வைராக்யம் எழுத்து குறிக்கோள் இலட்சியம் நம்பிக்கை நோக்கம்
வைராக்யம்
- மும்மையில் இம்மியும் உண்மையில் இழந்திட வில்லையே
- வெல்லுவோம் இனியும் மீட்போம் நம்புகழ் ஜ்யம் இல்லையே
- கரையாத் ஆர்வமும் கலங்காத மனமும் இருந்தால் கரையேறாலாம்
- மறையாத திடமும் மங்காத திறமும் இருந்தால் லட்சியமடையலாம்
- தோல்வி என்பது பலருக்கு சவப்பெட்டிக்கு ஆணி
- தோல்வி என்பது சிலருக்கு பணப்பெட்டிக்கு ஏணி
- கடந்த காலத்தை பொற்காலமென களிப்பவர் வீணர்கள்
- நடந்த காலத்தை பொற்காலமாக்க உழைப்பவர் வீரர்கள்
- மன உறுதியென்பது கருங்கல்லின் சத்தம்
- பிடிவாதமென்பது மண்பானையின் சத்தம்
- முடிந்தவர்கள் சாதிக்கிறார்கள்
- முடியாதவர்கள் போதிக்கிறார்கள்
- இடிந்தவர்கள் வீழ்கிறார்கள்
- எழுந்தவர்களே வெல்கிறார்கள்
- சோர்வும் நெஞ்சமும் பேர்வுறும் சித்தமும் தேர்வுறுவதில்லை
- நேர்வுறும் நெஞ்சமும் நிலையான உறுதியும் தேரேறுவாரே
- வெற்றியின் மகுடங்களோ நம்மை வீழ்த்தும் பெரும்பாலும்
- தோல்வியின் தழும்புகளோ நம்மை தூண்டும் மின்சாரம்
- முயற்சி செய்து வென்றால் தான் இனிமை கூடும்
- முயற்சி செய்து தோற்றாலும் வலிமை கூடும்
துணிவு
- நெஞ்சத்தில் துணிவு எண்ணத்தில் தெளிவு வேண்டும்
- நேர்மையின் துணையும் வாய்மையின் வாக்கும் வேண்டும்
- காரணமே இல்லாமல் கோபப்படுவன் மனிதன் ஆக மாட்டான்
- காரணம் இருந்தும் கோபப்படாதவன் அறிஞன் ஆக மாட்டான்
- புதைபடும் கணைக்கும் புறம் கொடாது யானை
- யாது வரினும் மயங்காதே மானமே பெரிது
- சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் ஒன்றும் ஆழமில்லை
- வாழத் துணிந்தவனுக்கு வறுமை ஒன்றும் பாரமில்லை
- அறிவும் தெளிவும் உள்ளவருக்கு வாழ்வில் பொருளும் தேவையில்லை
- பணிவும் துணிவும் உள்ளவருக்கு பாதையில் துணையும் தேவையில்லை
- கண்ணிருந்தும் கல்வியில்லாதவர் குருடரே
- கையிருந்தும் துணிவில்லாதவர் முடவரே
- காதிருந்தும் கேள்வில்லாதவர் செவிடரே
- கருத்திருந்தும் சொல்லில்லாதவர் ஊமையே
- தைர்யம் என்ற கைப்பிடி இல்லாது பல வாள்கள் உறங்குகின்றன
- துணிவு என்ற கைத்தடி இல்லாது பல கால்கள் முடங்குகின்றன
- பணிவாக பழகத் தெரிந்தவருக்கே பாசம் கிடைக்கும்
- துணிவாக மறுக்கத் தெரிந்தவருக்கே சுதந்திரம் கிடைக்கும்
- பகையை தவிர்ப்பது என்பது தற்காலிகத் தீர்வு
- பகையை சந்திப்பது என்பதுவே நிரந்தர பாதுகாப்பு
எழுத்து
- வாள் எடுக்கும் வீரன் கை ஒரு எதிரியை எதிர்க்கும்
- சொல் தொடுக்கும் போனா மை ஒரு கோடியை எதிர்க்கும்
- மருந்தும் விருந்தும் சில நாளோ
- பெயரும் புகழும் பல நாட்கள்
- உடலும் உயிரும் சில நாளே
- சொல்லும் எழுத்தும் பல நாட்கள்
- கருத்துகள் என்பது கட்டப்படாத உதிரிப்பூக்கள்
- கவிதைகள் என்பது லயத்தில் தொடுத்த மலர் மாலை
- உள்ளத்தைச் சொல்பவரை விட உவப்பத்தை சொல்பவர் பின் உலகம்
- நல்லதைத் சொல்பவரை விட நாக்குக்கு குறிப்பவர் முன்செல்வம்
- தீமையை நன்மையென்று போற்றினால் துயரம்
- நன்மையை தீமையென்று தூற்றினால் பெருந்துயரம்
- சில புத்தகண்க்களை படித்தேன் என்று வெளியில் சொன்னால் வெட்கம்
- சில புத்தகங்களை படித்ததில்லை என்று வெளியில் சொன்னால் வெட்கம்
- நல்ல ப்ஃழக்கம் எனும் கற்களால் கட்டபட்ட கோபுரமே ஒழுக்கம்
- நல்ல கருத்து எனும் சொற்களால் கட்டபட்ட மாலையே கவிதை
- ஒரு பெண்ணை விரும்பும இரு நன்பர்கள் விரைவில் பகைவராவார்கள்
- ஒரு புத்தகத்தை விரும்பும் இரு உள்ளங்கள் சிறந்த நண்பர்களாவறார்கள்
குறிக்கோள் : இலட்சியம்
- ஒரு இலக்கை அடையும் முன் அளந்தால் பெரிதாக தோன்றும்
- ஒரு இலக்கை அடைந்த பின் அளந்தால் சிறிதாகத் தோன்றும்
- இலக்கியம் என்பது வாழ்வை ஒவியமாக்கி அழகூட்டும்
- இலட்சியம் என்பது வாழ்வை காவியமாக்கி புகழ்ட்டும்
- காட்சிகளை கவிதையாக்குவது நம் இலக்கியம்
- கவிதைகளை காட்சிகளாக்குவது நம் இலட்சியம்
- உன் நன்பனது பெயர் தெரிந்தால் நீ யரென் நான் சொல்வேன்
- உன் இலட்சியத்தின் பெயர் தெரிந்தால் உன் குணமெது நான் சொல்வேன்
- என்னை இறை படைத்தது எதற்காக என்று கேட்டவன் மனிதன்
- தன்னை இறை படைத்தது இதற்காக என்று அறிந்தவன் புனிதன்
- உடைந்த கற்களும் வளைந்த பாத்திரங்களும் உலக அதிகமாகாது
- உடலின் தேவைகளும் ஆடம்பர ஆசைகளும் வாழ்வின் குறிக்கோளாகாது
- இழிந்த ஆசையில் வெற்றிபெற்றாலும் நல்லதல்ல
- உயர்ந்த இலட்சியத்தில் தோல்வியுற்றாலும் தோல்வியல்ல
- எந்தச் செயல் செய்பவர்க்கும் இம்மையில் தம்மை
- இயக்குவதற்கு ஒர் இன்பம் தரும் இலக்கு வேண்டும்
- நரம்பிலே மின்னலும் நாடியின் குருதியிலே புனலும் வருவது கொள்கையாலே
- உடம்பிலே மிருக்கும் உறுதியில் பிடிப்பும் வருவது குறிக்கோளாலே
- சிறிய மலையைத் தேர்ந்தவர் சீக்கிரம் ஏறி சீரழிகிறார்
- பெரிய மலையை ஏறியவர் தாமதமானாலும் புகழ்பெறுகிறார்
நம்பிக்கை
- பிரச்னைகளுக்கு தீர்வை காண்பவன் நம்பிக்கை வாதி
- தீர்வுகளில் பிரச்னையை காண்பவன் அவநம்பிக்கைவாதி
- மனிதர்க்கு இருகன் அறிஞருக்கு மூன்றாவது கண் ஞானக்கன்
- அற்பருக்கு இருகை ஆற்றலுள்ளவர்க்கு மூன்றாவது கை நம்பிக்கை
- மரணத்துக்கு பின் வாழ்வு உண்டு என்று நம்பிக்கை தவறு
- தோல்விக்கு பின் வாழ்வு உண்டு என்ற நம்பிக்கை உயர்வு
- நம்பிக்கையெனும் எரிபொருள் தீராத வரை நம் உயிர் வாகனம் ஒடும்
- நம்பிக்கையெனும் எண்ணெய் காயாத வரை நம் தீப விளக்கு எரியும்
- உண்மை ஒருநாள் ஒளிரும்
- நல்ல உள்ளங்கள் அன்று தெளியும்
- உலகம் ஒருநாள் திருந்தும்
- கள்ள உள்ளங்கள் அன்று வருந்தும்
- உலகின் கொடுமை முட்டாள்கள் தம் அறிவை நம்புவதால் வந்தது
- உலகின் வறுமை அறிஞர்கள் தம் அறிவை நம்பாத்தால் வந்தது
- மருந்து பலன் தரும் என்று நம்பி உண்டாலே அது குணம் தரும்
- வாழ்வு பயன் தரும் என்று நம்பி வாழ்ந்தாலே அது சுகம் தரும்
- அதிட்ட நம்பிக்கை கொண்டவன் கைத்தடியில் நடக்கும் குருடன்
- இறை நம்பிக்கை கொண்டவன் இறக்கையில் பறக்கும் பறவை
- ஒருவனை நல்லவனாக மாற்றும் வழிநம்பிக்கை வைப்பதே
- ஒருவனை வல்லவனாக மாற்றும் வழி நம்பி கை கொடுப்பதே.
நோக்கம்
- நோக்கம் நேர்மையானது என்றால் வேற்றியில் சந்திதேகமில்லை
- நோக்கம் நியாயம் இல்லை என்றால் தோல்வியில் சந்தேகமில்லை
- இலக்கு இல்லாத கப்பலும்
- இலட்சியம் இல்லாத மனிதனும் மூழ்குவார்
- இலக்கு இல்லாத அம்பும்
- இனிமை இல்லாத சொல்லும் ஆபத்து தரும்
- கல்லைக் கன்டவன் கடவுளை உணர்வதிலை
- முள்ளைக் கன்டவள் மலரை பறித்ததில்லை
- தெளிவான ஒழுக்கமுடையவர்க்கு காலமும் கடவுளும் பணியாட்கள்
- தெளிவான இலட்சியமுடையவர்க்கு காற்றும் கானலும் வேலையாட்கள்
- பணத்தை பெருமையாக நினைத்த பலர் கயவராகி விட்டனர்
- நமக்காக நாம் பிரார்த்திக்கும் போது நமது உறுதி மொத்தமாகிறது
- பிறருக்காக நாம் பிரார்த்திக்கும் போது நமது குருதி சுத்தமாகிறது
- அறிஞர் மனம் ஆசை என்ற குப்பைகளால் குவிக்கப்பட்டுள்ளது
- இலக்கணம் இல்லாத வாழ்க்கை வெறும் பிதற்றலே
- இலட்சியம் இல்லாத வாழ்க்கை வெறும் பதட்டமே
- மலர்செடியில் முள்ளா என்று விருந்துபவன் அவநம்பிக்கைவாதி
- முள்செடியில் மலரா என்று வியப்பவள் நம்பிக்கைவாதி
No comments:
Post a Comment