வெச்சா குடுமி இல்லைன்னா மொட்டை
1.வெச்சா குடுமி இல்லைன்னா மொட்டை என்று வாழ்கிறவரா நீங்கள் ,இந்த மனநிலையை ஆளுகை செய்வதில் தான் வாழ்க்கை வெற்றி அமைந்திருக்கிறது.நாம் அனைவருமே வாழ்க்கையின் சில நிலைகளில் இந்த மனோபாவத்துடன் வாழ்ந்து வருகிறோம்.
2.எனக்கு தெரிந்த ஒரு நபர் இந்த காலத்திலும் வாகனத்தில் பயணம் செய்வது கிடையாது,ஏன் என்றால் வாகனத்தில் இருந்து வரும் டீசல் புகை வாடை அவருக்கு ஒத்துக்கொள்ளாதாம்.அதே போன்று நாம் சில நிலைகளில் எனக்கு இது ஒத்து வராது அது ஒத்து வராது என்று அந்த சூழ்நிலைகளை ஆளுமை செய்ய முடியாமல் தவிக்கிறோம்.
3.இதற்கு என்ன செய்வது,இதைத்தான் நம் பெரியோர்கள் வெச்சா குடுமி இல்லைன்னா மொட்டை மன நிலை என்று சொல்கிறார்கள்.வாழ்க்கையின் எந்த நிலையிலும் நமக்கு மிகவும் பிடித்த ஒன்று ஒன்று இருக்கும் அதே போன்று மிகவும் பிடிக்காத ஒன்று இருக்கும்.இதனை எப்படி ஆளுகை செய்வது ?
இந்த உலகில் எதுவுமே முழுமையான ஒன்றல்ல என்பதை நாம் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.
4.அதே போல மாற்றவே முடியாதது என்று பலவும் இருக்கின்றது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.விளையாட்டாகச் சொல்வதுண்டு இந்த உலகில் யாருமே முழுமையான ஆணும் கிடையாது முழுமையான பெண்ணும் கிடையாது ,ஆண் என்பவன் பெண்தண்மையை ஒரு குறிப்பிட்ட விகிதாசாரத்தில் தனக்குள் கொண்டிருக்கிறான் ,அதே போலத்தான் பெண்னும்.
5.இப்படி மனிதனின் பிறப்பிலிருந்து எந்த விசயமும் முழுக்க குடுமியாகவோ அல்லது முழுக்க மொட்டையாகவோ இல்லை,ஒவ்வொரு விசயமும் மற்றும் பொருளும் அதன் எதிர் தன்மையை தனக்குள் பொதிந்து வைத்திருக்கிறது.இதனை நாம் உணரும் போது மொ ட்டைக்கும் குடுமிக்கும் நடுவில் கிராப் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
6.இந்த மன நிலையே ஒவ்வொரு விசயத்திலும் நமக்கு வெற்றி என்பதை தேடிக் கொடுக்கும்,வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் பலரும் தெரிந்தோ தெரியாமலோ இந்த கிராப் மன நிலையை கற்று வைத்திருக்கிறார்கள் நாம் வாயைப் பிளக்கும் அளவிற்கு வெற்றி பெறுகிறார்கள் ,நாமும் மற்றவர்களை வாயை பிளக்க வைப்போமா?
No comments:
Post a Comment