முட்டிய தென்று திரும்ப முட்டுபவர் மனிதரில்லை
அறிவிலாதவர் திட்டுகிறாரென்று திரும்ப திட்டுபவர் அறிஞரில்லை

எத்தனை காற்று வந்தாலும் கல்தூண்கள் கலங்குவதில்லை
எத்தனை தூற்று வந்தாலும் நல்லவர்கள் கலங்குவதில்லை

போற்றும் மாலைகளுக்கு தலை குனிந்து சேவை செய்
தூற்றும் தூசுகளுக்கு தலை குனிய தேவையில்லை

பொருளுள்ளவர்கள் பிறர் அன்பை பன்பை பொருட்படுத்துவதில்லை
அருளுள்ளவர்கள் பிறர் குறையை குற்றத்தை பொருட்படுத்துவதில்லை

சிலரது பார்வை பூதக்கண்ணாடி போல குறைகளை மிகைபடுத்தும்
சிலரது பார்வை மூக்குகண்ணாடி போல நெருக்கமாக இருக்கும்

போற்றித் தரும் பரிசையும் தூய்மையால் மறுத்துவிடு
அது போற்றுபவரிடமே திருப்பிச் செல்லும்
தூற்றி வையும் வசவையும் தூசு போல் தட்டிவிடு
    அது தூற்றுபவரையே ஒட்டிக் கொள்ளும்

உறங்கும் சிம்மத்தை இறந்து விட்டதென துள்ளக் கூடாது
சகிப்பு தன்மையை பயந்து விட்டதென எண்ணக் கூடாது

       மன்னிக்கிறவர் புனிதராவார்
       மன்னிக்கப்படுபவர் மனிதராவார்
       தண்டிக்கிறவர் மிருகமாவார்
       தண்டிக்கப்படுபவர் கயவராவார் 

No comments:

Post a Comment