தந்திரம் பழகுவோம்
1.நமது வாழ்க்கையின் பல தருணங்களில் நாம் மற்றவர்களோடு சேர்ந்து வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.அவர்களில் சிலரிடம் நாம் எப்படி கவணத்தோடு இருக்க வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.நாம் சிலரைப் பற்றி இப்படி கேள்விப்பட்டிருக்கலாம் ,வாயிலே பந்தல் போடுகிறான் என்று வேறு சிலரைப் பற்றி இப்படிக் கேள்விப்பட்டிருக்கலாம் , சர்க்கரை வாயன் என்று நாம் இன்று காணப்போவது இப்படிப்பட்ட பேச்சு மயக்கி எனப்படும் மனிதர்களைப் பற்றித்தான்.
2.மனிதனது சிந்தனையை எடுத்துக் கொண்டோம் என்றால் ,மனிதன் எல்லா சிதனைகளையும் படமாக தனது மனதில் எண்ணுகிறான்.சில திறமை வாய்ந்த பேச்சு மயக்கிகள் நமது வாழ்வின் பல கட்டங்களில் சந்திக்க வேண்டி வரும் .சரி அதனால் தான் என்ன சந்தித்து விட்டுப் போவோமே? என்றால் அதற்கு கொடுக்கப்படும் விலைகள் பற்றிக் கவலைகள் இல்லயென்றால் அதுபற்றி கவலை இல்லை என்பவர்களை பற்றி ஒன்றும் இல்லை .ஆனால் சில விலைகள் நாம் மீள முடியா இடத்திற்கு நம்மை கொண்டு சென்று விடும்.
3.சரி இந்த பேச்சு மயக்கிகள் என்னசெய்வார்கள் ?எப்படி இருப்பார்கள் ?இவர்கள் பெரும்பாலும் கலகலவென்று பேசும் குணமுடையவர்களாக மற்றவர்களால் சொல்லும் படி பேசுவார்கள் .இவர்களை சுற்றி எப்பவும் ஒரு கூட்டம் இருக்கும்படி செய்து கொள்ளுவார்கள் .இந்தக் கூட்டம் தான் இவர்களது உணவு ,இந்தக் கூட்டத்தில் இருந்துதான் தங்களுக்கு வேண்டிய வாழ்க்கை வசதிகளை பெற்றுக் கொள்வார்கள் .
4.இவர்களது பேச்சு முழுவதும் இவர்களுக்கு தெரிந்த விசயத்தைப் பற்றி மட்டுமே இருக்கும்.அந்த விசயங்களில் தங்கள் ஒரு கதாநாயகன் போலக் படம் காட்டிக் கொள்வார்கள் ,கொஞ்சம் கொஞ்சமாக உங்களது மனதில் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப் பாண்மையை படமாக ஏற்படுத்தி விடுவார்கள் .பின்பு தங்களது மன விருப்பத்தின் படி நீங்கள் ஆட்டுவிக்கும் நிலைக்கு வந்தவுடன் உங்களை அவ்ர்களது வாழ்வின் வெற்றிக்கு ஒரு படிக்கல்லாக ஆக்கி விடுவார்கள் .
5.இவர்களிடம் மாட்டிக் கொள்ளும் இளம் பெண்கள் கதை அதோ கதி தான் ,இவர்களது பேச்சில் மயங்கி இவர்கள் புருடாவாக விடும் சில கற்பனை நிகழ்ச்சிகளில் இந்த பேச்சு மயக்கிகளை ஒரு கதாநாயகன் போன்று எண்ணி தங்களது வாழ்வை தொலைத்த இளம் பெண்கள் அநேகம் பேர்.
6. சரி இவர்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி?முதலில் இப்படிப் பட்ட குணநலன்கள் கொண்ட மனிதர்கள் இருக்கின்றார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் .அப்புறம் எவராவது நாலு பேர் கூடி உள்ள இடங்களில் தங்களை பற்றி பெருமையாகவும் ,அவர்களுக்கு தெரிந்த விசயங்களை பற்றி மட்டும் பேசிக் கோண்டிருக்கிறார்கள் என்றால் அவர்களை விட்டு விலகுங்கள், அவர்களது பேச்சை கேட்பதால் உங்களுக்கு நட்டம் பின்னாலேயே இருக்கின்றது என்பதை உணருங்கள்.
7.அளவில்லாத நகைச்சுவை உணர்வுகளையும் இவர்கள் ஆயுதமாக கொண்டிருப்பார்கள் .இவர்களது நகைச்சுவைக்கு பின்னால் என்ன நோக்கம் இருக்கிறது என்று ஆராய்ந்து பாருங்கள் .முடிந்த வரை அவர்களது பேச்சுத்தொனியை நம்பி அவர்களை கதாநாயகன் என்று நம்பி விடாதீர்கள் அப்படி நம்பி விட்டீர்கள் என்பதை அவர்கள் தெரிந்து கொண்டார்கள் என்றால் அந்த நம்பிக்கையிலேயே உங்களை ஓரம் கட்டி விடுவார்கள்அல்லது உங்களை அவர்கள் வாழ்க்கை உணவாக்கி விடுவார்கள் . நீங்கள் எவ்வளவு திறமையானவர்களாக இருந்தாலும் கூட.
இப்படிப்பட மனிதர்களிடம் நடந்து கொள்ளும் முறை பற்றி நாமும் தெரிந்து கொண்டு நமது குழந்தைகளுக்கும் இதனை கற்றுக் கொடுப்போம்.
No comments:
Post a Comment