Wednesday, January 1, 2014

சுய கருத்தேற்றம்

சுய கருத்தேற்றம் 

1.நமது மனங்களில் இடையராது எண்ணங்கள் தோன்றி  ஒடிக் கொண்டே இருக்கின்றது.அவற்றில் சில எண்ணங்கள் வேர் பிடித்து மனதில் தாக்கங்களை ஏற்படுத்தும் போது ,இவைகள் நமக்கு வேண்டாத எண்ணங்கள் .இந்த எண்ணங்களை எப்படி மனதில் தாக்கம் ஏற்படுத்தாமல் இருக்கச் செய்வது என்று எப்பொழுதாவது நீங்கள் எண்ணியதுண்டா?
இடையறாது மனதில் எண்னங்கள் அலைகளாகத் தோன்றினாலும் எல்லா எண்னங்களும் மனதில்  தாக்கங்கள் ஏற்படுத்துவதில்லை.
                                                                                                                                
2.ஒருமுறை குழந்தைகளுக்கு தாவரங்கள் எப்படி முளைக்கின்றன என்பது பற்றி செயல் விளக்கம் கொடுக்க பல தாணியங்களை வாங்கி ஒரு தொட்டியில் போட்டு ஒருவர் விளைய வைத்தார்.அப்பொழுது அவரையும் அறியாமல் பல தாணிய விதைகள் அருகே கொட்டி விட்டது.அது கோடை காலம் ,பின்பு பல மாதங்கள் கழித்து மழைக் காலம் வந்தது ,ஒரு நாள் அவர் பார்த்த பொழுது பல மாதங்களுக்கு முன்பு கொட்டிய தாணிய விதைகள் அங்கு முளைத்து செடியாக இருந்தது.

3.இப்படித்தான் நமது மனங்களில் தோன்றும் பல எண்ணங்கள் சரியான காலத்திற்காக காத்திருக்கின்றன முளைவிட.நாம் பல மாதங்கள் கழித்து பார்த்த அந்த நபரைப் போல பார்த்தால்,நாம் கொட்டிய விதைகள் தானே என்று தெரிய வரும்.ஆனால் கொட்டியதை மறந்து போயிருந்தால் இந்த செடிகள் எப்படி முளைத்தன என்று ஆச்சரியத்தைக் கொடுக்கலாம்.

4.இப்படித்தான் பல எண்ண முளைகள் நமது மனங்களில் முளைத்துக் கிடக்கின்றன.அவைகள் காடாகும் பொழுது நாம் செல்லும் பாதைகளில் குழப்பங்கள் ஏற்படுகின்றன.இதனை சீர் செய்யத்தான் சுய கருத்தேற்றம் என்னும் முறை பயன் படுகின்றது.மனதில் ஏற்கனவே முளை விட்ட எண்ணங்களை நமக்குத் தேவையற்றது என்று எண்ணும்  பொழுது அவைகள் தானாகவே மறைந்து விடுவதில்லை.

5.ஒரு களை எடுப்புத் தேவைப் படுகின்றது .அதே போல நமக்குத் தேவையான தாணியங்கள் எனப்படும் எண்ணங்களை முளைக்கச் செய்ய  ஒரு மழைக் காலம் வரை காத்திருக்க வேண்டியிருக்கின்றது.இந்த முளைப்பையும் விதைப்பையும் நமது கட்டுப் பாட்டில் கொண்டுவர சுய கருத்தேற்றம் உதவுகின்றது.
                      
சுய கருத்தேற்றம் என்றால் நமக்கு தேவையான  எண்னங்களை மட்டும் விதைத்து முளைவிடச்செய்வது.இப்பொழுது உங்கள் வாழ்வில் நீங்கள் ஒரு பெரிய பணக்காரராக வேண்டும்,இல்லையென்றால் சிறந்த கல்விமானாக வேண்டும் இப்படி எத்தனையோ ஆசைகள் இருக்கலாம்.

அதே போல நம்மை தொல்லை செய்யும் கோபம்,பயம் ,எரிச்சல்,போன்ற எண்ணங்களின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

இந்த விருப்பங்களை  சுய கருத்தேற்றங்கள் மூலம் எளிதில் அடையலாம்.அதற்கு சுய கருத்தேற்ற வசணங்களை நாம் தயார் செய்ய வேண்டும்.

எடுத்துக் காட்டாக நாம் ஒரு சிறந்த கல்வியாளராக வேண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள் அதற்கு பின் வருமாறு சுய கருத்தேற்ற வசணங்களை உருவாக்கலாம்.

1.நான் ஒரு சிறந்த கல்வியாளன் .

2.சிறந்த கல்வியாளராக இருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

3.சிறந்த கல்வியாளராக நான் அனைத்து முயற்சிகளையும் மகிழ்ச்சியாக மேற்கொள்ளுகின்றேன்.
4.ஒவ்வொரு நாளும் சிறந்த கல்வியாளராக வளர்ந்து கொண்டே இருக்கின்றேன்.

இப்படி உங்கள் மனம் எந்த வசணத்தை கேட்டால் உற்சாகம் அடைகின்றதோ அப்படிப்பட்ட வசனங்களை யோசித்து தேர்ந்தெடுங்கள் .வசணங்கள் எதிர் உணர்வுகளை உண்டாக்காதவாறு இருக்க வேண்டும் .உங்கள் மனம் ஏற்கும் படி உள்ள அளவில் வசண வார்த்தைகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

இந்த வசணங்களை காலை துயில் எழும் போதும் இரவு தூங்கும் பொழுதும் வாய்விட்டு உணர்ச்சியுடன் சொல்லுங்கள் .உணர்ச்சியற்ற வசணங்களை மனம் ஏற்காது .எவ்வளவு தூரம் உணர்ச்சியின் அழுத்தம் இருக்கின்றதோ அவ்வளவு தூரம் நாம் நமது விருப்பங்களை நெருங்கும் கால அளவு குறையும்.

இதே போல வேண்டாத மன உணர்வுகளை நீக்கவும் தகுந்த வசணங்களை நீங்களாகவே உருவாக்குங்கள் .ஒவ்வொரு தனி மனிதருக்கும் தனித்தனி வசணங்கள் 

No comments:

Post a Comment