மற்றவர்கள் கணிப்பும் உங்கள் மறுப்பும் .
1.மறுக்கக் கற்றுக் கொள்ளுங்கள் பெற்றுக் கொள்வதற்காகவே.மறுக்கத் தெரிந்தவர்களே பெற்றுக் கொள்ளத் தகுதியானவர்கள்.நாம் தாயின் கரு முட்டையாக இருந்த காலகட்டத்தில் இருந்து அந்த முட்டை தந்தையின் விந்தனுவை விரும்பிப் பெற்றும் ,நாம் தந்தையின் விந்தனுவை தாயின் கருமுட்டை ஆனது விரும்பி உருவாக்கப்பட்டதால் தான் நாம் எல்லொருமே எப்பொழுதும் எதையாவது விரும்பியும் ஏற்றுக் கொள்ளவும் ஆசைப் பட்டு நமது வாழ்வை நடத்தியும் நகர்த்தியும் வருகின்றோம்.
2.எந்த ஒரு பொருளாவது எந்த ஒரு சூழ்நிலையாவது நமக்கு வேண்டும் என்பதை நாம் இடையறாது வேண்டியும் ஆசைப்பட்டும் அதன் பொருட்டே நமது வாழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நமது வாழ்வின் எல்லா காலங்களிலும் எல்லா சூழ்நிலைகளிலும் நம்மை நோக்கிப் பொருட்களும் சூழ்நிலைகளும் வந்து கொண்டேயிருக்கின்றன .
3.இவை எல்லாவற்றையும் நாம் அப்படியே ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா?சில சமயங்களில் நாம் காத்துக்கிடந்த பொருளோ ,சூழ்நிலையோ நம்மை நோக்கி வரும் போது கூட நாம் அதனை ஏற்காமல் மறுக்க கற்றுக் கொள்ள வேண்டும்.அதனை விடப் பெரியதான ஒன்றிற்குத் தான் நான் தகுதியானவன் என்பதைக் காட்ட.
4.ஒரு சின்ன உதாரணம் நாம் சில சூழ்நிலைகளையும் பொருட்களையும் மறுக்கும் போது நான் இதனை விடப் பெரியதான நிலைக்கு அருகதை உள்ளவன் என்பதைப் பறை சாற்றுகின்றோம் .அதே போல் இவருக்கு ஏற்றுக் கொள்ளும் மனப்பாண்மை மட்டுமல்ல சில விசயங்களை மறுக்கும் வல்லமையும் இருக்கின்றது என்பதை சாத்வீக வழியில் கூறுகின்றோம்.
5.மனிதன் தனது வாழ்வை நடத்துவதற்கு மனிதர்களால் ஆன ஒரு மனித வளையத்தை அமைத்து வைத்திருக்கின்றான்.தானும் அப்படிப் பட்ட மனித வளையத்திற்குள் உறுப்பினராகவும் இருக்கின்றான். அந்த வாழ்க்கை வளையத்திற்குள் இருக்கும் ஒவ்வொருவரது குனத்தையும் விருப்பு வெறுப்புகளையும் கணிக்கின்றான்.தனது வாழ்க்கை வளையத்தி ற்குள் இருக்கும் மனிதர்கள் எந்த சமயத்தில் எவ்வித சூழ்நிலைகளில் எப்படி எதிர்வினை ஆற்றுவார்கள் அதில் நம்முடைய விருப்பங்களை நாம் நிறைவேற்றிக் கொள்வது எப்படி என்ற ரீதியில் அந்தக் கணிப்பு இருக்கும்.
6.மற்றவர்களது வாழ்க்கை வளையத்திற்குள் இருக்கும் நம்மைக் கணிக்க நாம் இடம் கொடமால் நமது வாழ்வை நடத்த முடியாது .ஆனால் முழுவதும் மற்றவர்களது கணிப்பில் நமது செய்கைகள் அமைந்துவிட்டால் நாம் அவர்கள் கை வசமாவது நிச்சயம்.இதனால் நாம் மற்றவர்களின் வாழ்க்கைக்கும் வசதிக்கும் பலிகெடாவாக ஆகிவிடுவோம்.இந்த சூழ்நிலைகளில் தான் நமது கணிப்புத் தவறு இன்னும் இவரை நாம் சரியாகக் கணிக்கவில்லை என்ற குழப்பங்களை மற்றவர்களுக்குக் கொடுங்கள் உங்களை மற்றவர்கள் தங்களது பிடியில் வைத்துக்கொள்ளாமல் இருப்பதற்கே.நாம் கணிக்க வேண்டியது இன்னும் இவரிடம் நிறைய இருக்கின்றது என்ற மலைப்பைக் கொடுங்கள்.
7.நாம் எல்லோரும் இப்படி மனிதர்களைக் கொண்ட வாழ்க்கை வளையத்தை அமைத்துக் கொண்டிருக்கின்றோம் அப்படிப்பட்ட வாழ்க்கை வளையத்திற்குள் நாமும் ஒரு அங்கமாக இருந்து கொண்டிருக்கின்றோம்.கணித்தல்கள் மூலம் மற்றவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக நமது ஆளுகைகுட்படுத்தி நமது காரியங்களைச் சாதிக்கின்றோம். நாம் சில சமயம் கணிக்கின்றோம் சில சமயம் கணித்தலுக்கு உள்ளாகின்றோம் .கணித்தல்களுக்குக் குழப்பம் விளைவிப்பது தான் இந்த மறுத்தல் விதி .
8.மறுத்தல் விதியை எப்போது யாரிடம் எந்த வகையில் பயன் படுத்துவது என்பதை உங்கள் மனதில் நினைத்துக் கொண்டே இருங்கள்.கணித்தல் மூலமாக உங்கள் ஆளுகையை நீங்களாகவே முன் வந்து மற்றவர்கள் மீது உபயோகப் படுத்தாமல் மற்றவர்கள் அவர்களது கணித்தல்கள் மூலம் உங்களை பயன்படுத்த முனையும் போது மறுத்தல் மூலம் உங்கள் ஆளுகையை நிலை நாட்டுங்கள்.
9..ஆதிக்கத்திற்கு உட்பட்டு வாழ்வதில் தான் எனக்கு மகிழ்ச்சி என்றால் இந்த மறுத்தல் சிந்தனையே தேவையில்லை .ஆனால் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் நாம் யாருடைய வாழ்க்கை வளையத்திற்குள் இருக்கின்றோமோ அவர்களது பிடியில் இருந்து எப்போது தப்பிப்போம் என்பது தான் வாழ்க்கை வளைய வாழ்வின் உச்சகட்டம்.ஆகவே மறுத்தல் விதியின் மூலமாக உங்களைக் கணக்கிடுவதில் மற்றவர்களுக்கு சவால் விடுங்கள்.மற்றவர்களின் சவால்களை எப்படி எதிர் கொண்டு அவர்களைச் சரியாக செயல் படுத்த வைக்கலாம் என்று சிந்தனை செய்யுங்கள்.
10.இப்படி உங்கள் மறுப்பு இருக்கலாம்,இன்று நான் உன்னுடன் சினிமாவுக்கு வரவில்லை வேறு வேலை இருக்கின்றது,நீங்கள் நினைப்பது போல் இந்த உணவு எனக்கு தற்போது பிடிக்கவில்லை,நான் கெட்டவன் என்று நினைக்கும் அந்த நபர் கெட்டவரில்லை ,இந்த ரீதியில் உங்கள் வாழ்க்கை சூழ்நிலைக்கு ஏற்ப மறுத்து விடுங்கள்.உங்களது மனித வளையத்திற்குள் இருக்கும் நபர்கள் இப்படி மறுக்கும் போது அவர்களது ஆளுகையை எப்படி எதிர்கொள்வது என்றும் கணக்கிடுங்கள்.
11.இந்த பிரபஞ்சத்தின் மொழி கணிதம் என்று சொல்லுகின்றார்கள் ,இந்தப் பதிவைப் படித்த நீங்கள் எப்படி என்னைக் கணக்கிட்டீர்கள் என்பது முக்கியமல்ல நீங்கள் எனது நேரடியான மனித வளையத்தினுள் இல்லை,இந்தப் பதிவை படித்த பின்பு இதனால் நீங்கள் கற்றுக் கொள்ளக்கூடிய விதியையும் பாடத்தையும் மறுக்கமாட்டீர்கள்,
No comments:
Post a Comment