பகைவனுக்கு நீ தரும் மிக உயர்ந்த பரிசு மன்னிப்பு
நேசம்
- நன்பனுக்கு நீ தரும் மிகச்சிறந்த பரிசு அன்பளிப்பு
- பகைவனுக்கு நீ தரும் மிக உயர்ந்த பரிசு மன்னிப்பு
- கண்ணிலே கண்ணாடி அணிந்தால் உலகம் பசுமையாகத் தெரியும்
- கண்ணிலே அன்பு வளர்த்தால் உலகம் அழகாகத் தெரியும்
- இருளில் வரும் வின்மீன்கள் துயரில் வரும் நண்பரெனத் தூய்மையானது
- குளத்தில் வரும் நீர் மீன்கள் புகழில் வரும் போலிகளென அழுக்கானது
- துண்டு இடை நழுவும் போது ஓடி வந்து பிடிக்கும் கையை நட்பு
- துயரில் விழி அழும் போது தேடி வந்து துடைக்கும் கையே நட்பு
- படிக்க படிக்க பண்பு வளர்க்கும் பக்குவமான நூலென
- பழகப் பழக அன்பு வளர்ப்பது உத்தமமான நட்பு
- சிரித்துகதைத்து மகிழ்வு கொடுப்பது சிறியோர் நட்பு
- இடித்து உரைத்து இகழ்வைத் தடுப்பது இனியவர் நட்பு
- அற்பரை பெரிதென்றுமதிக்காதே
- அறிஞரை துரும்பென்று ஒதுக்காதே
- அகந்தையை மதியென்று கொள்ளாதே
- அன்பையே மறுத்தென்றும் தள்ளாதே
- நட்பு என்பது சாலை போல மனிதரை இணைக்கும்
- பகை என்பது வேலி போல இதயத்தை பிரிக்கும்
- நன்பனின் இரகசியத்தை காப்பவன் கற்புடய மனைவி போல
- நன்பனின் அவசியத்தில் உதபுவபன் கருவாக்கிய தாய் போல
No comments:
Post a Comment