எனக்குத் தீங்கு செய்யுங்கள்.
1.யாரிடமும் நமக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்றால் நமக்கு ஏமாற்றமே கிடையாது தோல்வியும் கிடையாது .ஆனால் எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கையை யாராலும் அமைக்க முடியாது .எதிர்பார்ப்பு இல்லை என்று முடிவு செய்தால் அதுவே ஒரு எதிர்பார்ப்பு ஆக உள்ளது.ஆகவே மனித வாழ்க்கையில் ஏமாற்றம் என்பது தவிர்க்க முடியாதது.
2.வெற்றி என்று ஒன்று தனியாக இல்லை .இப்படிச் சொல்லலாம் வெற்றி என்பது நாம் எதிர்பார்த்த நிகழ்வு அல்லது ஒரு தோல்வியில் இருந்து இன்னொரு தோல்வியை நோக்கி மிகுந்த ஆர்வத்துடன் செல்வது.நமது ஆர்வத்தைப் பொறுத்து தான் அந்தத் தோல்வியின் பாதையில் நமது எவ்வளவு எதிர்பார்ப்புகளை அடைந்தோம் என்பதை உணரமுடியும்.
3.நாம் கீழே விழுந்த இடம் தான் எப்போதும் வணங்குதற்குரியது.நம்மை எதிர்பார்ப்பில் இருந்து தள்ளிவிட்ட அல்லது நமது காலை வாரி விட்ட நபர்கள் போற்றுதலுக்குரியவர்கள் .நாம் வாழ்க்கையில் தோற்ற தருணங்களே நாம் வாழ்ந்த தருணங்கள் .நம்மை உணர்ந்த தருணங்கள் .நமது முழு திறமையையும் கூர் தீட்டிய தருணங்கள்.
4.நான் எப்போதும் ஒரு வித்தியாசமானவன் என்று உங்களை நீங்களே நினையுங்கள். எனக்கு கண்ணீர் சுரப்பிகள் தேவையின்றி அமைகப்பட்டிருக்கின்றது.அதனால் தான் நான் வெங்காயம் உரிக்கும் போது கண்ணீர் விடும் தருணத்தில் மட்டும் எனது வாழ்வின் துக்கமான தருணங்கள் என்று ஏதாவது ஒன்றை நாம் உணார்ந்திருப்போம் என்று அதனை நினைத்துப் பார்க்கின்றேன். கண்ணீரையும் வீணடிக்காமல் அதனையும் அந்தத் தருணத்தையும் ஒரு மதிப்புள்ளதாக்குவதற்கு என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்.
5.எனது வாழ்வில் இப்படி தற்செயலாக ஏற்படும் கண்ணீர் துளிகளை இப்படித்தான் மதிப்புள்ளவைகளாக மாற்றி வருகின்றேன்.அதனால் தான் எனக்கு கண்ணீர் சுரப்பிகள் தேவையில்லாமல் படைக்கப்பட்டுள்ளது என்று நினைத்திடுங்கள்.
6..நமது வாழ்வு முழுவதும் படிப்பினைகள் .நமது வாழ்வின் எல்லா தருணங்கள் மற்றும் தருணங்கள் இல்லாதவைகளில் இருந்தும் நாம் படிப்பினைகளைப் படித்துக் கொண்டே,பிடித்துக் கொண்டே இருப்போம்.நம் மேல் ஒட்டும் சிறு தூசி ,நாம் தடுக்கி விழுந்த புல்லின் நுணிகள்,நமது மனதி ல்வேதனை உணர்வுகளைக் காட்டிய மனிதர்கள் இவைகள் அனைத்தும் நாம் நமது வாழ்வில் மகிழ்ச்சி என்று நீ நினைக்கும் தருணங்களை விட மதிப்பிற்கும் போற்றுதலுக்கும் உரியவைகள்.நமது வாழ்வின் ஒவ்வொரு சிறு நிகழ்வில் இருந்தும் நாம் பாடங்களைக் கற்றுக் கொண்டேஇருப்போம் நமது நினைவுகளும் செயலக்ளும் அடங்கும் வரைக்கும்.
7.அதனால் இப்படி சொல்லிக் கொள்ளுங்கள் ,சூழ்நிலைகளே என்னைத் தோற்கடியுங்கள் ,எனக்குத் துக்கத்தைத் தாருங்கள்,என்னைத் திறமையற்றவனாக மாற்ற முனையுங்கள்,என்னை சோம்பேறி ஆக்குங்கள்,நான் மகிழ்வு என்று நினைக்கும் எந்த உணர்வும் எனக்கு கிடையாமல் செய்யுங்கள்,நான் முனையும் போதெல்லாம் என் காலைப் பிடித்து இழுங்கள்,உறவுக்காரர்களே என்னை உங்கள் உறவுக்காரனே இல்லை என்று சொல்லுங்கள்,நான் ஒரு சுய நலவாதி என்று சொல்லுங்கள்,என்னை எப்போதும் அழ விடுங்கள் நான் உங்களுக்கு உண்மையுள்ளவனாகவும் நன்றியுள்ளவனாகவும் எனக்கு நல்ல பாடம் கற்றுக் கொடுத்த ஆசானாக நினைத்து வணங்குகின்றேன்.
8.என்னைக் கிணறிலே தூக்கிப் போடுங்கள் அதில் எடுக்க முத்தில்லை என்றாலும் முக்குளித்து அந்தக் கிணற்றின் ஆழத்தை பிரபஞ்சத்தின் எல்லையில் இருந்து அளந்து வருகின்றேன் ,என்னைக் குழியிலே தள்ளுங்கள் அதில் எந்த மனித இனத்திற்கான முன்னேற்றப் பயிர்களைப் பயிரிடலாம் என்று அறிந்து வருகின்றேன்.என்னை உங்களுடன் சேர்க்காதீர்கள் நான் நீங்கள் நினைக்கும் அளவிற்கு நல்ல நண்பன் அல்ல ,யாருக்கும் தீங்கு செய்து நான் பாடம் கற்க விரும்பவில்லை என்றும் உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்.
9..தீங்கு என்னில் செய்யலாம் அதற்கு என்னை நான் எப்போதும் தயாராக வைத்திருக்கின்றேன்.ஆனால் உங்கள் மூளையை கொஞ்சம் கூர் தீட்டி வாருங்கள் சாதாரணமாக ஒரு நபருக்குச் செய்யப்படும் தீங்கை எனக்குச் செய்ய முயல வேண்டாம் அதில் நீங்கள் தோல்வியடைவதை நான் விரும்புவதில்லை.உங்கள் மூளையை கூர் தீட்டி வாருங்கள் எனக்கு உங்கள் அறிவினால் தீங்கு செய்யுங்கள்.உலகில் உள்ள அனைத்துக் கேடுகளையும் ஒரு செயலில் ஒருங்கினைத்து எனக்குச் செய்ய உங்களால் முடியும் என்றால் நன்று என்று எவரையும் அழையுங்கள்.
இந்தப் பதிவினால் உங்களுக்குத் தீங்கு என்றால் அதனையும் வரவேற்றுப் பாடம் படியுங்கள் இயற்கையின் செய்கையை முழுமை பெறச் செய்யவே.
No comments:
Post a Comment