Wednesday, January 1, 2014

பிளசும் மைனசும் .

1.நேர்மறை எண்ணங்கள் தான் நல்லது ,வாழ்வில் இப்படிப்பட்ட எண்ணங்களைத் தான் நாம் கடைப்பிடிக்க வேண்டும் .நேர்மறை எண்ணங்கள் எப்பொழுதும் வெற்றியைத்தரும்,எதிர்மறை எண்ணங்கள் எப்பொழுதும் தோல்வியைத் தரும் துன்பம் தரும் என்று தான் நாம் கற்பிக்கப் பட்டிருக்கின்றோம்.
                                        
2.இது முழுவதும் சரியா ?எல்லா காலங்களிலும் இது நிலைத்திருக்கின்ற உண்மையான விதியா?

3. நேர் மறை எண்ணங்கள் என்றால் என்ன ?எந்த ஒரு எண்ணம் எதிர்மறையாக இல்லையோ அது நேர் எண்ணம் .இந்த விளக்கம் முழுவதும் சரியாக இல்லை.எந்த எண்ணங்களால் மற்றவர்களுக்கும் மனித சமுதாயத்திற்கும் ,ஏன் உயிர் கள் அனைத்திற்கும் துன்பம் சிறிதேனும் விளைவிக்க முடியாதோ அது நேர் எண்ணம் .இந்த விளக்கமும் முழுவதும் பொருந்தி வருவதாக இல்லை.அப்படிப் பட்ட எந்த எண்ணமும் தோன்ற முடியாது .எந்த எண்ணமும் செயல்களும் யாருக்கேனும் சிறிய துன்பத்தை விளைவிக்காமல் இருக்காது.

4.துன்பம் தரும் எண்ணங்கள் எல்லாம் எதிர்மறை எண்னங்கள் ,இன்பம் தரும் எண்ணங்கள் எல்லாம் நேர்மறை எண்ணங்கள் .நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்றால் பல துன்பங்களை எதிர்கொள்ள வேண்டும் .அப்படி என்றால் நேர்மை என்பது என்ன மாதிரி எண்ணம்.
                                                                                                   
 மது அருந்துவது தான் இன்பம் என்றால் இந்த இன்பம் தரும் எண்ணம் நேர் மறை எண்ணமா?அப்படி என்றால் நேர்மறை எண்ணங்கள் என்றால் எவைதான்.உண்மையில் நமது மனத்திற்கு நேர்மறை என்றோ எதிர்மறை என்றோ எந்த எண்ணமும் கிடையாது .எல்லா எண்ணங்களும் அதன் கணக்கில் ஒன்றுதான்.

5.மனிதன் ,எண்ணங்களில் இருந்து செயல்களைச் செய்கின்றான்,செயல்கள் மூலமாக அனுபவங்களைப் பெறுகின்றான் .அனுபங்களை இனம் பிரிக்கின்றான் சுற்றுச்சூழலோடும் மற்ற மனிதர்களோடும் இயைந்து வாழ உதவி புரியும்,மற்றும் பிற மனிதர்களிடம் இருந்து தன்னை உயர்த்திக் காட்டும் , செயல்களை, அனுபவங்கள் மூலமாகத்  தரம் பிரிக்கின்றான் .இந்த அனுபங்களுக்கான செயல்களையும் அதற்கான எண்ணங்களை நேர்மறை எண்ணங்கள் என்று உணர்ந்து கொள்கின்றான்.

6.சில செயல்கள் மூலமாகப் பெற்ற அனுபவங்கள் ,மனிதன் சமூகமாக இயைந்து வாழும் போது, மற்றவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும்,இன்னல்களை ஏற்படுத்தும் ,அதேபோல் தனக்கும் இன்னல்களை ஏற்படுத்தும்  அனுபவங்களையும்  தரம் பிரிக்கின்றான்.இந்த அனுபவங்களுக்கான செயல்களையும் அதற்கான எண்ணங்களையும் எதிர்மறை எண்ணங்கள் என்று உணர்ந்து கொள்ளுகின்றான்.இந்த பிரபஞ்சத்தின் இயக்கத்தில் எந்த எண்ணம் தோன்றினாலும் அது அதற்குரிய எதிர் எண்னங்களையும் தன்னுள் கொண்டு உள்ளது என்பதை உணர்ந்தான்.ஆகவே முழுவதும் எதிர் எண்ணம் என்றோ முழுவதும் நேர் எண்ணம் என்றோ எதுவும் இல்லை.

7.இயற்கையோடு இயைந்த எண்னங்கள்  நேர் எண்ணங்கள் என்றும் ,அதற்கு முரணானது எதிர் எண்ணங்கள் என்று  கொண்டால் , நேர் மற்றும் எதிர் ஆகிய இரண்டும் இயற்கையானது  என்பதால் ,எது சரி?நேர் மறை எண்ணங்களுக்குள் அமிழ்ந்து கிடக்கும் எதிர் எண்ணங்கள் தான் நேர்மறை எண்ணங்களை இயக்குகின்றது .இந்த எதிர் எண்ணங்களை உள் அழுத்தி வரும் நேர்
எண்ணங்களே சிறப்புகள் செய்கின்றன.

அதேபோல் எதிர் எண்ணங்களுக்குள் புதைந்து கிடக்கும் நேர் எண்ணங்களை நமது அனுபவங்கள் மூலமாக பிரித்து உணரும் போது எதிர் எண்ணங்களும்  சிறப்புகள் செய்கின்றன.

No comments:

Post a Comment